ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

PCOS உள்ள பெண்கள் கருத்தரிப்பதற்கான வழிகள் என்ன..? உங்களுக்கான கைட்லைன்..!

PCOS உள்ள பெண்கள் கருத்தரிப்பதற்கான வழிகள் என்ன..? உங்களுக்கான கைட்லைன்..!

PCOS-ஆல் பாதிக்கப்பட்டிருக்கும் போது கருத்தரிக்க முடியுமா?

PCOS-ஆல் பாதிக்கப்பட்டிருக்கும் போது கருத்தரிக்க முடியுமா?

PCOS மற்றும் PCOD கோளாறால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் காலங்கள் அல்லது மாதவிடாய் தவறுவது (missed period) மிகவும் பொதுவானது. ஆனால் இது அவர்களால் ஒருபோதும் கர்ப்பமாக முடியாது என்று அர்த்தமில்லை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவில் சுமார் 9%-க்கும் அதிகமான இளம் பெண்களுக்கு PCOS என்ற பிரச்னை காணப்படுகிறது. (PCOS- பி.சி.ஓ.எஸ்) பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் என்பது பெண்களின் இனப்பெருக்க அமைப்பில் குறுக்கிடும் ஒரு ஹார்மோன் நிலை அல்லது இனப்பெருக்கக் கோளாறு ஆகும்.

ஹார்மோன் சமச்சீரில்லாத காரணத்தால் சினைப்பை (ஓவரி) வீக்கம் அடைகிறது. ஒவ்வொரு சினைப்பையிலும் லட்சக்கணக்கான கருமுட்டைகள் இருக்கும். இவற்றில் சில நூறு மட்டுமே முதிர்ச்சயடையும். ஆனால் ஹார்மோன் சமச்சீரில்லாத காரணத்தால், சினைப்பைகள் நீர் கோத்து பெரிதாகிவிடுவதால் முட்டை முதிர்ச்சியடைவது தடைபடுகிறது.

இதனால் மாதவிலக்கு சுழற்சியில் மாறுதல் ஏற்பட்டு அதிகபட்சம் 6 மாதங்கள் வரை கூட மாதவிலக்கு ஏற்படாத நிலை வருகிறது. மேலும் மாதவிலக்கின் போது, அதீத ரத்தப்போக்கு மற்றும் வலி ஏற்படுகிறது. திருமணமான பெண்களுக்கு இந்த PCOS பிரச்சனை காரணமாக கருத்தரித்தலில் சிக்கல் ஏற்படுகிறது. இதன் பொதுவான அறிகுறிகளில் ஒழுங்கற்ற மாதவிடாய் காலங்கள் மற்றும் உடல் பருமன் ஆகியவை அடங்கும். ஒரு பெண்ணிற்கு PCOS இருக்கும் போது கர்ப்பம் தரிக்க முடியுமா, ஆரோக்கியமான கர்ப்பம் பெறுவது எப்படி என்ற சில பொதுவான கேள்விகளுக்கு மருத்துவ நிபுணர்கள் அளித்துள்ள பதில்களை பார்க்கலாம்.

ஒரு பெண் PCOS-ஆல் பாதிக்கப்பட்டிருக்கும் போது கருத்தரிக்க முடியுமா?

PCOS மற்றும் PCOD கோளாறால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் காலங்கள் அல்லது மாதவிடாய் தவறுவது (missed period) மிகவும் பொதுவானது. ஆனால் இது அவர்களால் ஒருபோதும் கர்ப்பமாக முடியாது என்று அர்த்தமில்லை. ஆம், இந்த ஹார்மோன் நிலைமைகளால் அவதிப்படும் போது கர்ப்பம் தரிப்பது சாத்தியமே. இது கொஞ்சம் கடினமாக இருக்கலாம், ஆனால் சாத்தியமற்றது அல்ல என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள். அண்டவிடுப்பின் பிரச்சனைகள் மற்றும் குறைந்த முட்டையின் தரம் ஆகியவை பொதுவானவை. ஆனால் குறிப்பிட்ட கோளாறு உள்ள பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தை சரியான முறையில் கவனிப்பதன் மூலம் கர்ப்பமாக முடியும் என்று கூறுகிறார்கள்.

PCOS ஏன் கருத்தரித்தலில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது?

இந்த கோளாறு உள்ளவர்களுக்கு ஏற்படும் கருவுறாமை கோளாறு அடிப்படையில் 2 காரணங்களால் ஏற்படுகிறது. ஒன்று ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, முட்டையின் தரம். ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக, முட்டையின் தரம் குறைகிறது. இதனால் கர்ப்பம் தரிப்பது கடினம். மற்றொறு காரணம் உடலில் ஆண்ட்ரோஜன் ஹார்மோனின் அளவு அதிகரிப்பு. இது ஒரு ஆண் ஹார்மோன் மற்றும் பெண் உடலில் அதன் அளவு உயர்வு, பல இனப்பெருக்க ஹார்மோன்களை தொந்தரவு செய்யலாம்.

Also Read : உடல் எடை அதிகமாக இருக்கும் பெண்கள்தான் PCOS-ஆல் பாதிக்கப்படுகிறார்களா..? நிபுணர்களின் பதில்..!

PCOS பாதிப்பிற்கு மருந்து சாப்பிடுவது அவசியமா?

நிபுணர்களின் கூற்றுப்படி மிகவும் கடும் பாதிப்பு இருப்பவர்களை தவிர இந்த ஹார்மோன் நிலைமைகளை கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் மருந்துகளை உட்கொள்ள வேண்டியதில்லை. PCOS மற்றும் PCOD ஆகியவை பெரும்பாலும் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களால் ஏற்படுகின்றன. இதை சரி செய்ய சில ஆரோக்கிய மாற்றங்களை செய்தாலே போதும். PCOS பாதிப்புள்ள பெண்கள் கருத்தரிக்க முயற்சிக்கும்போது தங்கள் மருத்துவரை அணுக வேண்டும். உங்கள் காலம் ஒழுங்கற்றதாக இருக்கும்போது, நீங்கள் ஒரு குழந்தையைத் திட்டமிடும்போது மருத்துவரின் ஆலோசனைகள் மிகவும் முக்கியமானது.

PCOS-ஆல் பாதிக்கப்படிருக்கும் போது கர்ப்பமானால் எவ்வாறு நிர்வகிப்பது?

ஹார்மோன் சிக்கல்களை சில வாழ்க்கை முறை மாற்றங்களை செய்வதன் மூலம் எளிதாக நிர்வகிக்க முடியும். ஆரோக்கியமான கர்ப்பத்தை உறுதிப்படுத்த மூன்று விஷயங்களை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

அனைத்து வகையான ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான தாதுக்கள் மற்றும் வைட்டமின்களை பெறுவது இந்த நிலைமைகளின் அறிகுறிகளை கடக்க உதவும்.
ஆரோக்கியத்தை மேம்படுத்த, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது அவசியம்.
கர்ப்பமாக இருக்கும் போது அதிக மன அழுத்தத்தை ஏற்க வேண்டாம். கர்ப்பத்தை பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
First published:

Tags: Infertility, PCOS, Pregnancy Chances