Home /News /lifestyle /

நீரிழிவு ரெட்டினோபதி நோய் இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. அதை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதை இங்கே காண்போம்! 

நீரிழிவு ரெட்டினோபதி நோய் இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. அதை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதை இங்கே காண்போம்! 

NetraSuraksha

NetraSuraksha

Diabetic Retinopathy | இந்த நீரிழிவு நோயானது பல கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு எதிரான உங்கள் ஆபத்தை அதிகரிக்கிறது. சிறுநீரக நோயிலிருந்து கீழ் மூட்டு மற்றும் பாதச் சிக்கல்கள், நரம்புச் சிதைவு, சிறுநீர்ப்பை பிரச்சனைகள் வரை... என பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. இது பல உறுப்பு மண்டலங்களுக்கு, குறிப்பாக கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். மிகவும் பொதுவான, ஆனால் முற்றிலும் தடுக்கக்கூடிய சிக்கல்களில் ஒன்று நீரிழிவு ரெட்டினோபதி.

மேலும் படிக்கவும் ...
    இந்தியாவில் பெருநகரங்கள் மற்றும் நகரங்களில் வசிப்பவர்களுக்கு முன்பை விட தற்போது நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது உங்களுக்குத் தெரியுமா? உலகளவில் 1,110,100 குழந்தைகள் மற்றும்  20 வயதுக்குட்பட்ட இளம் பருவத்தினருக்கு வகை 1 நீரிழிவு நோய் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது5. மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் வாழ்வின் ஏதேனும் ஒரு கட்டத்தில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர்.

    தற்போது உலகம் முழுவதும் 537 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஏறக்குறைய 74 மில்லியன் நீரிழிவு நோயாளிகள் இந்தியாவில் மட்டும் உள்ளனர், மேலும் இந்த எண்ணிக்கை அடுத்த பத்தாண்டுகளில் அதிகப்படியாக வளர்ச்சியடையும் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர். ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், உடல் பருமன் மற்றும் உட்கார்ந்து கொண்டே செயல்படும் வாழ்க்கை முறை ஆகியவற்றின் அதிகரிப்புடன், இந்தியா நீரிழிவு தொற்றுநோயின் மையமாக உருவாக உள்ளது.

    வகை-1 நீரிழிவு நோய் என்பது ஒரு தன்னெதிர்ப்பு நோயாகும், இதில் நோயெதிர்ப்பு அமைப்பு கணையத்தில் உள்ள இன்சுலின் உற்பத்திச் செல்களை அழித்து, உயிர்வாழ இன்சுலின் பயன்படுத்தை அவசியமாக்குகிறது. "வயது வந்தோருக்கான" வகை-2 நீரிழிவு நோயானது, வளர்சிதை மாற்றக் காரணங்களால் உற்பத்தி செய்யப்படும் இன்சுலினை உடலால் திறமையாகப் பயன்படுத்த முடியாதபோது, கணையத்தை அதிகப்படியான வேலையைச் செய்யச் செய்து, இறுதியில் உற்பத்தியை நிறுத்தச் செய்கிறது. கர்ப்பிணிப் பெண்களுக்குச் சில சமயங்களில் கர்ப்பகால நீரிழிவு நோய் ஏற்படலாம், இது தாய் மற்றும் குழந்தை இருவரையும் பாதிக்கலாம்5.

