Home /News /lifestyle /

உணவே சாப்பிடாமல் உடல் எடையை குறைக்க போறீங்களா..? அப்போ இந்த ஸ்மூதி டயட் டிரை பண்ணி பாருங்க...

உணவே சாப்பிடாமல் உடல் எடையை குறைக்க போறீங்களா..? அப்போ இந்த ஸ்மூதி டயட் டிரை பண்ணி பாருங்க...

ஸ்மூதி

ஸ்மூதி

உடல் எடை குறைப்பதற்கான டயட்டில் உள்ளவர்கள் காலை அல்லது மதிய உணவுக்கு வாழை பழ ரைஸ் ஸ்மூத்தியை தேர்வு செய்யலாம். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்தோடு பசியை ஏற்படுத்தாது.

அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஹெல்தியான ஸ்மூத்திகள் உங்களை எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் டயட்டில் உள்ளவர்களுக்கு நேரத்தை மிச்சப்படுத்திக்கொடுக்கும் உணவாகவும் பழ ஸ்மூத்திகள் உள்ளன.

உடல் எடையை குறைக்க வேண்டும் என்பவர்கள் தேர்வு செய்யக்கூடிய பொதுவான நடைமுறை தான் டயட். காலை, மதியம் மற்றும் இரவில் அதிக கலோரிகள் இல்லாத உணவுகளைத் தான் நாம் சாப்பிட வேண்டும் என்று நினைப்போம். ஆனால் நிச்சயம் நம்மில் பலரால் முழுமையான டயட் எடுத்துக்கொள்ள முடியாது. எனவே இது போன்றவர்களாக நீங்கள் இருந்தால் கவலைப்பட வேண்டாம். அதிக ஊட்டச்சத்துக்களுடன், எளிதில் தயார் செய்யக்கூடிய பானங்களில் ஒன்றாக ஸ்மூத்தியை நீங்கள் தேர்வு செய்யலாம்.

இவற்றில் குறைவாக கலோரிகள் உள்ளதோடு, விரைவில் பசி உணர்வையும் ஏற்படுத்தாது. இதோடு புரதம், நார்ச்சத்துக்கள், அத்தியாவசிய வைட்டமின்கள் அனைத்தும் இடம் பெற்றுள்ளதால் உடல் எடையை குறைக்க நினைப்போர் தாராளமாக இதனை தேர்வு செய்யலாம். எனவே இந்நேரத்தில் பழங்கள், காய்கறிகள், நட்ஸ் கொண்டு தயாரிக்கப்படும் ஆரோக்கியமான டயட் ஸ்மூத்திகள் மற்றும் உணவு முறை குறித்து இங்கே அறிந்து கொள்வோம்.,

ஆரோக்கியமான ஸ்மூத்திகளின் லிஸ்ட் மற்றும் செய்முறை:

பெர்ரி ஸ்மூத்தி:

முதலில் ஸ்டார்பெர்ரி, ப்ளூபெர்ரி போன்றவற்றில் ஏதாவது ஒன்றை ஒரு கப் எடுத்து கொள்ள வேண்டும்.

பின்னர் அரை கப் பசலை கீரை, ஒரு தேக்கரண்டி பாதாம் வெண்ணெய், 2 ஸ்பூன் வெண்ணிலா தூள், ஒரு தேக்கரண்டி ஓட்ஸ் மற்றும் ஒரு கப் தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும்.

பின்னர் மேற்கண்ட அனைத்தையும் கலக்கிக்கொள்ள வேண்டும். இப்போது ஆரோக்கியமான பெர்ரி ஸ்மூத்தி ரெடியாகிவிட்டது. இனி ஒரு டம்ளரில் ஊற்றி பருகலாம்.



