கொரோனா வைரஸிடமிருந்து நீங்கள் தப்பிக்க வேண்டுமா? இதை செய்தாலே போதும்

கொரோனா தொற்று பாதுகாப்பு

பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகளின் சுகாதாரப் பணியாளர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் சுமார் 2,884 சுகாதார ஊழியர்கள் பங்கேற்றனர். இவர்களில் 568 தொழிலாளர்கள் கோவிட்-19 ஐ கொண்டிருந்தனர். நோய்த்தொற்றின் தீவிரம் ஐந்து பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டது.

  • Share this:
தடுப்பூசி வந்த பின்னும் உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. மஞ்சள் கலந்த பாலை குடிப்பதிலிருந்து, நாட்டு மருந்துகளை எடுத்து கொள்வது வரை பல முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியா உட்பட பல நாடுகளில் கொரோனாவின் இரண்டாம் அலை பரவி வரும் நிலையில், தொற்று அபாயத்தை குறைப்பது தொடர்பாக ஏராளமான ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் இரவில் நாம் தூங்கும் ஒவ்வொரு கூடுதல் மணிநேர தூக்கமும் வைரஸ் நோய் தொற்று நம்மை தாக்குவதற்கான அபாயத்தை குறைப்பதாக தெரிய வந்துள்ளது.

பொதுவாக அனைவருக்குமே 8 மணி நேர ஆழ்ந்த தூக்கம் அவசியம். ஆனால் வேலைச்சுமை, மனஅழுத்தம், கணினி மற்றும் மொபைல் பயன்பாடு காரணமாக பெரும்பாலானோர் நேரத்தோடு தூங்காமல் தாமதமாக தூங்குகின்றனர். அந்த தூக்கமும் ஆழ்ந்த தூக்கமாக இருப்பதில்லை. இதனால் பல்வேறு நோய்கள் வருகின்றன.

கொரோனா வைரஸ்


இதுதொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்ட 8 விஞ்ஞானிகள் அடங்கிய குழு, கடந்த 2020 ஜூலை 17 முதல் 2020 செப்டம்பர் 25 வரையில் கணக்கெடுப்பு நடத்தியது. இதில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகளின் சுகாதாரப் பணியாளர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் சுமார் 2,884 சுகாதார ஊழியர்கள் பங்கேற்றனர். இவர்களில் 568 தொழிலாளர்கள் கோவிட்-19 ஐ கொண்டிருந்தனர். நோய்த்தொற்றின் தீவிரம் ஐந்து பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டது.

1. எந்த அறிகுறிகளையும் காட்டாத மிகவும் லேசான பாதிப்பு.
2. சிகிச்சை தேவைப்படாத லேசான பாதிப்பு(இருமலுடனோ அல்லது இல்லாமலோ காய்ச்சல்).
3. காய்ச்சல், சுவாச அறிகுறிகள் அல்லது நிமோனியாவுடன் கூடிய மிதமான பாதிப்பு.
4. சுவாசிப்பதில் சிரமங்கள் இருக்கும் கடும் பாதிப்பு.
5. தீவிர சிகிச்சை தேவைப்படும் சுவாசக் கோளாறுடன் கூடிய மிக சிக்கலான பாதிப்பு என வகைப்படுத்தப்பட்டது.

இந்த ஆய்வில் தூக்கமின்மை, தினசரி மனசோர்வு மற்றும் மனஅழுத்தம் உள்ளிட்ட காரணிகள் உடலுக்கு அதிக ஆபத்துகளை ஏற்படுத்துகின்றன என்பதோடு மட்டுமல்லாமல் கொரோனா வைரஸ் தாக்குவதற்கான அபாயத்தையும் அதிகரிப்பதாக ஆய்வின் முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்


மேலும் நோய்களால் பாதிக்கப்பட்டு மீண்டு வரும் நேரமான மீட்பு காலமும் மேற்கண்ட காரணிகளில் அதிகமாகிறது என்பதும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் சாத்தியமான காரணிகளை கருத்தில் கொண்ட ஆராய்ச்சியாளர்கள், இரவு நேர தூக்கத்தை அதிகப்படுத்தும் ஒவ்வொரு ஒரு மணி நேரமும், கொரோனா வைரஸ் தாக்கும் அபாயத்தை 12 சதவீதம் வரை குறைக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளனர்.

போதுமான அளவு இரவு தூக்கம் இல்லாதது, வேலைப்பளு மற்றும் பிற காரணங்களால் ஏற்படும் டென்ஷன்கள் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்று நோய் வருவதற்கான அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. கிருமி தொற்று வருவதற்கான காரணமாக மேற்காணும் காரணிகள் சொல்லப்பட்டாலும், மிகச்சரியாக இவை கோவிட்-19 வைரஸ் தொற்று பரவ ஆபத்து காரணிகளா என்பதை மேலும் தெளிவுபடுத்த இன்னும் கூடுதல் ஆய்வுகள் செய்ய வேண்டியிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ram Sankar
First published: