Home /News /lifestyle /

நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை...

நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை...

நரம்பு மண்டல ஆரோக்கியம்

நரம்பு மண்டல ஆரோக்கியம்

நரம்பு மண்டலத்தை தீவிரமாக ஆய்வு செய்து, இந்த அமைப்பு ஒரு அலாரம் சிஸ்டம் போல செயல்படுவதைக் கண்டறிந்துள்ளார். அதாவது இது மன அழுத்த ஹார்மோன்களை செயல்படுத்துகிறது, மற்றும் குறிப்பிட்ட சூழ்நிலையிலிருந்து தப்பிக்க உதவுகிறது

நமது உடலில் உள்ள நரம்பு மண்டலம் எப்போதெல்லாம் ஒரு அச்சுறுத்தலைக் கண்டறிகிறதோ அப்போதெல்லாம் அதற்கு எதிராக சிம்பதெடிக் நரம்பு மண்டலத்தை (Sympathetic nervous system - SNS) இயக்கும்.

குறிப்பிட்ட அச்சுறுத்தல் அல்லது மன அழுத்தம் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் பட்சத்தில், சிம்பதெடிக் நரம்பு மண்டலமானது ஒரு மிகையான நிலையிலேயே இருக்கும். இதனால் நமது உடலில் எப்பொழுதுமே பைஃட்-ஆர்-பிளையிஃட் ரெஸ்பான்ஸ் இருக்கும்.

அதாவது நாம் உணரும் ஒரு தீங்கு விளைவிக்கும் நிகழ்வு, தாக்குதல் அல்லது உயிர்வாழ்வதற்கான அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கும் வகையில் ஏற்படும் உடலின் எதிர்வினையே பைஃட்-ஆர்-பிளையிஃட் ரெஸ்பான்ஸ் ஆகும்.

இவ்வாறு ஏற்படும் சிம்பதெடிக் நரம்பு மண்டலத்தின் (SNS) அதிகப்படியான செயல்பாடு நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானதும் கூட. 

உளவியலாளரும் எழுத்தாளருமான டாக்டர். நிக்கோல் லெபெரா தனது இன்ஸ்டாகிராம் பதிவொன்றில் குறிப்பிட்ட நிகழ்வை விளக்குகிறார். அப்பதிவின் தலைப்பின் வாயிலாக, ஒரு மருத்துவ உளவியலாளராக இதன் மூல காரணத்தைக் கண்டுபிடிப்பதை விட, இதன் அறிகுறிகளைக் கண்டறிய பயிற்சி பெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.

டாக்டர் நிக்கோல், நரம்பு மண்டலத்தை தீவிரமாக ஆய்வு செய்து, இந்த அமைப்பு ஒரு அலாரம் சிஸ்டம் போல செயல்படுவதைக் கண்டறிந்துள்ளார். அதாவது இது மன அழுத்த ஹார்மோன்களை செயல்படுத்துகிறது, மற்றும் குறிப்பிட்ட சூழ்நிலையிலிருந்து தப்பிக்க உதவுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், மன அழுத்த ஹார்மோன்கள் சிலரின் இரத்த ஓட்டத்தில் நிலையானதாக இருப்பதாகவும் விவரித்துள்ளார். இதன் விளைவாக கவனச்சிதறல் மற்றும் நினைவாற்றல் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதுபற்றி டாக்டர். நிக்கோல் மேலும் விளக்கமளிக்கையில், நம் உடலும் மனமும் நீண்ட காலத்திற்கு மன அழுத்தத்தில் சிக்கித் தவிக்கும் போது, ​​நாம் உயிர்பிழைப்பதற்கான தீவிரமான செயல்முறைக்குள் நுழைகிறோம். இதன் காரணமாக, நமது நரம்பு மண்டலம் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கு நம்மை தயார்படுத்துகிறது. அது உண்மையான அறிகுறியாகவும் இருக்கலாம் அல்லது நம்மால் உணரப்பட்ட அறிகுறியாகவும் இருக்கலாம். நமது இரத்த ஓட்டத்தில் கார்டிசோல், அட்ரினலின் போன்ற ஹார்மோன்களை வெளியிடுகிறது.

நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 8 உணவுகள் : தவறாமல் சாப்பிடுங்க...

அறிகுறிகள்

டாக்டர். நிக்கோலின் கூற்றுப்படி, அதிகப்படியான சிம்பதெடிக் நெர்வஸ் சிஸ்டத்தின் அறிகுறிகள் - கவலை, பீதி, மனச்சோர்வு, செரிமான பிரச்சினைகள், சோர்வு, நினைவாற்றல் பிரச்சினைகள் ஆகியவை அடங்கும். மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் எல்லாமே நமது சிம்பதெடிக் நெர்வஸ் சிஸ்டம் செயல்பட்டு கொண்டிருப்பதன் விளைவே ஆகும்.

இவ்வகை பாதிப்பிலிருந்து குணமடைவது எப்படி?

இந்தப் பிரச்சனையிலிருந்து குணமடைய நமது உடலுக்கு பாராசிம்பதெடிக் நரம்பு மண்டலத்தின் உதவி தேவைப்படும், இதை ஓய்வு மற்றும் செரிமான நிலை என்றும் கூறலாம். இங்கே குறிப்பிடப்பட்டுள்ள உடலின் ஓய்வு மற்றும் செரிமான நிலைக்கான பொறுப்பை எடுத்துக்கொள்வது பாராசிம்பதெடிக் நரம்பு மண்டலமே ஆகும். இந்த அமைப்பு சுவாசம் மற்றும் இதயத் துடிப்பை அதிகரித்து செரிமானத்தை மேம்படுத்துகிறது.இதை செயல்படுத்த டாக்டர். நிக்கோல் சில குறிப்புகளை பட்டியலிடுகிறார்.

பின்வரும் பழக்கவழக்கத்தை மேற்கொண்டால் நமது உடலில் பாராசிம்பதெடிக் நரம்பு மண்டலத்தை பெறுவதற்கான முயற்சிகளை அடையலாம்.

1. நன்றாக தூங்கப் பழகுங்கள்
2. தினமும் ஆழமான சுவாசப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள்
3. மனம் / உடலுக்கான இயக்கம்: இதற்காக யோகா, டாய் சி, குத்துச்சண்டை போன்றவைகளை பழகலாம்.
4. இயற்கையான வெளியிடங்கள் அல்லது அமைதியான இடத்தில் இருத்தல்
5. ஊட்டச்சத்து உணவுகள் (ஊட்டச்சத்து குறைபாடுகள் நரம்பு மண்டலத்தின் சீர்குலைவிற்கு வழிவகுக்கும்)
6. விரும்பத்தகாத / முறிந்துபோன உறவுகளுக்கு எல்லைகளை உருவாக்குங்கள்

மனநலம் தான் முக்கியம் என்பதை நமது நரம்பு மண்டலம் புரிந்துக்கொள்ளும் வரை, நாம் அறிகுறிகளை அடக்கிக்கொண்டே இருப்போம்.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Bone, Bone health, Health, Mental Stress

அடுத்த செய்தி