நீர்ச்சத்து குறைபாடு என்பது உடலின் போதுமான நீர் இல்லாமல் வற்றிவிடுவதால் உண்டாகிறது. இதை ஈடுகட்ட போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். அதன் அறிகுறிதான் நாக்கு வறண்டு தண்ணீர் தாகம் எடுப்பது. ஆனால் உடனே உடனே தண்ணீர் தாகம் எடுக்கிறது எனில் தண்ணீர் மட்டுமல்லாது சில விஷயங்களையும் நீங்கள் செய்ய வேண்டும். அவை என்னென்ன பார்க்கலாம்.
ஜிம் செல்வோர், அத்லெட்ஸ், வளரும் குழந்தைகளுக்கு தண்ணீர் தேவை அதிகம் இருக்கும். இவர்களுக்கு எலக்ட்ரோ லைட்ஸை அதிகரிக்க குடிக்கும் தண்ணீரில் எலுமிச்சை சாறு பிழிந்து குடிக்கலாம்.
வெள்ளரி மற்றும் ரோஸ் வாட்டன் சிறு துளிகள் சேர்ப்பதால் உடல் குளுமையடையும். தண்ணீர் தாகம் குறையும்.
நன்கு கொதிக்க வைத்த நீரை சூடு தணிந்து அறையின் வெப்பநிலைக்கு குறைந்ததும் குடிக்கலாம்.
நீர்ச்சத்து நிறைந்த பழ வகைகளை சாப்பிடலாம். உதாரணத்திற்கு , ஆரஞ்சு, கமலா, திராட்சை, தர்பூசணி, முலாம் பழம், கிர்ணி பழம் , ஸ்ட்ராபெர்ரி ஆகியவை சாப்பிடலாம்.
துளசி, சீரகம், கொத்தமல்லி விதை, சோம்பு இவற்றில் ஏதாவதொன்றை தண்ணீரில் போட்டு குடிக்கலாம்.
காஃபி, டீ அதிகம் குடிப்பதை தவிருங்கள். பொறித்த உணவுகள், இனிப்பு வகைகள், மது ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.
சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்வதால் உடலுக்கு கிடைக்கும் 7 நன்மைகள்..!
உடற்பயிற்சி மெட்டாபாலிசத்தை அதிகரிக்க உதவும். இதனால் நீர்ச்சத்து வற்றுவதைக் குறைக்கலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.