• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • Weight Loss Tips : குளிர்காலத்தில் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்..

Weight Loss Tips : குளிர்காலத்தில் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்..

காட்சி படம்

காட்சி படம்

How To Los Fat in Winter Season : குளிர்காலத்தில் சோம்பேறித்தனமாக உணர்பவர்கள் இப்படி செய்து உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ளுங்கள்..

  • Share this:
    உடல் எடையை குறைப்பது ஒரு சாதாரண விஷயம் இல்லை, குறிப்பாக குளிர்காலத்தில் உடல் எடையை குறைக்க முயற்சி செய்வது ஒரு சவாலான ஒன்றே. குளிர்காலத்தில் அதிகாலையில் எழுந்து ஜாக்கிங் செல்வது, உடற்பயிற்சி செய்வது கடினமானது, மேலும் இத்தகைய காலத்தில் குறைவான அளவே தண்ணீர் குடிக்கிறோம்.

    சூரிய ஒளி குறைவதால் நம் உடலுக்கு குறைந்த அளவே வைட்டமின் டி கிடைக்கிறது இந்த காரணங்களால் தான் குளிர்கால உடல் எடை குறைப்பு கடினமாக இருக்கிறது. இதனால் நாம் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை பராமரித்து கட்டுக்கோப்பாக இருப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இந்த சிக்கலில் இருந்து மீண்டு வர உங்கள் தினசரி உணவில் சில மாற்றங்களை செய்வது நல்ல பலனை தரும்.குளிர்காலத்தில் உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள் குறித்து இங்கு காண்போம்.

    போதுமான தண்ணீர் அருந்துங்கள் : ஆரோக்கியமாக இருக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும் உங்களை நீரேற்றமாக வைத்து கொள்வது அவசியம். குளிர்காலத்தில் தண்ணீருக்கு பெரும்பாலும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. ஆனால் குளிர்காலங்களிலும் உங்களை நீரேற்றமாக வைத்து கொள்வது அவசியமான ஒன்றாகும். தினமும் போதுமான தண்ணீரை எடுத்துக்கொள்ளாவிட்டால் பசி அதிகரிக்கும், மேலும் உடலின் கொழுப்பு எரியும் திறன் குறைந்து உடல் எடை அதிகரிக்கும். சீரான நேர இடைவெளியில் குறைந்தது தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது உங்கள் உடலில் கொழுப்பு சேர்க்கையை கரைக்க உதவுகிறது.

    மேலும் நம் உடலில் இரத்த ஓட்டத்தை தூண்டுகிறது. தண்ணீர் அருந்துவது தேநீர் மற்றும் காபி உட்கொள்ளலைக் குறைக்க இது ஒரு சிறந்த வழியாகும். சாதாரண தண்ணீரை குடிக்க கடினமாக இருந்தால், வெதுவெதுப்பான தண்ணீரில் சில துளி எலுமிச்சை சாறு, சிறிது அரைத்த இஞ்சி மற்றும் ஒரு சில புதினா இலைகள் சேர்த்து பருகவும்.

    also read : உடலுக்கு நன்மை தரும் கருப்பு கவுனி அரிசி.. நீங்களும் சாப்பிடலாம்..

    உடற்பயிற்சி செய்யுங்கள் : இந்த குளிர்காலத்தில் காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்வது கடினமான ஒன்றாகும். ஏற்கனவே கொரோனா ஊரடங்கு காலத்தால் ஜிம்கள் மூடி இருந்ததால் உடற்பயிற்சி செய்ய முடியாத நிலை இருந்தது. குளிர்காலத்தில் காலையில் ஒரு கப் சூடான காபி குடிப்பதை தவிர சிறந்தது எதுவுமில்லை. குளிர்காலத்தில் பெரும்பாலும் நமது உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி இலக்கை தியாகம் செய்ய தயாராக இருக்கிறோம். ஆனால் இது தவறு. உடற்பயிற்சி செய்வதை தவிர்ப்பதால் குறைவான கலோரிகளை எரிக்கிறோம், இதனால் உடல் எடை அதிகரிக்கிறது. குளிர்காலத்தில் ஜிம்மிற்கு செல்வது அல்லது வாக்கிங் செல்வது போன்றவற்றை நீங்கள் விரும்பவில்லை என்றால், சுறுசுறுப்பாக இருக்க வீட்டிலேயே எளிய உடற்பயிற்சி செய்யுங்கள். படிக்கட்டு பயிற்சி மற்றும் நடனம் ஆகியவற்றை மேற்கோள்வது குளிர்காலத்தில் சுறுசுறுப்பாக இருக்க சிறந்த வழிகளாகும்.

    சூப் குடிங்கள் : குளிர்காலத்தில் சூப் ஒரு சுவையான ரெசிபியாகும். பல்வேறு சூப்கள் உள்ள நிலையில் அதன் சுவையாக பிரபலமானது, என்பதால் புறக்கணிக்க கடினமாக உள்ளது. குளிர்காலத்தில் குறைந்த வைட்டமின் டி மற்றும் செரோடோனின் அளவு காரணமாக கார்ப்ஸ் நிறைந்த உணவுகளை நோக்கி ஆர்வம் காட்டுவது அதிகரித்து வருகிறது. நமது சோம்பேறித்தனம் காரணமாக அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுகிறோம், பெரும்பாலும் உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுகிறோம். இவை அனைத்தும் உங்கள் உடல் எடை குறைக்கும் முயற்சிக்கு தடையாக உள்ளது. உங்கள் உணவில் காளான் போன்ற வைட்டமின் டி, பால், சால்மன், முட்டை மற்றும் செரோடோனின் நிறைந்த உணவுகளை சேர்க்கவும். மேலும் காலிஃபிளவர் மற்றும் இனிப்பு உருளைக்கிழங்கு போன்ற கார்ப்ஸின் ஆரோக்கியமான காய்கறிகளையும் சேர்த்து கொள்வது நல்லது.

    காற்றோட்டமாக இருங்கள் : வீட்டிற்குள்ளே அடைந்திருக்காமல் அவ்வப்போது காற்றோட்டமாக செல்வது நல்லது. ஒரே இடத்தில் இருப்பது உங்கள் மனநிலையையும், உங்கள் உணவுப் பழக்கத்தையும் பாதிக்கும். பொதுவாக நாம் சோர்வாகவோ, மன அழுத்தமாகவோ உணரும்போது, ஆரோக்கியமற்ற மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை தேடுகிறோம். இந்த சிக்கலை சமாளிக்க, வெளியில் சிறிது நேரம் செலவழித்து உங்களை உற்சாகப்படுத்தும் விஷயங்களை செய்யுங்கள். அந்த நேரத்தில் வாழைப்பழங்கள், பெர்ரி, ஓட்ஸ் மற்றும் டார்க் சாக்லேட் போன்ற உணவுகளையும் நீங்கள் சாப்பிடலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: