Home /News /lifestyle /

COVID Vaccination Certificate | கொரோனா தடுப்பூசி சான்றிதழில் செல்போன் எண்ணை மாற்றுவது எப்படி?.. இதோ ஈஸியான வழி!

COVID Vaccination Certificate | கொரோனா தடுப்பூசி சான்றிதழில் செல்போன் எண்ணை மாற்றுவது எப்படி?.. இதோ ஈஸியான வழி!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

உங்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணை ஒரே ஒருமுறை தான் மாற்றியமைக்க முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இந்தியாவில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  மத்திய மாநில அரசுகள் இதற்காக பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றது. சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது.  

    கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் நபர்களின் விவரங்களை பதிவுசெய்து. தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை பெறும் நடைமுறை உள்ளது. சிறப்பு முகாம்களில் உள்ள கூட்ட நெரிசல் காரணமாக சில நேரங்களில் தமது தகவல்களை பதிவு செய்யும்போது பிழைகள் ஏற்பட்டு விடுகின்றன. இந்த பிழைகளை நாம் சரிசெய்துக்கொள்ள முடியுமா என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. இந்த பிழைகளை எங்கு சென்று திருத்திக்கொள்வது என தெரியாமல் பலரும் அதனை அப்படியே விட்டுவிடுகின்றனர்.

    தடுப்பூசி செலுத்தும் போது அளித்த செல்போன் எண்ணை மாற்றுவது உள்ளிட்ட வசதிகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது.

    Smartphone பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் இரண்டு  செல்போன் எண்கள் வைத்திருப்பார்கள். சிலர் கவனக்குறைவாக முதல் தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் போது ஒரு எண்ணையும் , இரண்டாவது டோஸ் எடுக்கும்போது ஒரு எண்ணையும் அளித்துவிடுவார்கள். இரண்டு தவணைகளும் முதல் தவணை போல் மெசேஜ் அனுப்பப்படும். இந்த பிழைகளை எளிதாக சரிசெய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    Also Read: கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வாட்ஸ் அப்பில் பெறலாம்.. இதோ ஈஸியான வழி!

    செல்போன் எண்ணை மாற்றுவது எப்படி?

    https://www.cowin.gov.in/ என்ற கோவின் இணையதளத்தில் , நீங்கள் தடுப்பூசி செலுத்தும் போது பதிவு செய்த செல்போன் எண்ணைக் கொண்டு உள்ளே ( Sign in) நுழையுங்கள். உங்கள் செல்போன் எண்ணுக்கு ஓடிபி (OTP) எண்ணைக் கொண்டு உள்ளே செல்லவும்.

    Raise on Issue


    அங்கு உங்கள் பிரச்னைகளை தெரிவிக்க (Raise on issue) என்ற பட்டன் க்ளிக் செய்தால்..

    • கோவிட் சான்றிதழில் உங்கள் பெயர், வயது, பாலினம் திருத்தம்

    • கொரோனா சான்றிதழில் பாஸ்போர்ட் விவரங்கள் சேர்க்க

    • இரண்டு டோஸ் தடுப்பூசிகளை ஒன்றாக இணைக்க

    • மொபைல் எண் மாற்றம் என சில திருத்தங்கள் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.


    மொபைல் எண் மாற்றம் செய்வது எப்படி?


    இதில் மொபைல் எண் மாற்றம் செய்பவர்கள் (Transfer a member to new mobile number) என்பதை தேர்வு செய்யவேண்டும். இப்போது அந்தப்பக்கம் விரிவடையும்.

    மொபைல் எண் மாற்றம் செய்ய


    அதில் உங்களுடைய பெயர் மற்றும் மாற்றவேண்டிய செல்போன் எண் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.

    உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி (OTP) பதிவு செய்து. Continue  எனத் தொடரவேண்டும்.

    அதன்பின்னர் செல்போன் எண் மாற்றப்பட்டதற்கான உறுதிப்படுத்தும் தகவல் வரும்.

     

    கவனம்:

    இதில் முக்கியமான விஷயம் என்றால் இந்த சேவையை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும். அதாவது உங்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணை ஒரே ஒருமுறை தான் மாற்றியமைக்க முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Corona, Corona Vaccine, Cowin, Mobile number, Omicron

    அடுத்த செய்தி