வாழை ரைஸ் ஸ்மூத்தி:

உடல் எடை குறைப்பதற்கான டயட்டில் உள்ளவர்கள் காலை அல்லது மதிய உணவுக்கு வாழை பழ ரைஸ் ஸ்மூத்தியை தேர்வு செய்யலாம். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்தோடு பசியை ஏற்படுத்தாது. எனவே தேவையற்ற கலோரிகளை அதாவது தேவையில்லாமல் எந்தவொரு ஸ்நாக்ஸ்கள் அல்லது உணவுகளை நீங்கள் எடுத்து கொள்ள நேரிடாது.

ஈஸியா உடல் எடையை குறைப்பதற்கு 7 விதமான ரைதா ரெசிஃபிக்கள் இதோ!

இந்த ஸ்மூத்தியை செய்வதற்கு முதலில், நீங்கள் அரை கப் கலந்த பெர்ரி, ஒரு தேக்கரண்டி தேங்காய் பால், ஒரு கப் வேகவைத்த அரிசி, ஒரு தேக்கரண்டி சியா விதைகள் மற்றும் ஒரு வாழைப்பழத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் மேற்கண்ட அனைத்தையும் பிளெண்டரை பயன்படுத்தி சுமார் 30 முதல் 40 வினாடிகள் கலக்கிக்கொள்ள வேண்டும். தற்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான ஸ்மூத்தி ரெடியாகி விட்டது.



கீரை ஸ்மூத்தி:

உடல் எடையை குறைப்பதற்கு சிறந்த வெஜிடபிள் ஸ்மூத்தியாக கீரை ஸ்மூத்தி உள்ளது. இதனை தயார் செய்வதற்கு முதலில், அரை கப் துருவிய பனீர், இரண்டு தேக்கரண்டி புரோட்டீன் பவுடர், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கப் கீரை, அரை கப் தண்ணீர் மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் ஆகியவற்றை எடுத்து கொள்ள வேண்டும்.

உடற்பயிற்சி செய்வதற்கு முன்னதாக உப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் இருக்கா? இது தெரியாம போச்சே..

பின்னர் தேவையான அளவு ஐஸ் கட்டிகளை சேர்த்து ப்ளெண்டரில் சுமார் 1 நிமிடம் அனைத்துப்பொருள்களையும் சேர்த்து கலக்கினால் போதும் சுவையான மற்றும் ஆரோக்கியமான கீரை ஸ்மூத்தி ரெடியாகிவிட்டது.

ஆப்பிள் ஸ்மூத்தி:

இந்த ஆரோக்கியமான ஸ்மூத்தியை நாம் டயட்டில் சேர்த்துக்கொள்ளும் போது, நீண்ட நேரம் பசி உணர்வே நமக்கு ஏற்படாது. அதோடு ஆரோக்கியமாகவும் நாம் இருக்க நேரிடும். இதோ ஆப்பிள் ஸ்மூத்தி செய்யும் முறை..



முதலில், தோல் சீவி நறுக்கிய ஆப்பிள் துண்டுகள், சோயா பால், முந்திரி பவுடர், சியா விதைகள் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் தேவையான அளவு ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். தற்போது ஆரோக்கியமான மற்றும் சுவையான ஆப்பிள் ஸ்மூத்தி ரெடியாகிவிட்டது. இதில் அதிகளவில் நார்ச்சத்துகள் உள்ளதால் உடல் செரிமானத்திற்கு உதவியாக உள்ளது. மேலும் வைட்டமின் சி மற்றும் ஆன்டி- ஆக்ஸிடன்டுகளும் உள்ளது.

மேலும் அன்னாச்சிப்பழம் , தேங்காய் பால், வாழைப்பழம், துளசி இலைகள் போன்றவற்றை சேர்ந்து ஸ்மூத்தி ரெடி பண்ணலாம். மேற்கண்ட அனைத்தும் உங்களின் உடல் நலத்திற்கும், உடல் எடையை குறைப்பிற்கும் நிச்சயம் உதவியாக இருக்கும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Smoothie, Weight loss

அடுத்த செய்தி