கொரோனா அச்சம்: மன அழுத்தத்தைக் குறைப்பது எப்படி? - உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரை

நீண்டகாலமாக செய்யாமல் இருக்கும் உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு விஷயத்தை மீண்டும் செய்யத் தொடங்குங்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

கொரோனா அச்சம்: மன அழுத்தத்தைக் குறைப்பது எப்படி? - உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரை
உலக சுகாதார அமைப்பு
  • Share this:
Pandemic நிலை எனப்படும் கொள்ளை நோய் சமயத்தில், மன அழுத்தம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. கொரோனா அச்சம் காரணமாக சோகமாகவும், குழப்பம், பயம் போன்ற உணர்வுகள் சாதாரணமானவைதான் என்கிறது உலக சுகாதார நிறுவன அறிக்கை. அத்துடன் அதற்கான சில யோசனைகளையும் முன்வைக்கிறது. அவை உங்கள் பார்வைக்கு..,

1. டிஜிட்டல் உரையாடல்களில் இருந்து சாட்டிங்கில் பயத்தை அதிகப்படுத்திக்கொள்ளாமல் குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவிடுங்கள் என்பதுதான் உலக சுகாதார நிறுவனத்தின் முதல் அறிவுரை.

2. ஏற்கனவே மன ரீதியான குறைபாடுகளுக்காக மருந்துகள் எடுத்துக்கொண்டிருந்தால் கூடுதல் கவனம் செலுத்துங்கள். உணவையும், தூக்கத்தையும் சரியான முறையில் வழிப்படுத்தினால், பெரும்பாலான மன ரீதியான அழுத்தத்தில் இருந்து தப்பிக்கலாம்.


3. அரசும், சுகாதார நிறுவனமும் அளிக்கும் வழிமுறைகளையும், விழிப்புணர்வு விஷயங்களையும் மட்டும் எடுத்துக்கொண்டு, புரளிகளையும் வாட்சப் போன்ற சமூகவலைதள வதந்திகளையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

4. மது அருந்தி, புகைபிடித்து இந்த அழுத்தத்தைக் குறைக்க முயற்சி செய்யாதீர்கள். நீங்கள் நீண்டகாலமாக செய்யாமல் இருக்கும் உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு விஷயத்தை மீண்டும் செய்யத் தொடங்குங்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

https://tamil.news18.com/news/national/zomato-offers-contactless-delivery-option-for-your-food-orders-to-curb-covid-spread-vin-270043.html
First published: March 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்