Home /News /lifestyle /

பெண்குயின் கார்னர் 20 : தோல் நோய் ஆபத்தா..? திருமண உறவில் பாதிப்பை உண்டாக்குமா? மருத்துவர் பதில்

பெண்குயின் கார்னர் 20 : தோல் நோய் ஆபத்தா..? திருமண உறவில் பாதிப்பை உண்டாக்குமா? மருத்துவர் பதில்

சரும பாதிப்பு

சரும பாதிப்பு

இந்த படை எனப்படுவது பொதுவாக பூஞ்சையினால் உண்டாகும். இது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதாக பரவுவதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

அன்று பிரேமா தனக்கு தெரிந்த பெண்ணான ரஜினியை மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தார். பிரேமாவை எனக்கு பல வருடங்களாகத் தெரியும். இரண்டாவது குழந்தை பிறப்பு சமயத்தில் அவர் என் கவனிப்பில் இருந்தார். அதன் பிறகு எந்த பிரச்சினையாக இருந்தாலும் என்னையே நாடி வந்தார்.

ரஜினி ஒரு அழகுக்கலை நிபுணர். மிதமான மேக்கப்பில் அழகாக இருந்தார்.

பிரேமாவே துவங்கினார்.

"டாக்டர் !!! ரஜினிக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. இன்னும் ஆறு மாதத்தில் திருமணம்.

இவளுக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது. இவளுக்கு இடுப்பு பகுதியில் படை போல தோலில் அரிப்பு ஏற்படுகிறது. அதற்கு மருந்துகளை சாப்பிடும் பொழுது சரியாகிறது. பிறகு திரும்பவும் அதே இடத்தில் வர ஆரம்பிக்கிறது. இப்பொழுது உடம்பின் மற்ற இடங்களிலும் ஆங்காங்கே சிறுசிறு படைகள் வருகின்றன. அரிப்பும் இருக்கிறது. டாக்டரிடம் காண்பித்து ஒரு முறை மருந்து எடுத்துக் கொண்டிருக்கிறாள். இப்பொழுது உங்கள் ஆலோசனையையும் கேட்கலாம் என்று நான்தான் உங்களிடம் கூட்டிக்கொண்டு வந்தேன்." என்றார்.

"இந்த படை எனப்படுவது பொதுவாக பூஞ்சையினால் உண்டாகும். இது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதாக பரவுவதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வீட்டில் வேறு யாருக்கேனும் இதே போன்று தோலில் அரிப்பு, படை இருந்தால் அவர்களுக்கும் மருத்துவம் செய்ய வேண்டும். அப்போது தான் முற்றிலும் குணமாகும். அதுபோல யாருக்கு இந்த தோல் நோய்கள் இருக்கிறதோ அவர்கள் தங்களுடைய போர்வை, துண்டு, உடைகள் போன்றவற்றை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். மற்றவருடையதை பகிர்ந்து கொள்ளக் கூடாது.இவர்களுடையதையும் மற்றவர்கள் யாரும் உபயோகப்படுத்த கூடாது. அதுபோல துவைக்கும் பொழுதும் துணிகளை சேர்த்து (வாஷிங் மெஷின்) துணி துவைக்கும் இயந்திரத்தில் போடாமல் சூடான நீரில் துவைத்து சூரிய ஒளியில் உணர்த்த வேண்டும்.

அதுபோல, பொது இடங்களில், குறிப்பாக உணவகங்களில் இருக்கும் கை துடைக்கும் துணி போன்ற பலரும் உபயோகிக்கும் துணிகளை தவிர்ப்பது நல்லது. பொது நீர்நிலைகளான ஆறு, குளம், ஆகியவற்றில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். அதிலிருந்து மற்றவர்களுக்கும் பரவுவதற்கு வாய்ப்புண்டு என்பதால்...

பெண்குயின் கார்னர் 18 : உடல் பருமனால் நல்ல வரன்கள் தள்ளிப்போகிறதா..? உங்களுக்கான தீர்வை சொல்லும் மருத்துவர்...

பெண்குயின் கார்னர் 19 : திருமண வயதில் உள்ள பெண்கள் மார்பக அளவை பெரிதாக்க என்ன செய்ய வேண்டும்..? மருத்துவர் ஆலோசனை

முக்கியமாக மருத்துவர் கொடுக்கும் மருந்துகளை 6 வார காலம் வரை தொடர்ந்து எடுத்துக் கொள்வது மிக மிக முக்கியமான விஷயம். உணவு கட்டுப்பாடு எதுவும் இந்த பிரச்சனைக்கு தேவையில்லை மாத்திரைகள் மற்றும் களிம்புகளிலேயே பூரணமாக குணமாகி விடும்.சிலருக்கு வியர்வை அதிகமாகும் போது இதுபோன்ற படைகள் அதிகமாக வருவதை பார்க்கலாம். அவர்கள் முடிந்தவரை இரண்டு முறை குளிப்பது, காட்டன் உடைகளை உடுத்துவது, அடிக்கடி உள்ளாடைகளை மாற்றிக்கொள்வது காற்றோட்டமுள்ள இடத்தில் இருப்பது, என்பது போன்ற போன்றவற்றை பின்பற்ற வேண்டும். சத்தான உணவு எடுத்துக் கொள்வதும் மிக அவசியம். "

சில மருந்துகளையும் களிம்பையும் சோப்பும் பரிந்துரைத்தேன். தொடர்ந்து மருந்துகளை எடுத்துக் கொள்வதாக ரஜினி கூறினார். நான் என்ன தவறு செய்தேன் என்று நன்றாகப் புரிந்து கொண்டேன் டாக்டர்!! , எனக்கு பூரணமாக குணமாகி விடும் என்ற நம்பிக்கையும் வந்து விட்டது . மிக்க நன்றி! என்று கூறி விடைபெற்றார்.

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Skin Disease, பெண்குயின் கார்னர்

அடுத்த செய்தி