• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • உடல் எடையை குறைக்க உதவும் சீரக தண்ணீர் - எப்படி குடிப்பது?

உடல் எடையை குறைக்க உதவும் சீரக தண்ணீர் - எப்படி குடிப்பது?

சீரக தண்ணீர்

சீரக தண்ணீர்

சீரகம் மட்டும் உங்கள் எடையைக் குறைக்கும் வேலையை செய்யாது. சரியான உணவு முறையை பின்பற்றுவதிலிருந்து, கலோரிகளை எரிக்க உதவும்.

  • Share this:
நம் அனைவரது வீட்டு கிச்சனிலும் தவறாமல் இடம் பெற்றிருக்கும் முக்கியமான ஒரு பொருள் சீரகம். இது உணவுகளுக்கு தேவையான மசாலா தயாரிக்க மட்டும் பயன்படும் மூலிகையாக இல்லாமல் நுரையீரல் மற்றும் கல்லீரல் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளை குணப்படுத்த கூடியது. உடலில் உள்ள நச்சுகளை நீக்கி சரும ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது. மேலும் செரிமானத்திற்கு உதவி நெஞ்செரிச்சல் போன்ற உபாதைகளை குணப்படுத்த கூடிய சீரகம் எடை குறைப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

உடை எடையை குறைக்க விரும்புவோருக்கு சீரக தண்ணீரை குடிப்பதை விட மிக சிறந்த எளிய வழி எதுவுமில்லை. சீரகம் உடலில் உள்ள தளர்வான கொழுப்பு சதைகளை கரைக்க வல்லது. எடை குறைய விரும்புவோர் தங்கள் உணவில் ஜீரகம் சேர்த்து கொள்வதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, ஜீரணத்திற்கு உதவுவதிலும், நமது உடல் அமைப்பிலிருந்து தேவையற்ற நச்சுகளை அகற்றுவதிலும் சீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது.

உடலில் உள்ள செரிமான அமைப்பை பிரச்சனையில்லாமல், நச்சுகள் இன்றி சரியாக வைத்திருப்பது சரியான உடல் எடையை பராமரிப்பதற்கும் , தேவையற்ற கொழுப்பு இழப்புக்கும் முக்கியமான ஒன்றாகும். எனவே அன்றாடம் சீரகம் எடுத்து கொள்வதை வழக்கமாக்கினால் எடை அதிகரிப்பு தொடர்பான காரணிகளை நிர்வகிக்க அது உதவும். சீரகமானது உடலிலுள்ள கொழுப்புகளை விரைவாக கரைக்கும் தன்மை உடையது என்பதால், எடையை குறைக்க விரும்பும் ஒரு நபரின் முயற்சியை எளிதாக்கும்.

சீரகத்தை தண்ணீரில் ஊற வைக்கும் போது சவ்வூடுபரவல் ஏற்படுகிறது. இந்த இயற்கையான செயல்முறையின் மூலம் சீரக விதைகள் தண்ணீரை தக்க வைத்து கொள்கின்றன. சீரகத்திலிருக்கும் ஊட்டச்சத்துக்கள் தண்ணீரில் கலக்கின்றது. சீரகத்திலிருந்து வெளி வந்த ஊட்டச்சத்து தண்ணீரில் மஞ்சள் நிறத்தில் கலந்து விடுகிறது. சீரக தண்ணீர் மிக குறைந்த கலோரி உள்ள பானம். இதில் ஏராளமான நன்மைகள் உள்ளன. காலை வெறும் வயிற்றில் அல்லது உணவிற்கு முன் சீரக தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமற்ற ஒன்றை சாப்பிடுவதை தடுக்கலாம்.

சத்தான சுகாதார நன்மைகள் நிறைந்த ஒரு சிறந்த பானம் என்பதால், தேவைப்படும் பட்சத்தில் பல முறை சீரக தண்ணீரை அருந்தலாம், தவறில்லை என்கிறார்கள் நிபுணர்கள். இருப்பினும், நீங்கள் எத்தனை முறை குடிக்க வேண்டும் என்பது உங்கள் குறிக்கோள் மற்றும் தேவைகள் என்ன என்பதைப் பொறுத்தது. விரைவான எடை இழப்புக்கு, சீரக தண்ணீரை ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை குடிக்கலாம். காலை வெறும் வயிற்றில், மதியம் ஹெவியாக சாப்பிடுவதை தவிர்க்க மற்றும் இரவு உணவிற்குப் பின் (செரிமானத்திற்காக) பருகலாம்.

சீரக நீரில் இலவங்கப்பட்டை தூள் சேர்த்து குடித்தால் எடை குறைப்பிற்கு இன்னும் அதிக உதவும். ஒரு தேக்கரண்டி சீரகத்தை எடுத்து ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவே ஊறவைத்து விட்டு அடுத்த நாள் காலை முதல் இரவு வரை கூட பருகலாம். வெந்தயம் மற்றும் சீரகம் இரண்டையுமே தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து அதை வடிகட்டி குடித்து வந்தால் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு பிரச்சினைகள், செரிமான பிரச்சனை உள்ளிட்ட பல கோளாறுகளை சரி செய்யும். சீரகம் மட்டும் உங்கள் எடையைக் குறைக்கும் வேலையை செய்யாது. சரியான உணவு முறையை பின்பற்றுவதிலிருந்து, கலோரிகளை எரிக்க உதவும் உடல் பயிற்சிகள் வரை அனைத்தையும் பின்பற்றி கூடவே சீராக தண்ணீரை குடிப்பது மிக நல்ல பலனை கொடுக்கும் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Shalini C
First published: