முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சாதாரண நெஞ்சு வலி Vs மாரடைப்பு வலி - எவ்வாறு கண்டறிவது.? நிபுணர்களின் விளக்கம்

சாதாரண நெஞ்சு வலி Vs மாரடைப்பு வலி - எவ்வாறு கண்டறிவது.? நிபுணர்களின் விளக்கம்

நெஞ்சு வலி

நெஞ்சு வலி

அமைதியான அல்லது வலியற்ற மாரடைப்பு 20 முதல் 25% மக்களில் ஏற்படுவதாக பிரபல இருதயவியல் ஆலோசகர் டாக்டர் பிரவின் கஹலே குறிப்பிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 3-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஹார்ட் அட்டாக் ஏற்பட்டுள்ளதற்கான பொதுவான அறிகுறியாக மார்பு வலி பார்க்கப்படுகிறது. இதனால் வேறு சில அசௌகரியங்களால் நெஞ்சு பகுதியில் வலி ஏற்பட்டால் கூட அது இதயம் தொடர்பான சிக்கலாக இருக்கும் என்று பயந்து பலரும் பீதி அடைகிறார்கள்.

எனவே நம் அனைவருக்குமே மார்பு வலி மற்றும் அதன் பின்னால் உள்ள சாத்திய காரணங்களை எவ்வாறு புரிந்து கொள்வது என குழப்பம் இயல்பாகவே ஏற்படுகிறது. இது குறித்த பல தகவல்களை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் இன்டர்னல் மெடிசின் கன்சல்டன்ட்டாக இருக்கும் டாக்டர் பிக்கி சௌராசியா மற்றும் மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தலைவர் டாக்டர் விவேகா குமார் விரிவாக பகிர்ந்து கொண்டுள்ளனர்.

மருத்துவர் விவேகா குமார் பேசுகையில், தீவிர மார்பு வலி என்பது அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற முக்கிய காரணங்களில் ஒன்று. அவசர பிரிவிற்கு வரும் நோயாளிகளில் சுமார் 10% பேர் இந்த பாதிப்புடன் வருகிறார்கள். மார்பு வலி என்பது அக்யூட் கரோனரி சிண்ட்ரோம் (ACS) ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. ஆனால் நோயறிதல் மதிப்பீட்டிற்கு பின் தீவிர மார்பு வலியுடன் வருபவர்களில் சுமார் 10 - 15% நோயாளிகளுக்கு மட்டுமே Acute Coronary Syndrome பாதிப்பு இருக்கிறது என்றார்.

டாக்டர் பிக்கி கூறுகையில், பொதுவாக இதயம் சார்ந்த நோய்களில் மார்பு வலி முக்கிய அறிகுறியாக காணப்பட்டாலும் அதிகமாக வியர்ப்பது, அசவுகரியம், படபடப்பு போன்ற பிற பொதுவான அறிகுறிகளையும் கொண்டுள்ளது மற்றும் வலி அல்லது அசவுகரியமானது முதுகு, கழுத்து, கை மற்றும் தாடைக்கும் பரவும். ஆனால் உறுதிப்படுத்தப்படும் வரை எந்த வகை மார்பு வலியும் மருத்துவ அவசரநிலையாக தான் பார்க்கப்படுகிறது.

எனவே எப்போது ஏற்பட்டாலும் மார்பு வலியை புறக்கணிக்க கூடாது. நெஞ்சு வலி எப்போதும் ஹார்ட் அட்டாக்குடன் தொடர்புடையது அல்ல என்றாலும் ஏற்பட்ட அறிகுறி இதய நோயால் தானா அல்லது இல்லையா என்பதை உறுதிப்படுத்துவது முக்கியம். எனவே விரைந்து மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றார்.

ஹார்ட் அட்டாக்கை குறிக்கும் நெஞ்சு வலியை எவ்வாறு கண்டறிவது.?

ECG, சீரியல் கார்டியாக் மார்க்கர்ஸ், 2d எக்கோ கார்டியோகிராபி, மெடிக்கல் ஹிஸ்ட்ரி, கிளினிக்கல் மற்றும் உடலின் மிக அடிப்படையான செயல்பாடுகளின் அளவீடுகள் போன்ற சோதனைகள் மூலம் மருத்துவர்கள் இதய பிரச்சனைகளை உறுதி செய்கிறார்கள். டாக்டர் பிக்கி விளக்குகையில், பொதுவாக ஹார்ட் அட்டாக் தொடர்பான மார்பு வலியானது மார்பின் இடதுபுறத்தில் இருந்து உடலின் சில பகுதிகளுக்கு பரவுகிறது. இந்த வலி மிதமானது முதல் கடுமையான தீவிரமுடையதாக அதே நேரம் தொடர்ச்சியான வலியாக இருக்கும். மார்பு வலியானது மார்பின் இரு பக்கங்களிலும் அல்லது ஒருபக்கம் மட்டுமே வலிக்க கூடியதாகவும் இருக்கலாம். விஷயங்களை உறுதி செய்ய கிளினிக்கல் & லேபோரட்டரி முடிவுகளை பார்க்க வேண்டும் என்றார்.

