முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கொரோனா தடுப்பூசி சான்றிதழ் போலியா ஒரிஜினலா கண்டுபிடிப்பது எப்படி?

கொரோனா தடுப்பூசி சான்றிதழ் போலியா ஒரிஜினலா கண்டுபிடிப்பது எப்படி?

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்க CoWIN இணையதளத்தில் உள்ள வசதியை பயன்படுத்தலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இந்தியாவில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  மத்திய மாநில அரசுகள் இதற்காக பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது.  ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக மாநில எல்லைகளில் தீவிர கண்காணிப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மாநிலம் விட்டு மாநிலம் பயணம் மேற்கொள்ளும் நபர்களிடம் கொரோனா சான்றிதழ் விவரங்களை அதிகாரிகள் கேட்கின்றனர். இந்நிலையில் போலி கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களை பயன்படுத்துபவர்கள் தங்கள் உயிரோடு சேர்த்து மற்றவர்களின் உயிரையும் பணயம் வைக்கிறார்கள். இந்தப்பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தடுப்பூசி சான்றிதழ்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்க CoWIN இணையதளத்தில் உள்ள வசதியை பயன்படுத்தலாம்.

சான்றிதழ் போலியா ஒரிஜினலா கண்டுபிடிப்பது எப்படி?

https://www.cowin.gov.in/ என்ற கோவின் இணையதளத்தில் சென்று   PLATFORMS என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். அதில் இருக்கும் Verify certificate என்ற ஆப்ஷனை தேர்வு செய்யலாம். அல்லது நேரடியாக https://verify.cowin.gov.in/ என்ற லிங்க் மூலமாகவும் உள்ளே செல்லலாம்.

Also Read:  கொரோனா தடுப்பூசி சான்றிதழில் செல்போன் எண்ணை மாற்றுவது எப்படி?.. இதோ ஈஸியான வழி!

வெரிஃபிகேஷன் பிரிவுக்கு வந்தவுடன், ‘Scan QR Code’ என்று காட்டும் பச்சை பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இப்போது உங்கள் போன்கேமரா/ லேப்டாப் கேமரா வசதிகளை ஆன் செய்வதற்கு அனுமதி கேட்டும். நீங்கள் அனுமதி கொடுத்தவுடன் கேமரா ஆக்டிவேட் ஆகும்.

இதனையடுத்து தடுப்பூசி சான்றிதழில் கீழே உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும். அந்த சான்றிதழ் உண்மையானதாக இருந்தால் “Certificate successfully” அதாவது சான்றிதழ் வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்டது என தெரிவிக்கும். அதில் உங்கள் பெயர், வயது, எடுத்துக்கொண்ட தடுப்பூசி விவரம் எல்லா தகவல்களும் ஸ்கிரீனில் காட்டும்.போலி சான்றிதழ் என்றால் சான்றிதழ் செல்லாதது எனக் காட்டும். இதன்மூலம் போலி சான்றிதழுடன் சுற்றும் நபர்களை எளிதில் கண்டறியலாம்.

First published:

Tags: Corona, Corona Symptoms, Corona Vaccine, CoronaVirus, CoronaVirus Symptoms, Covid-19, Fake certificate, Omicron