ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கோடை காலத்தில் உண்டாகும் இதய பாதிப்புகளை தவிர்க்க நீங்கள் செய்ய வேண்டியவை..!

கோடை காலத்தில் உண்டாகும் இதய பாதிப்புகளை தவிர்க்க நீங்கள் செய்ய வேண்டியவை..!

இதய நோய்

இதய நோய்

வெப்பம் அதிகரிக்கும் போது உடல் இயக்கமும் மாறுபடுகிறது. உடலின் அனைத்து பாகங்களையும் குளுமையாக வைத்துக் கொள்ளும் பொருட்டு, ரத்தத்தை இதயம் அதிவேகமாக அனுப்பி வைக்க வேண்டியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மிகுந்த வெப்பம் கொண்ட கோடை காலத்தில் நமது உடல் வெப்பமும் அதிகரிக்கிறது. இத்தகைய சூழலில், ஒட்டுமொத்த உடலையும் குளுமையாக வைத்திருக்க நமது இதயம் சற்று கடினமாக செயல்பட வேண்டியிருக்கிறது. ஏற்கனவே இதயம் சார்ந்த பிரச்சினை இருப்பவர்கள், கோடை காலத்தில் போதிய முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடிக்கவில்லை என்றால் அவர்களுக்கு ஸ்டிரோக் அல்லது ஹார்ட் அட்டாக் ஏற்படக் கூடும்.

கோடை காலத்தில் இதயம் எப்படி பாதிக்கிறது :

வெப்பம் அதிகரிக்கும் போது உடல் இயக்கமும் மாறுபடுகிறது. உடலின் அனைத்து பாகங்களையும் குளுமையாக வைத்துக் கொள்ளும் பொருட்டு, ரத்தத்தை இதயம் அதிவேகமாக அனுப்பி வைக்க வேண்டியுள்ளது. இதனால், அதன் செயல்பாடு கடினமானதாக இருக்கிறது. உடலை முறையாக குளுமைப்படுத்தவில்லை என்றால் உங்களுக்கு ஹீட் ஸ்டிரோக் ஏற்படக் கூடும்.

ஏற்கனவே இதயம் பலவீனமாக இருப்பவர்கள் அல்லது இதயம் பழுதடைந்து இருப்பவர்களுக்கு கோடை காலத்தில் ஆன்ஜைனா, ஹீட் ஸ்டிரோக், டீஹைட்ரேஷன், ஹார்ட் அட்டாக் போன்ற பிரச்சினைகள் வரக் கூடும்.

கோடை காலத்தில் இதய நலன் காப்பது எப்படி?

உடற்பயிற்சி சீரான அளவில் இருக்க வேண்டும் - மிகுதியாக இருக்கக் கூடாது :

கோடை காலத்தில் உடல் வெப்பம் காரணமாக ஏற்கனவே இதயம் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கும். அத்தகைய சூழலில், மிகக் கடுமையான உடற்பயிற்சிகளை செய்தால், அதற்கு ஏற்ப ரத்தத்தை அதிவேகமாக இதயம் பம்ப் செய்ய வேண்டியிருக்கும். ஆகவே, உடற்பயிற்சிகளை சீராக செய்வதுடன், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையில் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும். வெயில் உச்சத்தில் இருக்கும்போது வெளியே செல்லக் கூடாது.

Liver failure : கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை உணர்த்தும் 5 அறிகுறிகள்..!

போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும் :

இதய நோயாளிகளுக்கு தண்ணீர் அருந்துவது குறித்து கட்டுப்பாடு இருக்கலாம். ஆனால், கோடை காலத்தில் அந்தக் கட்டுப்பாடை கொஞ்சம் தளர்த்தி அதிகமாக தண்ணீர் அருந்தினால் மட்டுமே உடல் வெப்பம் கட்டுக்குள் இருக்கும். உடலுக்கு போதுமான நீர்ச்சத்து கிடைக்கவும், உடல் இயல்பாக இயங்கவும் இது உதவிகரமாக இருக்கும். இதய துடிப்பை முறைப்படுத்தவும், கழிவுகளை வெளியேற்றவும் போதுமான தண்ணீர் அருந்துவது அவசியமானது.

காஃபி மற்றும் மதுவை தவிர்க்க வேண்டும் :

இந்த இரண்டு பானங்களுமே உடலின் நீர்ச்சத்தை குறைக்க கூடியவை. இதய நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு, நீர்ச்சத்து குறைவது மிக ஆபத்தான விஷயம் ஆகும். இது மட்டுமல்லாமல் கோடையில் உடல் வெப்பத்தை கட்டுப்படுத்த வேண்டும். ஆகவே, டீ, காஃபி மற்றும் மது போன்ற பானங்களை தவிர்க்கவும். அதற்குப் பதிலாக, ஜூஸ், இளநீர் அல்லது மோர் போன்றவற்றை அருந்தலாம்.

சீரான உணவு அவசியம்

காய்கறிகள், முழு தானியங்கள், பருப்புகள், சிறு தானியங்கள் போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும். காரமான, எண்ணெய் அதிகம் கொண்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.

மருத்துவர்களை ஆலோசியுங்கள் :

நீடித்த இதய நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு, கோடை காலத்தில் பிரெஷர் அதிகமாக இருக்கும். அதிக ஆக்ஸிஜன் தேவைப்படும். ஆகவே, இதுபோல சிக்கல் இருப்பவர்கள் மருத்துவர்களை ஆலோசிக்க வேண்டும்.

First published:

Tags: Heart health, Summer