    இந்த நோய் "வயதான" மக்களை மட்டுமே தாக்கும் என்பது ஒரு கட்டுக்கதை. நீரிழிவு நோயானது அனைத்து வயதினரையும், சமூகங்களையும், கண்டங்களையும் பாதிக்கிறது. டைப்-2 நீரிழிவு நோயானது இளம் இந்தியர்களைக் கடுமையாகத் தாக்குகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இளைஞர் நீரிழிவு பதிவேட்டின் தரவு, இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 25 வயதிற்குட்பட்ட நபர்களில் நான்கில் ஒருவருக்கு (25.3%) வயது வந்தோருக்கான வகை-2 நீரிழிவு நோய் இருப்பதாகக் காட்டுகிறது4.  தங்கள் குடும்பத்தில் உள்ள மூதாதையர்களிடமிருந்து அடுத்தடுத்த நபர்களுக்குத் தொன்றுதொட்டு வரும் நீரிழிவு நோயின் வரலாறு, உடல் பருமன், ஆரோக்கியமற்ற உணவு முறைகள் மற்றும் செயலற்ற தன்மை கொண்ட பெரியவர்களை மட்டுமே வகை 2 நீரிழிவு நோய் தாக்கும் என்று கருதப்படுகிறது4. இது ஒரு குழப்பமான போக்கு.

    இந்த நீரிழிவு நோயானது பல கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு எதிரான உங்கள் ஆபத்தை அதிகரிக்கிறது. சிறுநீரக நோயிலிருந்து கீழ் மூட்டு மற்றும் பாதச் சிக்கல்கள், நரம்புச் சிதைவு, சிறுநீர்ப்பை பிரச்சனைகள் வரை... என பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. இது பல உறுப்பு மண்டலங்களுக்கு5, குறிப்பாக கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். மிகவும் பொதுவான, ஆனால் முற்றிலும் தடுக்கக்கூடிய சிக்கல்களில் ஒன்று நீரிழிவு ரெட்டினோபதி5.

    நீரிழிவு ரெட்டினோபதி என்பது நீரிழிவு நோயாளிகளிடம் காணப்படும் ஒரு கண் தொடர்பான நோயாகும். இது ஒளியை படங்களாகச் செயலாக்கும் கண்ணின் பகுதியான விழித்திரையை பாதிக்கிறது. உயர் இரத்த குளுக்கோஸ் அளவுகள் கண்ணில் உள்ள இரத்த நாளங்களில் வெடிப்பு, வீக்கம் அல்லது கசிவை ஏற்படுத்தும்; அதனால் கண் பாதிப்படையும். நீரிழிவு ரெட்டினோபதி நோயானது ஆரம்ப கட்டங்களில் எந்த அறிகுறியையும் தோற்றுவிக்காது, ஆனால் நோயின் நிலை முன்னேறும்போது, மங்கலான பார்வை காரணமாக வாசிப்பதில் சிரமம் ஏற்படலாம். இந்த நோயை சரியான நேரத்தில் கண்டறியாவிட்டால், அது நிரந்தர பார்வை இழப்பிற்கு வழிவகுக்கும்3. இது ஒரு வகையான குருட்டுத்தன்மை, ஒருவர் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால், இதை முற்றிலுமாகத் தவிர்க்கலாம்.

    1980 மற்றும் 2008 க்கு இடைப்பட்ட காலத்தில் உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 35 ஆய்வுகளின் பகுப்பாய்வின் அடிப்படையில், நீரிழிவு நோயாளிகளில் விழித்திரை படங்களைப் பயன்படுத்தி நீரிழிவு ரெட்டினோபதியின் ஒட்டுமொத்த பரவலானது 35% என மதிப்பிடப்பட்டுள்ளது, இதில் பார்வைக்கு அச்சுறுத்தலான நீரிழிவு ரெட்டினோபதி 12%5 உள்ளது. மேலும், இது ப்ரீ-டயபடிக் உள்ளவர்களையும் பாதிக்கிறது6!

    ஒரு நற்செய்தி சொல்லவா? சரியான சிகிச்சை மற்றும் பரிந்துரைக்கப்பட்ட வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம், பெரும்பாலான நீரிழிவு நோயாளிகள் இந்த சிக்கல்களுக்கான தொடக்கநிலையைத் தடுக்க அல்லது தாமதப்படுத்த முடியும். அந்த வகையில், Novartis உடன் இணைந்து 'Netra Suraksha' - நீரிழிவு நோய்க்கு எதிரான இந்தியா எனும் முன்முயற்சியை Network 18 தொடங்கியுள்ளது. மருத்துவத் துறையில் உள்ள வல்லுநர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுடன் வட்ட மேசை விவாதங்களை நடத்துவதன் மூலம் நீரிழிவு ரெட்டினோபதி நோய் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதே இந்த முன்முயற்சியின் நோக்கமாகும். முன்முயற்சியின் ஒரு பகுதியாக, Network18 தகவல் கட்டுரைகள் மற்றும் விளக்கக் காணொளிகளையும் வெளியிடும்.

    இது செயல்பாட்டை மேற்கொள்வதற்கான நேரம். நீங்களும் உங்கள் அன்புக்குரியவர்களும் பரிசோதனை செய்துகொண்டு உங்களால் முடிந்த அளவிற்கு ஆரோக்கியத்தைப் பேணுங்கள். உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவைக் கண்காணித்து நிர்வகிப்பதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருங்கள். தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள், நீரேற்றத்துடன் இருங்கள் மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவுகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் கார்ப் மற்றும் சர்க்கரை உட்கொள்ளல் அளவைக் கட்டுப்படுத்துங்கள். நீரிழிவு நோய் தடுக்கக்கூடியது, மேலும் சில சமயங்களில், அது ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால், அது மீளக்கூடியதும் கூட! சீரான இடைவெளிகளில் கண் பரிசோதனைகள், ஆரோக்கியமான உணவுமுறை, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க சுய பாதுகாப்பு வழக்கம் போன்ற சரியான பழக்கவழக்கங்களை மேற்கொள்வதன் மூலம் உங்களின் சிறந்த முயற்சியை வழங்குங்கள்.

    நீரிழிவு ரெட்டினோபதி நோய் என்று வரும்போது, ​​தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்வதுதான் அதற்கு எதிரான முக்கியமான நடவடிக்கை. எனவே, ஒவ்வொரு ஆண்டும் உங்கள் கண்களைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள் - நீங்கள் நீரிழிவு நோயாளியாக இல்லாவிட்டாலும்கூட! இந்தப் பரிசோதனை வலியற்றது மற்றும் விரைவானது. Netra Suraksha முன்முயற்சியின் ஆன்லைன் நீரிழிவு ரெட்டினோபதி சுய பரிசோதனையைப்  பயன்படுத்தி உங்கள் கண்களைச் சிறப்பாகக் கவனித்துக்கொள்ளுங்கள்.

    Netra Suraksha முன்முயற்சியைப் பற்றிய கூடுதல் அறிவிப்புகளுக்கு News18.com ஐப் பின்தொடருங்கள், மேலும் 21 ஆம் நூற்றாண்டின் வேகமாக வளர்ந்து வரும் நீரிழிவு நோய் தொடர்பான சுகாதார அவசரநிலைகளுக்கு எதிரான போராட்டத்தில் எங்களுடன் இணைந்திடுங்கள்.

    ஆதாரங்கள்

    1. https://www.medicalnewstoday.com/articles/diabetes-in-india10 Dec, 2021.

    2. IDF Atlas, International Diabetes Federation, 10th edition, 2021

    3. https://www.nei.nih.gov/learn-about-eye-health/eye-conditions-and-diseases/diabetic-retinopathy10 Dec, 2021.

    4. https://www.hindustantimes.com/health/world-diabetes-day-one-in-every-four-of-india-s-youth-suffer-from-the-deadlier-type-2/story-LP4ugRJ5qqLNITYg24xCbO.html10 Dec, 2021.

    5. IDF Atlas, International Diabetes Federation, 9th edition, 2019

    6. https://www.diabetesincontrol.com/retinopathy-occurs-sooner-in-prediabetes/10 Dec, 2021.

    Published by:Selvi M
    First published:

    Tags: Diabetes, Health, Lifestyle

    அடுத்த செய்தி