கருப்பையில் நீர்க்கட்டிகளா..? இந்த வாழ்க்கை முறையை பின்பற்றினால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்..!

இந்தப் பெண்களின் செல்கள் இன்சுலின் அளவை சரியாக சுரப்பதில்லை என்கின்றனர்.

கருப்பையில் நீர்க்கட்டிகளா..? இந்த வாழ்க்கை முறையை பின்பற்றினால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்..!
மாதிரி படம்
  • Share this:
உலக அளவில் 70% பெண்கள் கர்ப்பப்பையில் நீர்க்கட்டி (PCOS) பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது இந்தப் பெண்களின் செல்கள் இன்சுலின் அளவை சரியாக சுரப்பதில்லை என்கின்றனர். இதில் சில பெண்கள் தங்களுக்கு நீர்க்கட்டி இருப்பதே தெரியாமல் இருப்பதாகவும் கூறுகின்றன.

அறிகுறிகள் என்னென்ன..?

இது முதன்மை அறிகுறிகளாக முறையற்ற மாதவிடாய் , உடல் எடை போன்றவை கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து முகம், கை கால்களில் அதிக முடி வளர்தல், முகப்பருக்கள் , முடி உதிர்தல், வழுக்கை உருவாதல், தோல் கருப்பாக மாறுதல், அடிக்கடி தலைவலி போன்றவை கூறப்படுகிறது. இந்த அறிகுறிகள் உங்களுக்கும் இருந்தால் உடனே மகப்பேறு மருத்துவரிடம் சென்று உரிய சிகிச்சை பெறுதல் நல்லது.


நீர்க்கட்டி வந்தால் உடல் நலத்தில் என்ன பாதிப்பு உண்டாகும்..?

குழந்தை கருவுருவதில் சிரமம் உண்டாகலாம். இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து சர்க்கரை நோய் வரலாம். இரத்தக் கொதிப்பு, மூச்சுவிடுவதில் சிரமம், குறட்டை விடுதல், புற்றுநோய் , மன அழுத்தம் போன்ற பிரச்னைகளை உடலளவில் நீங்கள் சந்திக்க நேரிடும்.

தீர்வு என்ன..?

என்னதான் இந்த நீர் கட்டிக்கு மாத்திரைகள் இருந்தாலும் உங்களின் முறையான வாழ்க்கைதான் இந்த பிரச்னைக்கான நிரந்தர தீர்வு. எனவே எப்படி உங்களின் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

முதலில் உங்கள் உடல் எடையைக் குறைப்பதே முக்கிய முதல் நோக்கமாக இருக்க வேண்டும். ஏனெனில் 5 - 10% உடல் எடையைக் குறைத்தாலே உங்களின் மாதவிடாய் சீராக இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். உடல் எடைக் குறைவதோடு கொழுப்புச் சத்தும் கரையும். இன்சுலின் அளவு குரையும், இதய நோய், சர்க்கரை நோய் ஆபத்துகளும் இருக்காது.

கார்போஹைட்ரேட் உணவுகளை குறைத்துகொள்ளுதல் நல்லது. காய்கறிகள், பழங்கள் அதிகம் சாப்பிடுங்கள்.

தாய்ப்பால் கட்டிக்கொண்டு கடுமையான வலியால் அவதிப்படுகிறீர்களா? அதற்கு இந்த வைத்தியம் தான் பெஸ்ட்..!

தினசரி ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள். இதுவும் உங்கள் உடல் எடையைக் குறைப்பதற்கான மற்றொரு வழியாகும்.

தண்ணீர் அதிகம் குடியுங்கள்.

இவற்றை முறையாக செய்து வந்தாலே மாதவிடாய் பிரச்னை இல்லாமல் சீராக இருக்கும். மருத்துவரின் அறிவுரைகளை கவனமாகப் பின்பற்றுங்கள்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, http://tamilcms.news18.com/wp-admin/post.php?post=242571&action=edit
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

பார்க்க:

 
First published: May 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading