தற்போதைய நவீன மற்றும் வேகமான உலகில் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உடற்பயிற்சி அத்தியாவசியமானதாகி விட்டது. பலர் பல வகையான உடற்பயிற்சிகளை விரும்பும் போது அவற்றை சரியாக மற்றும் சரியான நேரத்தில் செய்தால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்.
ஃபிட்டான மற்றும் ஆரோக்கியமான உடலை பெற வேண்டும் என்றால் கீழ்வரும் 3 உடற்பயிற்சி விதிகளை பின்பற்றுமாறு பிரபல ஊட்டச்சத்து நிபுணரான ருஜுதா திவேகர் கூறி இருக்கிறார்.
முதல் விதி: உடற்பயிற்சி என்பது குறிப்பிட்ட நன்மைக்காக இல்லை
நீரிழிவு உள்ள பலர் வாக்கிங் போவதன் மூலம் சர்க்கரை அளவை குறைக்க முடியும் என நம்புகிறார்கள். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ட்ரெட்மில்லில் நடப்பதன் மூலம் அல்லது வாக்கிங் மூலம் தங்கள் இதய பிரச்சனையை தீர்க்க முடியும் என்று நம்புகிறார்கள். மன அழுத்தம் கொண்டவர்கள்பிராணயாமா செய்வதன் மூலம் பிரச்சனையிலிருந்து விடுபடலாம் என்று நம்புகிறார்கள். ஃபிட்னஸை பொறுத்த வரை 4 வகையான S இருப்பதாக கூறுகிறார் ருஜுதா. அவை ஸ்ட்ரென்த் (strength), ஸ்டாமினா (stamina), ஸ்டேபிளிட்டி (stability) மற்றும் ஸ்ட்ரெச் (stretch). இந்த 4 S-களிலும் ஒருவர் கவனம் செலுத்தும் வரை ரத்த சர்க்கரை, ரத்த அழுத்தம், எடை இழப்பு, மன ஆரோக்கியம், அழகான தோல் மற்றும் முடி அல்லது வேறு எந்த நன்மையையும் பெற முடியாது என்கிறார்.
also read : சமைக்கும் போது உணவின் ஊட்டச்சத்துக்கள் வெளியேறாமல் பாதுகாப்பது எப்படி?
நீங்கள் ஒரே வகையான உடற்பயிற்சியை மட்டுமே தொடர்ந்து செய்தால், உடற்பயிற்சிக்கான முதலீடு மற்றும் பலன் மோசமாக இருக்கும். ஒவ்வொரு கண்டிஷனுக்கும் ஒரு வகையான உடற்பயிற்சி மட்டுமே இருப்பதாக கூறுவதை நம்ப வேண்டாம். அனைத்து வகை உடற்பயிற்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
2-வது விதி: 3 வாரங்களுக்கு மேல் உடற்பயிற்சி செய்யாமல் இருக்க கூடாது
சரியான நேரத்தில் உடற்பயிற்சி செய்யாவிட்டால், அது பலனளிக்காமல் போகும். தொடர்ச்சியாக 3 வாரங்களுக்கு மேல் உங்களது ஃபிட்னஸ் கோல்களில் இருந்து விலகி இருப்பது இதற்கு முந்தைய உங்களின் ஃபிட்னஸ் வேலைகள் அனைத்தையும் வீணாக்கி விடும். எனவே எவ்வளவு பிசியாக இருந்தாலும் 2 வாரங்களுக்கு மேல் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டாம். முழுமையாக உடற்பயிற்சி செய்ய முடியாத அளவுக்கு பிஸியாக இருந்தாலும், 10-15 நிமிடங்களில் முடியுமாறு இருக்கும் சில லேசான உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வரலாம்.
3-வது விதி: ஒவ்வொரு வாரமும் முன்கூட்டியே உடற்பயிற்சிகளை திட்டமிடுங்கள்
மற்ற வகை திட்டமிடல்களை போலவே ஒவ்வொரு வாரமும் முன்கூட்டியே உடற்பயிற்சிகளை திட்டமிடுங்கள். எனவே வார இறுதியில் அடுத்த வாரம் திங்கள் - சனி வரை நீங்கள் செய்ய போகும் உடற்பயிற்சிகளுக்கு வாராந்திர அட்டவணையை உருவாக்கும் பழக்கத்தை வளர்த்து கொள்ள வேண்டும். எந்தெந்த நாட்களில், எந்த நேரத்தில் என்னென்ன பயிற்சிகளை செய்ய போகிறீர்கள் என்பதை உள்ளடக்கிய ஒரு பிளானை உருவாக்கவும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.