ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

உங்கள் இரத்த அழுத்தத்தை பரிசோதிப்பது அவசியமா?

உங்கள் இரத்த அழுத்தத்தை பரிசோதிப்பது அவசியமா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

உங்கள் இரத்த அழுத்தத்தை அளவிடும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான 3 விஷயங்கள் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை திசுக்களில் சேர்ப்பதும் திசுக்கள் உருவாக்கும் கழிவுப் பொருட்களை வெளியேற்றுவதும் இரத்ததின் மூலம் தான் நடைபெறுகிறது. இரத்தம் நம் உடல் முழுவதற்கும் பரவுவதற்கு ஒரு விதமான அழுத்தம் இரத்தத்தால் செலுத்தப்படுகிறது. இவ்வாறு தமனிகளில் செல்லும் இரத்த ஓட்டத்தில் செயல்படுத்தப்படும் அழுத்தம் இதயத் துடிப்பில் மாற்றத்தைக் கொண்டு வருகிறது. இதுவே இரத்த அழுத்தம்  எனப்படுகிறது.

நீங்கள் யார், உங்கள் வயது, உங்கள் வாழ்க்கை முறை என்ன என்பது முக்கியமல்ல, இரத்த அழுத்தத்தை தவறாமல் பரிசோதிப்பது அனைத்து வயதினருக்கும் அவசியமாகும். ஏனென்றால் குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் இருந்தால் உங்கள் ஆரோக்கியத்திற்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆரம்பகட்டத்தில் கண்டறிந்தால் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க முடியும், கவனிக்காவிடில் இறுதியில் பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். உதாரணமாக, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களுக்கு இடையே தொடர்பு உள்ளது அனைவருக்கும் தெரிந்ததே.,

சரியான இரத்த அழுத்தத்தின் அளவு

அனைத்து இரத்த அழுத்த அளவும் இரண்டு எண்களைக் கொண்டுள்ளது. இரத்த அழுத்தம் mmHg என்று குறிப்பிடப்படுகிறது. mmHg என்பது பாதரசத்தில் மில்லிமீட்டர் ஆகும்.

உதாரணமாக உங்களது இரத்த அழுத்தம் அளவு 120/80 mmHg என்று குறிப்பிட்டால் இதில் முதல் எண் என்பது உங்களுடைய இதயம் சுருங்கும்போது உங்கள் இரத்த நாளங்களில் ஏற்படும் அதிகபட்ச இரத்த அழுத்தத்தைக் குறிக்கும். இதனை ‘சிஸ்டோலிக்’ இரத்த அழுத்தம் என்றும் குறிப்பிடப்படுகிறது. இரண்டாவது எண் என்பது உங்களின் இதயம் விரிவடையும்போது இரத்த நாளங்களில் இருக்கும் குறைந்த பட்ச இரத்த அழுத்தம்  ஆகும். இதனை ‘டயஸ்டோலிக் இரத்த அழுத்தம்’ என குறிப்பிடுவர்.

ஹார்ட் அசோசியேஷன் அறிக்கையின் படி “உங்கள் இரத்த அழுத்தமானது சுமார் 120/80 mmHg என்றால் சரியான அளவீடாக கருதப்படுகிறது”. உங்கள் இரத்த அழுத்த அளவானது 130/90 mmHg க்கு மேல் இருந்தால் அது உயர் இரத்த அழுத்தம் எனப்படுகிறது, அதேபோல 90/60 க்கு கீழே குறைவாக இருந்தால் அது குறைந்த இரத்த அழுத்தம் எனப்படுகிறது.

இருப்பினும், உங்கள் இரத்த அழுத்தத்தை சரிபார்க்க நீங்கள் ஒரு மருத்துவரிடம் சென்றாலோ அல்லது வீட்டிலேயே இரத்த அழுத்தத்தை அளவிடும்போது உங்கள் கைகள் அல்லது உடலை நிலைநிறுத்தும் விதம் உங்கள் இரத்த அழுத்த அளவீடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் தெரிந்துகொள்வது அவசியம். மேலும், உங்கள் வயது என்னவாக இருந்தாலும், உங்கள் இரத்த அழுத்த அளவீடு செய்யும் போது இரு கைகளிலும் வித்தியாசமாக இருப்பதை உணரலாம்.

