முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிப்பது எப்படி?

வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிப்பது எப்படி?

வெயில் தாக்கத்தை தவிர்க்க யோசனை

வெயில் தாக்கத்தை தவிர்க்க யோசனை

எந்த வேலையாக இருந்தாலும் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

வெயிலின் தாக்கம் அதிகரிக்குமே தவிர குறையாது என்கிற செய்தியை நாளுக்கு நாள் கேட்கிறோம். இந்த நேரத்தில் நம்மை வெயிலிலிருந்து தற்காத்துக்கொள்வது அவசியம். அதற்காக தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மக்கள் நலன் கருதி சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

1 . தாகம் எடுக்காவிட்டாலும் போதுனான அளவு நீர் அருந்த வேண்டும். அப்போதுதான் உடலில் நீர் குறையாமல் இருக்கும்.

2. வீட்டில் தயாரித்த நீர்மோர், லஸ்ஸி, பழைய சோறுக் கஞ்சி , எலுமிச்சை ஜூஸ் போன்ற பானங்களை அருந்தினால் நீர் குறைவுப் பிரச்னை இருக்காது.

3. எடை குறைவான, வெளிர் நிறங்கள் கொண்ட பருத்தி ஆடைகளை லூஸாக அணியுங்கள்.

4. கைவிசிறிகளை உடன் வைத்துக்கொள்ளுங்கள். காற்று குறைவான நேரத்தில், மின்சாரம் இல்லாத நேரத்தில் கைவிசிறியைப் பயன்படுத்துங்கள்.

5. வெளியே செல்வதாக இருந்தால் தொலைகாட்சி, ரேடியோ, செய்திதாள் மூலம் உள்ளூர் வானிலையைத் தெரிந்துகொள்ளுங்கள்.

6. எந்த வேலையாக இருந்தாலும் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். அதற்கு முன் அல்லது பின் அந்த வேலைகளைச் செய்யுங்கள்.

7. வெளியே செல்லும்போது தலையில் பருத்தித் துணி , தொப்பி போன்றவை அணிந்து கொள்ளுங்கள். கட்டாயம் குடை எடுத்துச்செல்லுங்கள்.

8. வெயில் நாட்களில் சூடான பானங்களான டீ, காஃபியைத் தவிர்த்து விடுங்கள். கார்பனேட் கொண்ட குளிர்பானங்களையும் தவிர்த்து விடுங்கள். மாறாக அவை உங்கள் உடலில் நீரேற்றத்தைக் குறைத்துவிடும்.

குழந்தைகளை வெயில் தாக்கத்திலிருந்து பாதுகாக்க:

1. வீட்டில் குழந்தைகளுக்கு நீர் அதிகம் பருகக் கொடுங்கள்.

நீர் நிறைந்த பழங்களை சாப்பிடக் கொடுங்கள்.

2. வெப்பம் தொடர்பான நோய் அறிகுறிகளைத் தெரிந்துகொள்ளுங்கள். அவ்வாறு தென்பட்டால் உடனே உரிய சிகிச்சை அளிப்பது நல்லது.

3. உடலின் நீரேற்றம் குறைந்துள்ளதா என்பதை அவர்களின் சிறுநீர் வழியாகக் கண்டறியுங்கள். அடர் நிறத்தில் இருந்தால் நீரேற்றம் குறைந்துள்ளது என அர்த்தம். வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் உடலில் போதுமான நீர் இருக்கிறதென்று அர்த்தம். இதேமுறைதான் பெரியவர்களுக்கும்.

4. குழந்தைகளை காரில் அமர வைத்து பார்க்கிங் செய்துவிட்டு செல்லாதீர்கள். ஓய்வில் இருக்கும் காரினுள் வெப்பம் அதிகமாக இருக்கும். அது ஆபத்தான வெப்பமும் கூட.

முதியவர்களுக்கான பாதுகாப்பு:

1. வீட்டில் பெரியவர்கள், முதியவர்கள் இருந்தால் அவர்களை கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும்.குறிப்பாக தனியாக வசிக்கிறார்கள் எனில் கூடுதல் கவனம் அவசியம்.

2. ஆபத்தான சமயத்தில் ஃபோனை தொடர்புகொள்ளக் கூடிய வசதி முதியவர்களுக்கு இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

3. முதியவர்கள் வெயில் தாக்கத்தால் பெரும் சிரமப்படுகிறார்கள் எனில் அவர்களைக் குளுர்ச்சியாக்குவது அவசியம். அதற்கு ஈரத்துணியை கழுத்துப்பகுதி, அக்குள் பகுதியில் வைய்யுங்கள்.

4. குளிர்ந்த நீரில் குளிக்க வையுங்கள்.

5. அவர்கள் அதிகமாக நீர் அருந்த விழிப்புணர்வு செய்யுங்கள்.

First published:

Tags: Dehydration, Health tips, Summer