ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

உடல் துர்நாற்றத்தை கட்டுப்படுத்துவது எப்படி? மருத்துவர்கள் விளக்கம்!

உடல் துர்நாற்றத்தை கட்டுப்படுத்துவது எப்படி? மருத்துவர்கள் விளக்கம்!

உடல் துர்நாற்றம்

உடல் துர்நாற்றம்

நன்றாக காற்றோட்டம் உள்ள உடைகளை அணிவதால் உடல் துர்நாற்றம் ஏற்படுவதை பெருமளவு தவிர்க்க முடியும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உடல் துர்நாற்றம் என்பது நம் அனைவருக்கும் இருக்கும் பெரும் பிரச்சனை முக்கியமாக ஏதேனும் பொது நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போதோ அல்லது வேறு ஏதேனும் கூட்டங்களுக்கு செல்லும்போதோ அதிக வியர்வை ஏற்பட்டால் இது மிகப்பெரும் சங்கடத்தை ஏற்படுத்த கூடும்.. முக்கியமாக ஒரு சிலருக்கு மற்றவர்களை விட அதிக அளவில் உடல் துல்லாற்றம் ஏற்படுகிறது. இது உளவியல் ரீதியாகவும் மன உளைச்சலைஏற்படுத்த கூடும். மேலும் அவர்களுக்கு இதனை எப்படி சரி செய்வது என்றும் தெரிவதில்லை. உடல் துர்நாற்றம் ஏற்படுவதை நம்மால் முழுவதுமாக கட்டுப்படுத்த முடியுமா என்பதைப் பற்றி வல்லுனர்களிடம் கேட்டபோது அவர்கள் சில விஷயங்களை கூறியுள்ளனர்.

இது பற்றிய விவரித்த அழகு கலை நிபுணரும் தோல் மருத்துவருமான டாக்டர் சரிஃபா ஈஷா சாஸ்,”உடலில் துர்நாற்றம் ஏற்படுவது வியர்வையினால் அல்ல. வியர்வை வெளிவரும்போது சருமத்தில் இருக்கும் பாக்டீரியாக்கள் மீது படும்போது அந்த பாக்டீரியாக்களினால் தான் உடலில் துர்நாற்றம் ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் சில வழிமுறைகளை பின்பற்றி இதனை கட்டுப்படுத்த முடியும் என விளக்கிய அவர், வியர்வை அதிகமாக வரும் பகுதிகளில் சோப்பு, அலுமினியம் குளோரைடு கலந்துள்ள ஆன்ட்டி பெஸ்பரன்ஸ், வியர்வை அதிகமாக ஏற்படும் உடல் பகுதிகளில் உள்ள முடியை நீக்குவது ஆகியவற்றின் மூலம் உடல் துர்நாற்றத்தை கட்டுப்படுத்தலாம். இவை துர்நாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாக்களை கொள்வதால் அதிக அளவில் உடல் துர்நாற்றம் ஏற்படுவது கட்டுப்படுத்துகிறது. இவை மட்டுமல்லாமல் இயற்கையான முறையிலும் கூட உடலில் ஏற்படும் அதிகப்படியான துர்நாற்றத்தை கட்டுப்படுத்த முடியும்.

சில குறிப்பிட்ட உணவு வகைகளை தவிர்ப்பதன் மூலமும், மேலும் சில குறிப்பிட்ட உணவு வகைகளை உட்கொள்வதன் மூலமும் நம்மால் உடலில் அதிக வியர்வை ஏற்படுவதையும், அதிக துர்நாற்றம் வருவதையும் தவிர்க்க முடியும். உதாரணத்திற்கு பூண்டு மற்றும் இஞ்சி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதை தவிர்த்தல் நல்லது. ஏனெனில் இவற்றின் வாசனையானது உடலில் கலந்து அவை வியர்வையின் மூலம் வெளிப்படுகிறது. இது உடல் துர்நாற்றம் போல மற்றவர்களுக்கு தெரியும். மேலும் காபி மற்றும் ஆல்கஹாலை அதிக அளவில் எடுத்துக் கொள்ளக் கூடாது ஏனெனில் இவை இரண்டுமே அதிகமாக வியர்வை வருவதற்கு வழிவகுக்கும். இவற்றிற்கு பதிலாக அதிக அளவில் சிட்ரஸ் வகை பழங்களான ஆரஞ்சு போன்றவற்றை உட்கொள்ளும் போது, அவை உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கும் அதிக வியர்வை வராமல் தடுப்பதற்கும் உதவியாக உள்ளது.

Also Read : வாய் துர்நாற்றத்தைப் போக்க இந்தக் குறிப்புகளைப் பயன்படுத்துங்கள்..!

எஸ்ஆர்வி மம்தா மருத்துவமனையின் உட்சுரப்பியல் நிபுணர் டாக்டர் சயாலி தேக் என்பவர் இதுகுறித்து கூறுகையில், “பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியின் போது ஏற்படும் ஈஸ்ட்களிலிருந்து உடல் துர்நாற்றம் அதிக அளவில் ஏற்படலாம். மேலும் பருவமடையும் போதும் பிரசவத்தின் போதும் இந்த ஈஸ்ட்டுகள் அதிக அளவில் இருப்பதால் இவற்றினால் உடல் துர்நாற்றம் ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாயின் போது இரவு நேரங்களில் ஏற்படும் அதிகப்படியான வியர்வையினாலும் உடல் வெப்பத்தினாலும் உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவற்றினாலும் உடலில் துர்நாற்றம் ஏற்படுகிறது. எனவே இதுபோன்ற நேரங்களில் உங்களை மிக கவனமாக பார்த்துக் கொள்வதன் மூலமே இதனை கட்டுப்படுத்த முடியும். ஆனால் என்ன செய்தாலும் முழுவதுமாக வியர்வை சுரப்பதை கட்டுப்படுத்தவும் அல்லது உடல் துர்நாற்றம் வராமல் தடுக்கவும் முடியாது.

ஹார்வர்ட் ஹெல்த் பப்ளிஷிங்கின் அறிக்கையின்படி, நன்றாக காற்றோட்டம் உள்ள உடைகளை அணிவதால் உடல் துர்நாற்றம் ஏற்படுவதை பெருமளவு தவிர்க்க முடியும். பேப்ரிக் வகை துணிகளான காட்டன், சில்க், மற்றும் கம்பளி ஆகியவை ஏற்றதாக இருக்கும் உடற்பயிற்சி செய்யும் போது பாலிஸ்டர் அல்லது நைலானால் செய்யப்பட்ட உடைகளை பயன்படுத்தலாம்.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Body Odour, Health, Healthy Lifestyle