இன்றைக்கு நம்முடைய உணவு மற்றும் வாழ்க்கை முறைகளால் பலவிதமான நோய்கள் ஏற்படுவது என்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. அதில் முக்கியமான உடல் நலப்பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது ஐபிஎஸ் என்படும் குடல் நோய்க்குறி. (Irritable bowel syndrome (IBS).) மலக்குடல் செயல்பாடுகளில் ஏற்படும் பெருங்குடல் குறைபாடு எனவும் இந்நோய் அழைக்கப்பட்டாலும், இதற்கானக் காரணங்கள் எதுவும் சரியாக தெரியவில்லை.
இருந்தப்போதும் மன அழுத்தம், மன நல கோளாறுகள், செரிமானப் பாதையில் பாக்டீரியா தொற்று, சிறுகுடல் பாக்டீரியா வளர்ச்சி மற்றும் உணவு பிரச்சனைகள் போன்றவை ஓர் காரணமாக இருக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
குடல் நோய்க்குறியின் அறிகுறிகள்:
எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி என்பது நாள்பட்ட நோயாக உள்ளது. இது குறிப்பாக பெருங்குடல் செயல்பாட்டை முற்றிலும் பாதிக்கும் என்பதால், மலம் கழிப்பதில் மிகுந்த பிரச்சனையை ஏற்படுத்துவதோடு அதிக வலியையும் பாதிக்கப்பட்டோருக்கு ஏற்படுத்தும். மலம் கழிக்காத உணர்வு, மலத்தில் வெண்மையான சளி வருதல், ஒற்றைத் தலைவலி, தூக்கமின்மை, கவலை மற்றும் மனச்சோர்வு, சோர்வு, தூக்கம், நாள்பட்ட இடுப்பு வலி போன்றவை இந்நோயின் முக்கிய அறிகுறிகளாக உள்ளன.
சிகிச்சைகள்:
ஒரே மாதிரியான சிகிச்சை எதுவும் இல்லை என்றாலும் மக்கள் அடிக்கடி உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இதோடு வேறு என்னென்ன சிகிச்சைகள் மேற்கொள்ளலாம்? என்பது குறித்த சில தகவல்கள் இங்கே
Also Read : உடலளவில் நீங்க எவ்வளவு ஸ்ட்ராங்னு தெரிஞ்சுக்கனுமா..? அதுக்கு இந்த டெஸ்ட் செஞ்சு பாருங்க..!
உணவுமுறை மாற்றங்கள்:
இந்நோய்க்கு உணவு முறை மாற்றம் என்பது முக்கிய பிரச்சனையாக உள்ளது. எனவே இப்பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ஒருவர், ஒரு ஊட்டச்சத்து நிபுணரை அணுகி, உடல் நலத்திற்கு ஏற்றவாறு என்ன உணவுகளை உட்கொள்ள வேண்டும் என அறிந்துக்கொள்ள வேண்டும். இதோடு அதிக நார்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை உங்களது உணவுமுறையில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மேலும் மன அழுத்தம் இந்நோய்க்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். எனவே மன அழுத்தத்திலிருந்து விடுபதற்கு தினமும் நீங்கள் 30 நிமிடங்கள் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் எனவும், நேரத்திற்கு நன்கு தூங்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள்:
இந்நோய் பாதித்தவர்கள் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை சாப்பிட வேண்டும். குறிப்பாக புரோபயாடிக்குகளை நீங்கள் சாப்பிடலாம். இது உங்களது செரிமான மண்டலத்தில் உள்ள நுண்ணுயிரிகளைப் போலவே இருக்கும். இருந்தப்போதும் எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும், எப்போது சாப்பிட வேண்டும் என மருத்துவரின் அறிவுரையின் பேரில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை உங்களது வயிற்றுவலி பிரச்சனைகள் ஏற்பட்டால் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்.இந்நோய் பாதிக்கபட்டால் கடுமையான வயிற்றுவலி , எரிச்சல் போன்றவை ஏற்படும் என்பதால் மருத்துவரின் அறிவுரைகளை உடனடியாக பெறுவது அவசியமான ஒன்று என்பதை நினைவில் வைத்து கொள்ளவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Digestion Problem, Gut Health, Irritable Bowel Syndrome