ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மருந்துக்கழிவுகளை குப்பைத்தொட்டியில் போடுவது ஆபத்து : எப்படி அப்புறப்படுத்த வேண்டும்..?

மருந்துக்கழிவுகளை குப்பைத்தொட்டியில் போடுவது ஆபத்து : எப்படி அப்புறப்படுத்த வேண்டும்..?

மருந்துக்கழிவுகளை குப்பைத்தொட்டியில் போடுவது ஆபத்து

மருந்துக்கழிவுகளை குப்பைத்தொட்டியில் போடுவது ஆபத்து

சில மருந்துகள் துப்புரவுப் பணியாளர்களுக்கும் , அந்த இடத்தை சுற்றி வாழும் மக்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்கிறது. அதுமட்டுமின்றி, தெருநாய்கள் அல்லது சாலையில் சுற்றித் திரியும் பிராணிகளுக்கு இவை அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். இது தவிர, அவை அந்த இடத்தில் உள்ள நீரின் தரத்தையும் பாதிக்கலாம்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இன்றைய சூழலில் மருத்துவ சிகிச்சைகள் காரணமாக வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்வது, மருந்து , மாத்திரைகள் பயன்படுத்துவதும் அதிகரித்துவிட்டன. அப்படி பயன்படுத்தும் மருந்து , சிரிஞ்ச், குளோப் போன்றவற்றை குப்பைத் தொட்டியில் வீசுவதும் சாதாரணமாகிவிட்டது. இப்படி தூக்கி எறியப்படும் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கும், விலங்குகளுக்கும், ஆபத்தை ஏற்படுத்தும். குறிப்பாக குழந்தைகளுக்கு எவ்வளவு ஆபத்தானவை என்று உங்களுக்குத் தெரியுமா?

  பயன்படுத்திய மருந்துகள், காலாவதியான மாத்திரைகள், சிரிஞ்ச்கள் மற்றும் இன்ஹேலர்கள் போன்றவற்றை முறையாக அப்புறப்படுத்துவது மிகவும் அவசியம். உணவு மற்றும் மருந்து நிர்வாகமும் (FDA) இதை அங்கீகரித்து, மக்களிடையே இது தொடர்பான தகவல்களை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிடுகிறது. அதன்படி இதைப் பற்றிய சில முக்கியமான விஷயங்களை அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.

  ஒழுங்காக அப்புறப்படுத்துவது ஏன் முக்கியம்?

  மெடிக்கல் நியூஸ் டுடேயின் கூற்றுப்படி, சில மருந்துகள் துப்புரவுப் பணியாளர்களுக்கும் , அந்த இடத்தை சுற்றி வாழும் மக்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்கிறது. அதுமட்டுமின்றி, தெருநாய்கள் அல்லது சாலையில் சுற்றித் திரியும் பிராணிகளுக்கு இவை அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். இது தவிர, அவை அந்த இடத்தில் உள்ள நீரின் தரத்தையும் பாதிக்கலாம்.

  எந்தெந்த மருந்துகளில் கவனம் அவசியம்..?

  மீதமாகும் மருந்துகளை திரும்ப்பெற்றுக்கொள்ள சில இடங்கள் உள்ளன. அதன் தகவல்களை தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது. உங்களிடம் ஏதேனும் மருந்து மீதம் இருந்தால், DEA-ல் பதிவு செய்யப்பட்ட மருந்துக் கடைக்கு எடுத்துச் செல்லலாம். அங்கு, பயிற்சி பெற்ற நிபுணர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்துவார்கள். அப்படி நீங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் எங்கெல்லாம் செயல்படுகின்றன என்னும் தகவலை இணையத்தில் இருந்து பெறலாம். மேலும் எந்தெந்த மருந்துகளையெல்லாம் திரும்பப்பெற ஏற்றவை என்ற தகவல்களும் இருக்கும். நீங்கள் மருந்து வாங்கிய கடையிலும் இந்த தகவலை பெறலாம்.

  Also Read : குறட்டை சத்தத்தை நிறுத்துவது எப்படி..? உங்களுக்கான 7 வழிகள்..!

  பயன்படுத்திய மருந்துகளை எப்படி பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும்..?

  சில மருந்துகளை குப்பைத் தொட்டியில் வீசக்கூடாது. அவற்றை கழிப்பறையில் அப்புறப்படுத்த வேண்டும். எஃப்.டி.ஏ படி, பென்ஜிட்ரோகோடோன், புப்ரெனோர்பைன், ஹைட்ரோகோடோன், மெபெரிடின், மெத்தடோன், மார்பின், ஆக்ஸிகோடோன், சோடியம் ஆக்ஸிபேட், டேபென்டடோல் அடங்கிய மருந்துகள் தீங்கு விளைவிக்கக்கூடியவை என்பதால் அப்படியே தூக்கி எறியாமல் அவற்றை கழிப்பறையில் ஃப்ளஷ் செய்வது நல்லது. இந்த மருந்துகளின் முறையற்ற பயன்பாடு ஆபத்தானது மற்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று FDA கூறுகிறது.

  எந்தெந்த மருந்துகளை குப்பைத் தொட்டியில் போட வேண்டும்?

  மருந்துகளின் பின்புற குறிப்பில் எந்தவித ஆபத்து எச்சரிக்கை அல்லது வழிகாட்டிகளை சுட்டிக்காட்டவில்லை எனில் அதை குப்பைத்தொட்டியில் போடலாம். நாய், குழந்தைகளுக்கு ஆபத்து என்பன போன்ற குறிப்புகள் இருப்பின் கவனம் அவசியம்.

  Also Read :  நீண்ட நாட்களான வாட்டர் கேன் தண்ணீரை குடிக்கலாமா..? அதனால் உடல் நல பாதிப்புகள் வருமா..?

  இப்படி அப்புறப்படுத்துங்கள்

  முதலில் மருந்து தயாரிப்புகளின் பேக்கேஜிங்கில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.

  அது காலாவதியானால், அதை பேக்கேஜிங்கிலிருந்து வெளியே எடுத்து உடைத்த பிறகு எறியுங்கள்.

  - சீல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பையில் அல்லது மற்ற சீல் செய்யப்பட்ட கொள்கலனில் மருந்தை வைத்து அப்புறப்படுத்தவும்.

  - வெற்று பாட்டில்கள் அல்லது பிற பேக்கேஜிங் மருந்து பாட்டில்கள் மறுசுழற்சி செய்யக்கூடியது எனில் உரிய இடங்களில் மறுசுழற்சிக்கு கொடுங்கள்.

  ஊசி மற்றும் சிரிஞ்சை அப்புறப்படுத்தும்போது அந்த இடம் மனிதர்களோ ,விலங்குகளோ அதிகமாக நடமாடாத இடமாக இருக்க வேண்டும். அங்கு அப்படி அப்புறப்படுத்தும்போது அப்படியே தூக்கி எறியாமல் சீல் செய்யப்பட்ட கவர்களில் போட்டு அப்புறப்படுத்துவது அவசியம்.

  இன்ஹேலரை இப்படி அப்புறப்படுத்துங்கள்

  இன்ஹேலரை முறையாக அப்புறப்படுத்த தவறுவது ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, அவற்றை உடைத்தோ அல்லது நெருப்பில் எறித்தோ அப்புறப்படுத்துங்கள்.  அது மறுசுழற்சிக்கு உகந்தது எனில் உங்கள் அருகிலுள்ள மறுசுழற்சி மையங்களிலும் கொடுக்கலாம். இன்ஹேலரின் பேக்கேஜிங்கில் அதை அகற்றுவது பற்றிய தகவல் இருப்பின் அதை பின்பற்றவும்.

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Health, Medicines