ஊரடங்கு நீட்டிப்பு மக்களின் இயல்பு வாழ்க்கையை மேலும் பாதித்துள்ளது என்றே சொல்லலாம். இதுபோன்ற நேரத்தில் மக்கள் தங்களின் மனதை தளரவிடாமல் தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும் எதிர்கொள்ள வேண்டும். இதற்கிடையில் உண்டாகும் மன அழுத்தத்தை எப்படி போக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
அவை பின்வருமாறு...
நெருக்கடியான சூழலில் சோகம் , மன அழுத்தம், குழப்பம், பயம் அல்லது கோபம் ஏற்படுவது இயல்பு
நம்பிக்கைக்குரியவர்களிடம் பேசுவது ஆறுதலாக இருக்கும். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை தொடர்புக் கொண்டு பேசவும்.
வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழலில் சுகாதாரமான வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். சரியான உணவு , தூக்கம் , உடற்பயிர்சி மற்றும் வீட்டின் இருப்பவர்களிடம் உரையாடுதல் மற்றும் நண்பர்களுடன் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி மூலம் உரையாடுதல் ஆகியவை மன ஆறுதலை அளிக்கலாம்.
சூழ்நிலையை சமாளிக்க புகைப்பிடித்தல், மது அருந்துதல் அல்லது பிற மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம்.
மனதளவில் சோர்வடைந்தால் மருத்துவ நிபுணர் அல்லது ஆலோசகருடன் உரையாடவும் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்குத் தேவையான உதவிகளை பெற சரியாக திட்டமிடுங்கள்.
சரியான தகவல்களைத் தெரிந்துகொண்டு முன்னெச்சரிக்கையாக செயல்படுங்கள்.
உலக சுகாதார மையம் போன்ற நம்பகத்தனமான நிறுவனம் வழங்கும் செய்திகளை வாசியுங்கள்.
ஊடகங்களில் செய்திகளைக் கண்டு மன அழுத்தம் ஏற்பட்டால் செய்திகள் காண செலவிடும் நேரத்தைக் குறைத்துக் கொள்ளவும்.
வாழ்க்கையில் கடினமான சூழலை எதிர்கொள்ள நீங்கள் பயன்படுத்திய யுக்திகளை பட்டியலிட்டு சவாலான இச்சூழலையும் எதிர்கொள்ள முயற்சி செய்யவும்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.