Home /News /lifestyle /

ஒரு பேனா இருந்தால் போதும் உங்கள் கண்களின் ஆரோக்கியத்திற்கு கியாரண்டி..!

ஒரு பேனா இருந்தால் போதும் உங்கள் கண்களின் ஆரோக்கியத்திற்கு கியாரண்டி..!

 கண் பார்வை திறன்

கண் பார்வை திறன்

நல்ல ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்வதன் மூலம் மற்றும் தினமும் சில எளிய பயிற்சிகளை செய்வதன் மூலமும் கண் பார்வை திறன் குறையும் செயல்முறையை தாமதப்படுத்தலாம். பார்வை திறனை மேம்பட செய்வதற்கு உங்களது ஒரு பேனாவே போதுமானது.

நமது பார்வை திறன் வயதுக்கேற்ப காலப்போக்கில் மோசமடைவது இயற்கை என்றாலும், எந்நேரமும் ஸ்மார்ட் போன்கள், டிவி, லேப்டாப் என்று எதையாவது பார்த்து கொண்டே இருக்கும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். எனவே கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாத்து கொள்வது மிக முக்கியமான ஒன்று.

நல்ல ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்வதன் மூலம் மற்றும் தினமும் சில எளிய பயிற்சிகளை செய்வதன் மூலமும் கண் பார்வை திறன் குறையும் செயல்முறையை தாமதப்படுத்தலாம். பார்வை திறனை மேம்பட செய்வதற்கு உங்களது ஒரு பேனாவே போதுமானது. வீட்டிலேயே உங்கள் கண் பார்வையை பேனாவை பயன்படுத்தி எப்படி மேம்படுத்துவது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்..

பேனாவை தூரத்தில் பிடித்தபடியே செய்ய வேண்டிய பயிற்சி..

பேனாவை எடுத்து கொண்டு உங்கள் மூக்கிற்கு முன் 35 செமீ தூரம் அல்லது உங்கள் கை நீளும் நீளத்திற்கு இடைவெளி விட்டு பிடித்து கொள்ளுங்கள். இப்போது பேனாவின் ஒரு முனையை கூர்ந்து பார்ப்பதில் கவனம் செலுத்துங்கள். உங்கள் கண்கள் ஒருமுகப்படுத்தப்பட்டு முனையை மட்டும் நீங்கள் பார்க்க துவங்கியவுடன் அதை உங்கள் அருகில் கொண்டு வாருங்கள்.பேனாவின் முனை உங்கள் கண்களுக்கு அருகே வர வர இரண்டாக தெரிவது போல உணர்வீர்கள்.



உடனே பேனாவை நகர்த்தி விடாதீர்கள். மீண்டும் பேனாவை பழைய தொலைவிற்கு எடுத்து சென்று மீண்டும் இதே போல செய்ய தயாராகுங்கள். பேனாவை எடுக்காமல் மீண்டும் செய்ய தயாராகும் கேப்பில் உங்கள் கண்களை சில நொடிகள் ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். இந்த பயிற்சியை ஒவ்வொரு நாளும் 30 முறை வரை செய்யவும். தொடர்ந்து 4 - 5 வாரங்கள் செய்து வந்தால் பார்வை திறனில் முன்னேற்றம் தெரியும்.

கோடைக்காலத்தில் அடிக்கடி ஒற்றை தலைவலி ஏற்படுகிறதா? இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க..

ரிவர்ஸ் டிஸ்டன்ஸ்:

இந்த பயிற்சியில், ஒரு பேனாவை முடிந்தவரை மூக்கிற்கு அருகில் கொண்டு வருவதன் மூலம் செய்ய தொடங்குங்கள். சிலருக்கு இதை செய்யும் போது கண்களில் சிரமம் மற்றும் சோர்வு ஏற்படலாம். ஆனாலும் அந்த பேனா உங்களுக்கு இரண்டாக தெரிய கூடாது. சிங்கிளாக தெரிய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்போது அந்த பேனாவை அதன் பொசிஷனில் ஸ்டேபிளாக வைத்து, மெதுவாக உங்கள் கண்களை கொண்டு தூரத்தில் பாருங்கள். சில நொடிகள் இதன் மூலம் உங்கள் கண்களை ரிலாக்ஸ் செய்யுங்கள். அடுத்து பேனாவை திருப்பி வைத்து பார்க்கவும். அது இப்போதும் சிங்கிளாக தெரிய வேண்டும் மற்றும் 3 வினாடிகள் அப்படியே இருக்க வேண்டும். இதை தினமும் 30 முறை செய்யவும்.

பேனா பயிற்சி மட்டுமின்றி பார்வை திறனை சிறப்பாக்க உங்கள் உள்ளங்கைகளை ஒன்றாக தேய்ப்பதன் மூலம் சூடாக்கவும், பின்னர் 5 வினாடிகள் என ஒரு நாளைக்கு மூன்று முறை உங்கள் கண்களில் சூடான உள்ளங்கைகளை வைக்கவும்.



பார்வை திறனை மேம்படுத்த உதவும் சில டிப்ஸ்கள் கீழே...

* தினசரி பழங்கள், நட்ஸ்கள், முட்டை, பச்சை காய்கறிகள், மீன் போன்றவற்றை சாப்பிடுங்கள்.

* தினமும் போதுமான தூங்குவதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். சிஸ்டம் வொர்க் அதிகம் இருந்தால் ஒவ்வொரு நாளும் குளிர்ச்சியான ஐ பேட்களை பயன்படுத்தி கண்களுக்கு ஓய்வு கொடுங்கள்.

* படிக்கும் போது மங்கலான விளக்குகளை பயன்படுத்த வேண்டாம்.

* ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் உங்கள் கண்களை பரிசோதிக்கவும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Eye care

அடுத்த செய்தி