Also Read : பெரும்பாலும் அதிகாலையில் மாரடைப்பு வர என்ன காரணம்..? - விளக்கும் இதய நோய் நிபுணர்..!

மூச்சு விட முடியாமல் அவதிப்படுவதோடு இதன் போது சுருக்சுருக்கென்று கத்தியால் குத்துவது போன்ற வலி, இருமல், மார்பினுள் ஏற்படும் வலி, அடிவயிற்று பகுதியில் அசௌகரியம், பல மணிநேரங்கள் நீடிக்கும் நிலையான வலி, சில நொடிகள் அல்லது அதற்கும் குறைவாக நீடிக்கும் வலி அவ்வப்போது ஏற்படுவது உள்ளிட்டவை கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகளில் சில எனவும் குறிப்பிட்டார்.

சைலன்ட் & பெயின்லெஸ் ஹார்ட்அட்டாக்:

அமைதியான அல்லது வலியற்ற மாரடைப்பு 20 முதல் 25% மக்களில் ஏற்படுவதாக பிரபல இருதயவியல் ஆலோசகர் டாக்டர் பிரவின் கஹலே குறிப்பிட்டுள்ளார். இந்த வகை ஹார்ட் அட்டாக்கால் பாதிக்கப்படும் நீரிழிவு நோயாளிகள் மற்றும் வயதானவர்கள் மிக குறைந்த அறிகுறிகளை மட்டுமே எதிர்கொள்வதாகவும், வழக்கமான மார்பு வலியை எதிர்கொள்வதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். எனினும் தலைச்சுற்றல், லேசான மயக்கம், குமட்டல் மற்றும் வாந்தி போன்ற மாரடைப்பின் லேசான அறிகுறிகளை கொண்டிருக்கும் பல நபர்களுக்கு சைலன்ட் அட்டாக் கண்டறியப்படுவதாக குறிப்பிட்டார்.

தலைச்சுற்றல், பிளாக்அவுட்ஸ் மற்றும் மயக்கம், மூச்சுத்திணறல் மற்றும் அசிடிட்டி உள்ளிட்ட சில அறிகுறிகளை கவனமாக பார்த்து தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் மாரடைப்பு நோய் கண்டறிதல் செய்யமுடியாமல் போய்விடும். சாதாரண அறிகுறிகள் இவை என நினைத்து நோயாளிகள் மருத்துவமனைக்கு வராமல் இருப்பார்கள். தவிர பல நேரங்களில், ECG கூடஇந்த வகை ஹார்ட் அட்டாக்கை 20 முதல் 25% கண்டுபிடிக்க தவறலாம் என்றார்.

Also Read : உங்களுக்கு இந்த 5 அறிகுறிகள் இருந்தால் கொலஸ்ட்ரால் அதிகரித்திருக்கலாம்..!

நெஞ்சு வலிக்கான பொதுவான காரணங்கள் :

லங் பேத்தாலஜி, தசைநார் மற்றும் நரம்பியல் வலி காரணங்களால் கூட மார்பு மற்றும் மார்பின் பக்கவாட்டில் வலி பொதுவாக ஏற்படலாம். அதே போல மார்பு வலியானது நிமோதோராக்ஸ், நிமோனியா போன்ற ஒரு தீவிர நிலை காரணமாகவும் ஏற்படலாம். இவை தவிர மாரடைப்பு/ஆஞ்சினா, வால்வுலர் இதய நோய்/பெரிகார்டிடிஸ் போன்ற கார்டியாக் நிலைகள், வாஸ்குலர் நிலைகள், புளூரிடிஸ், நிமோனியா, நிமோதோராக்ஸ் மற்றும் டிராக்கியோபிரான்சிடிஸ் உள்ளிட்ட நுரையீரல் நிலைகள், பெப்டிக் அல்சர் & இரைப்பை குட போன்ற இரைப்பை குடல் நிலைகள், ஹெர்பெஸ் ஜோஸ்டர் தொற்று அல்லது உளவியல் சார்ந்த நிலைகள் உள்ளிட்டவையும் கூட நெஞ்சு வலியை ஏற்படுத்தும்.

First published:

Tags: Chest pain, Heart attack, Heart health