உங்கள் இரத்த அழுத்தத்தை அளவிடும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான 3 விஷயங்கள் குறித்து இங்கு காண்போம்.,

* கைகளை வைக்கும் விதம்

2003ம் ஆண்டில் ஜர்னல் ஆஃப் ஹ்யூமன் ஹைபர்டென்ஷன் பத்திரிகையில் வெளியான ஒரு ஆய்வறிக்கையில், உங்கள் இரத்த அழுத்தத்தை அளவிடும்போது உங்கள் கைகளை (arms) ஒரு மேசையில் வைத்து அளவிடுவதற்கும், உங்கள் கைகள் இயல்பாக வைத்துக்கொண்டு அளவிடும் போதும் வெவ்வேறு முடிவுகளை தரும் என விளக்குகிறது. உங்கள் கைகளை ஒரு மேசையில் வைத்து இரத்த அழுத்தத்தை அளவிடும் போது உயர் இரத்த அழுத்தம் இருப்பதாக காட்டும், அதேபோல உங்கள் கைகள் இயல்பாக வைத்து அளவிடும் போது குறைவான இரத்த அழுத்தம் இருப்பதாக காட்டும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே உங்கள் இரத்த அழுத்தத்தை அளவிடும் போது உங்கள் முழங்கை உங்கள் இதயத்தின் மட்டத்தில் இருக்கும் படி பார்த்து கொள்வது சரியான முடிவுகளுக்கு வழிவகுக்கும் என ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன.

* உடல் இருக்க வேண்டிய நிலை

2007ம் ஆண்டில் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நர்சிங் வெளியிட்ட ஒரு ஆய்வு முடிவில், நீங்கள் படுத்துக் கொண்டிருக்கும்போது அல்லது எழுந்து நிற்கும்போது எடுக்கப்பட்ட இரத்த அழுத்த அளவீடுகளில் தவறு இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என குறிப்பிட்டுள்ளது. நீங்கள் எழுந்து நிற்கும்போது, உங்கள் இரத்தம் உங்கள் கால்களை நோக்கி விரைகிறது. நீங்கள் படுத்துக் கொள்ளும்போதும் இதேபோன்ற நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, உங்கள் இரத்த அழுத்தம் அளவிடப்படும்போது நேராக உட்கார்ந்துகொள்வது நல்லது.

* அளவிடும் கைகளில் உள்ள மாறுபாடு

ஹார்வர்ட் ஹெல்த் பப்ளிஷிங்கில் மேற்கொண்ட ஒரு ஆய்வில், நீங்கள் எந்த கையில் இருந்து இரத்த அழுத்தத்தை எடுக்கிறீர்கள் என்பதை பொறுத்து இரத்த அழுத்த அளவீடுகள் மாறுபடும் என்று கூறுகிறது. வெவ்வேறு கைகளில் உள்ள அளவீடுகள் இடையே உள்ள இந்த வேறுபாடு ஒரு சில mmHg-யாக இருக்கலாம், ஆனால் 10 எம்.எம்.ஹெச்.ஜிக்கு (mmHg) மேல் இருந்தால் அது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இரு கைகளிலும் உள்ள அளவீடு வித்தியாசம் 5 எம்.எம்.ஹெச்.ஜி-க்கு (mmHg)  மேல் இருந்தால் இருதய நோய் அபாயம் இருக்கிறது.

எனவே, நீங்கள் நிமிர்ந்து உட்கார்ந்திருக்கும்போது, ​​உங்கள் வலது கை உங்கள் இதயத்தின் மட்டத்தில் சரியாக இருக்கும்போது இரத்த அழுத்தத்தை அளவிடுவது தான் இரத்த அழுத்தத்தை அளவிடுவதற்கான சிறந்த வழியாகும்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Blood, Lifestyle