Home /News /lifestyle /

உடல் எடை அதிகரிக்காமல் இருக்க இந்த தேநீரை ட்ரை பண்ணி பாருங்க..

உடல் எடை அதிகரிக்காமல் இருக்க இந்த தேநீரை ட்ரை பண்ணி பாருங்க..

இலவங்கப்பட்டை டீ

இலவங்கப்பட்டை டீ

இரவில் படுக்கைக்கு செல்லும் முன் இலவங்கப்பட்டை டீ குடிப்பது, உடலில் அதிகரிக்கும் கொழுப்பை எதிர்த்து போராட உதவும்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
இனி வரும் மாதங்கள் பண்டிகை காலம் என்பதால் வழக்கமாக நாம் சாப்பிடுவதை விட ஏராளமான பதார்த்தங்களை எடுத்து கொள்வோம். இதனால் உடல் எடை அதிகரிக்க கூடிய நிலை ஏற்படும். இதுநாள் வரை உடலை கட்டுக்கோப்பாக வைக்க டயட்டில் இருந்தவர்கள் கூட, பண்டிகை காலம் என்பதால் பல உணவு வகைகளையும், இனிப்பு பண்டங்களையும் சுவைக்க ஆவலாக இருப்பார்கள். இதனால் இனி வரும் நாட்களில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதையும், ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்வதையும் கடைப்பிடிப்பது பலருக்கு கடினமானதாக இருக்கும்.

பிடித்த உணவு கண்முன்னே இருக்கும் போது அதை சாப்பிடாமலே கடந்து போவது என்பது அனைவராலும் முடியாத காரியம். இதன் காரணமாக பண்டிகை மாதங்களில் உடல் எடை வெகுவாக அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம். அதிர்ஷ்டவசமாக கடினமான முயற்சி ஏதுமின்றி எடை அதிகரிப்பை தடுக்கும் எளிய வழி ஒன்று இருக்கிறது. அது தான் இலவங்கப்பட்டை டீ. இரவில் படுக்கைக்கு செல்லும் முன் இலவங்கப்பட்டை டீ குடிப்பது, உடலில் அதிகரிக்கும் கொழுப்பை எதிர்த்து போராட உதவும்.

ஒரு நறுமண மசாலாவாக நம் உணவுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் இலவங்கப்பட்டையில் மாங்கனீசு, இரும்பு, நார்ச்சத்து, கால்சியம் மற்றும் வைட்டமின் கே உள்ளிட்ட பல சத்துக்கள் இருக்கின்றன.கறிகள் மற்றும் ஸ்மூத்திஸ்களில் அடிக்கடி இலவங்கப்பட்டையை நாம் பயன்படுத்துகிறோம். நறுமண மசாலாவாக மட்டுமில்லாமல் இலவங்கப்பட்டை பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. 

எடை இழப்பில் இலவங்கப்பட்டை டீ-யின் பங்கு என்ன?

இலவங்கப்பட்டை டீ-யில் காணப்படும் நிறைந்த ஊட்டச்சத்துக்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. பல நேரங்களில், ஒரு நபரின் இன்சுலின் எதிர்ப்பு சக்தியாக மாறும்போது, சர்க்கரை வளர்சிதையாக மாற்றமடையாமல் அது கொழுப்பாக மாற்றப்படுகிறது. ஆனால் இலவங்கப்பட்டையை டீ வடிவில் எடுத்து கொள்ளும் போது, அது இன்சுலினைத் தூண்டவும், உட்கொண்ட உணவுகளிலிருந்து சர்க்கரையை வளர்சிதையாக மாற்றவும் உதவும். தவிர கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும். இதில் அடங்கி இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் கொழுப்பு தேங்கி உடல் வீக்கமடைவதை குறைக்க உதவுகிறது. 

மேலும் செரிமானத்திற்கும், கலோரிகளை எரிக்கவும் உதவுகிறது. உங்களுக்கு தொப்பை விழுவது பற்றிய கவலைகள் இருந்தால் தினசரி தூங்க செல்லும் முன் இலவங்கப்பட்டை டீ குடிக்கலாம். மேற்கூறியபடி ரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்தி, வளர்சிதை மாற்றத்திற்கு உதவி, இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தி எடையை இழக்க உதவுகிறது. தினசரி இலவங்கப்பட்டை டீ குடிப்பது எடை அதிகரிப்பை தடுக்கும் மற்றும் சில நேரங்களில் எடையை இழக்கவும் இது உதவலாம். இலவங்கப்பட்டை டீ செய்முறை பற்றி கீழே பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

* தண்ணீர் - 1 கப்
*இலவங்கப்பட்டை பவுடர் - 1 டீஸ்பூன்
* தேன் - 1 டீஸ்பூன்
* கருப்பு மிளகு பவுடர் - 1/4 டீஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன் .

Also Read : பருவமழை காலத்தில் டெங்கு, மலேரியா ஏற்படாமல் தடுப்பது எப்படி?

 

 செய்முறை:

* முதலில் ஒரு கப் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் நீங்கள் எடுத்து வைத்திருக்கும் இலவங்கப்பட்டை பொடி அல்லது இலவங்கப்பட்டை குச்சி, கருப்பு மிளகு பவுடர், தேன் மற்றும் எலுமிச்சை சாறை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

* இந்த கலவை சரியாக கொதித்தவுடன் நன்றாக கிளறி விட வேண்டும். பின்னர் இந்த டீயை வடிகட்டி சூடாக குடிக்கவும்.

தினசரி தூங்க செல்லும் முன் இலவங்கப்பட்டை டீ குடிப்பது உங்கள் சோர்வடைந்த தசைகளை தளர்த்தி, உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பை எரித்து எடையை குறைக்க உதவி செய்யும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Weight loss

அடுத்த செய்தி