வெண்குஷ்டத்தை கட்டுப்படுத்த இந்த எளிய டிப்ஸ்களை முறையாக பின்பற்றுங்கள்!

வெண்குஷ்டத்தை கட்டுப்படுத்த இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க..

  • Share this:
விட்டிலிகோ எனப்படும் வெண்புள்ளிகள் அல்லது வெண்குஷ்டம் ஒருவித தோல் சம்பந்தப்பட்டது. சருமத்தின் மீது ஏற்படும் நிறமாற்றம் தான் இது. உடலின் பல்வேறு பகுதிகளில் இது ஏற்படக்கூடும். வெண்புள்ளி பல காரணங்களால் உண்டாகும். மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களாலும் அது ஏற்படலாம். ஆனால், எல்லோருக்குமே மரபணுக்களில் வரும் மாற்றங்கள் மட்டுமே காரணம் அல்ல. எதிர்ப்பு சக்தியில் உண்டாகும் மாற்றங்களாலும் வரலாம். அதுபோல் மற்ற சுய எதிர்ப்பு சக்தி நோய்களோடு சேர்ந்தும் இந்த பாதிப்பு உங்களை தாக்கலாம்.

சிலருக்கு மற்ற உறுப்புகளிலும் சில பிரச்னைகளால் சேர்ந்தும் வரும். தைராய்டு சுரப்பி கோளாறு, ரத்தசோகையில் ஒரு வகையான Pernicious Anemia, நீரிழிவு போன்ற நோய்களும் இதற்கு காரணமாகிறது. கண்களில் உள்ள மெலனோசைட்கள் பாதிக்கப்பட்டால் சிலருக்கு கண் தொந்தரவும் ஏற்படும். உள் காதிலும் இந்த மெலனோசைட்கள் உண்டு. அங்குள்ள மெலனோசைட்களும் பாதிக்கப்பட்டால் காது கேட்பதிலும் தொந்தரவு வரலாம். இந்த வெண்குஷ்டத்தை கட்டுப்படுத்த பின்வருவனவற்றை ட்ரை செய்யுங்கள்.

வெண்குஷ்டத்தை கட்டுப்படுத்த இந்த வழிகள் நிச்சயம் உதவும்:

ஆரம்ப நிலையிலே மருத்துவச் சிகிச்சை எடுத்துக்கொண்டால் மட்டுமே இதன் பாதிப்பைக் கட்டுப்படுத்தவோ குணப்படுத்தவோ முடியும் என்று பலரும் சொல்வதுண்டு. ஆனால் பின்வரும் முறைகளை நீங்கள் பின்பற்றினால் கூட வெண்குஷ்டத்தை நல்ல முறையில் உங்களால் நிர்வகிக்க முடியும். வெண்புள்ளி வந்துவிட்டால் முதலில் தோல் நோய் மருத்துவரைப் பார்க்க வேண்டும். குளுதாதயோன் அளவு குறைவாக உள்ளவர்களிடையே விட்டிலிகோ பெரும்பாலும் ஏற்படுகிறது. குளுதாதயோன் என்பது உடலில் உள்ள பிரீ ராடிக்கல்ஸ்களை எதிர்த்துப் போராட உதவும் ஒரு முக்கிய அங்கமாகும். குளுதாதயோன் ஒரு மாஸ்டர் ஆக்ஸிஜனேற்றியாகும்.

வெண்குஷ்டம் பாதிப்பிற்கேற்ப சிகிச்சை முறை மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும். ஸ்டீராய்டு போன்ற மருந்து மாத்திரைகளே சிலருக்குப் போதுமானதாக இருக்கும். அதோடு மேற்பூச்சாகப் பூசக்கூடிய களிம்புகளும் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தலாம். களிம்புகளால் குணமாகவில்லை என்றால், 'ஸ்கின் க்ராப்டிங்க்' (Skin Grafting) மூலம் சரிசெய்யலாம். தொடையிலிருந்து நிறமிழக்காதத் தோலை எடுத்து நிறமில்லாத இடத்தில் அறுவைச்சிகிச்சை மூலம் மாற்றி விடுவார்கள். அதெல்லாம் அட்வான்ஸ் லெவல். தைராய்டு, சர்க்கரை நோய், ரத்தச்சோகை போன்ற பிற பிரச்னை உள்ளவர்களுக்கு வெண்புள்ளியைக் குணப்படுத்துவது சிரமம். எனவே மேற்சொன்ன சிக்கல்கள் உங்களுக்கு வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். முடிந்த அளவிற்கு மாதம் ஒருமுறை மருத்துவ பசரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

இதற்கான சிகிச்சை ஒருபுறமிருந்தாலும் மனதளவில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், வெண்புள்ளி ஒருவருக்கு உண்டாகும்போது அவரது குடும்பத்தினர் பாதிக்கப்பட்டவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இதை சில உணவுகள் மற்றும் மருந்துகளின் மூலமும் நீங்கள் சரியாக நிர்வகிக்கலாம்.

சில டிப்ஸ்கள்:

* சன்ஸ்கிரீன் பயன்படுத்தாமல் குறைந்தது 30 நிமிடங்கள் தினமும் சூரிய ஒளியில் உட்காருங்கள்.
* சன்ஸ்கிரீனிற்கு பதில் குவெர்செட்டின் நிறைந்த அத்தியாவசிய எண்ணெய்களைப் சருமத்திற்கு பயன்படுத்துங்கள்.
உங்கள் உணவில் “ஜின்க், வைட்டமின் D, B-வைட்டமின்களை (பி -12 மெத்தில்ல்கோபாலமின், மீன் எண்ணெய் மற்றும் புரோபயாடிக்குகள் உட்பட)” கூடுதலாக உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
* பால், சர்க்கரை போன்றவற்றை கிட்டகூட சேர்க்காதீர்கள்.
* உடலில் இருக்கும் மற்ற நோய்களை கட்டுக்குள் வைத்திருங்கள் இல்லையென்றால் அவையுடன் வெண்குஷ்டம் வேறு ரூபத்தில் உங்களை தாக்கும் அபாயம் உண்டு.
* உலக மக்கள் தொகையில் 3 சதவிகிதம் பேர் வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கின்றன புள்ளி விவரங்கள். வெண்புள்ளி உடலில் ஏற்படுத்தும் பாதிப்பைவிட, சகமனிதர்களின் பார்வையாலும் சமூகப் புறக்கணிப்பாலும் ஏற்படும் மன அழுத்தம்தான் அதிகம். இதனால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மையால், தகுதியும் திறமையும் இருந்தும் அவர்களால் கல்வியிலும் வேலையிலும் முழுமையாக ஈடுபட முடியாத நிலையே தொடர்கிறது. அந்தவகையில் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு வெண்குஷ்ட சிக்கல் இருந்தால் அவர்களுக்கு ஆறுதல் கூறி இந்தப் பதிவை அவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

 
Published by:Tamilmalar Natarajan
First published: