HOME»NEWS»LIFESTYLE»health how to get cure from headache ghta tmn

குளிர்காலத்தில் தலைவலி ஏற்பட காரணம் என்ன?அதிலிருந்து தப்பிக்க இதை செய்யுங்கள்...

குளிர்காலத்தில் ஏற்படும் தலைவலியில் இருந்து தப்பிக்க இதை செய்யுங்கள்.

குளிர்காலத்தில் தலைவலி ஏற்பட காரணம் என்ன?அதிலிருந்து தப்பிக்க இதை செய்யுங்கள்...
மாதிரிப் படம்
  • Share this:

குளிர்காலத்தில் வழக்கத்துக்குமாறாக அதிகமானோருக்கு தலைவலி ஏற்படும். இதற்கான காரணத்தை அறிந்துகொண்டு, அதற்கான வழிமுறைகளை பின்பற்றினால் குளிர்கால தலைவலி பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

குளிர்காலம் வந்துவிட்டால் ஸ்வெட்டர் விற்பனை அமோகமாக இருக்கும். காரணம், உடலில் உள்ள வெப்ப நிலை குறைந்துவிட்டால், அவை பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இதனால் உடலில் உள்ள சூடு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குளிர்காலத்தில் பொதுவாக ஏற்படும் சளி, காய்ச்சலுடன் தலைவலி பிரச்சனையும் அதிகரிக்கும். காரணம், குறைவான பகல்பொழுது, நீண்ட இரவு என பகலிரவு சமநிலை மாற்றம் அடைகிறது. இதனால், மனிதர்களின் தூக்கம் - விழிப்பு முறையும் மாற்றமடைந்து தலைவலி ஏற்படுகிறது.

மண்டையோட்டின் முன்புறம் உள்ள சைனஸ் துவாரங்கள் காற்றினால் நிரப்பப்பட்டு வளிமண்டலத்துடன் சமநிலை பேன உதவுகின்றன. பருவநிலை மாற்றத்தால், குளிர்காலத்தில் வளிமண்டல அழுத்தத்தில் ஏற்படும் மாற்றமும் இந்த சமநிலையை குலைத்து தலைவலி ஏற்பட காரணமாகின்றன. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஆய்வாளர்கள், குளிர், வெப்ப நிலை மற்றும் குறைவான பகல் பொழுதால் வளிமண்டல அழுத்ததில் ஏற்படும் மாற்றம் ஆகியவை மனிதர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளனர். குளிர்காலத்தில் ஒருசில வழிமுறைகளை பின்பற்றினால் தலைவலி பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.



தலைவலி பிரச்சனையில் இருந்து தப்பிக்கும் வழிமுறைகள் :

*குளிர்காலத்தில் வீட்டில் இருந்து வெளியேறும்போது தலை மற்றும் கழுத்தை மறைக்கக்கூடிய குளிர்கால ஆடைகளை கட்டாயம் அணிந்து செல்லுங்கள்.

*சரியான இரத்த ஓட்டத்திற்கு உங்கள் கழுத்து மற்றும் தோள்பட்டை தசைகளை நிதானமாக வைத்திருங்கள். நீங்கள் அசௌகரியமாகவோ, பதற்றமாகவோ உணர்ந்தால், தலையை மசாஜ் செய்து கொள்ளுங்கள். கழுத்தினை மெதுவாக வட்டவடிவில் சுழற்றுங்கள்.

*தூக்கம் மற்றும் விழிப்பு முறையை சரியாக கடைபிடியுங்கள். அதாவது ஒவ்வொரு இரவும் சரியான நேரத்தில் உறங்கி சரியான நேரத்தில் விழித்துக்கொள்ளுங்கள். 8 மணி நேர உறக்கத்தை கடைபிடியுங்கள்.

*உங்கள் அறை போதுமான ஈரப்பதமில்லை என்று நீங்கள் உணர்ந்தால் ஈரப்பதமூட்டியைப் பயன்படுத்தலாம். ரேடியேட்டரைப் பயன்படுத்தி அறையை சூடாக வைத்திருங்கள்.

*ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது நீராவி எடுத்து சைனஸ் பிரச்சனை உருவாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

*முகத்தை தினமும் மசாஜ் செய்ய ஜேட் ரோலர் அல்லது குவா ஷா  போன்ற முக மசாஜ் கருவிகளைப் பயன்படுத்தவும். இவை சைனஸ் பிரச்சனை மற்றும் தலைவலி ஏற்படுவதை தடுக்க பயன்படுகிறது.

*நாள்தோறும் மூன்று வேலைகளிலும் சரியான நேரத்தில் உணவு எடுப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். உணவு எடுக்காமல் தவிர்ப்பது தலைவலியை ஏற்படுத்தும்.

*காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகிய ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். அதுவும், உடல்சூட்டை பராமரிக்கும் உணவுகளாக இருக்க வேண்டும்.

*உடல் வெப்பநிலை மற்றும் இரத்த ஓட்டத்தை பராமரிக்க வழக்கமான உடற்பயிற்சி மிகவும் முக்கியம். குளிர்காலத்தில் காலைநேரத்தில் விழிப்பது கடினமாக இருந்தாலும், ஆரோக்கியத்தை பேண கட்டாயம் இதனை செய்தாக வேண்டும்.

*உடல் தசைகள் ரிலாக்ஸாக இருக்கும் வகையில் சூடான நீர் அல்லது வழக்கமான நீரில் குளித்துக்கொள்ளுங்கள். தேவைக்கு அதிகமாக உடலில் வெப்பத்தை அதிகரித்தாலும் வேறொரு பிரச்சனைக்கு வழிவகுக்கும்.

*உங்கள் உடலை சூடாக வைத்திருக்க சூடான இஞ்சி தேநீர், சூடான மஞ்சள் லட்டு அல்லது சூடான பானங்களை அருந்துங்கள்.

*நீங்கள் குளிர்கால ஒற்றைத் தலைவலி வந்தால் சரியான ஒற்றைத் தலைவலி மருந்துகளுக்கு மருத்துவரை அணுகி ஆலோசனைகளை பெற்றுக்கொள்வது நல்லது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Tamilmalar Natarajan
First published: