Home /News /lifestyle /

PCOD பிரச்னையை எவ்வாறு எதிர்கொள்வது..? பாலிவுட் பிரபலம் பகிர்ந்துகொண்ட அனுபவம்..!

PCOD பிரச்னையை எவ்வாறு எதிர்கொள்வது..? பாலிவுட் பிரபலம் பகிர்ந்துகொண்ட அனுபவம்..!

பிசிஓடி

பிசிஓடி

அவர் பிசிஓடி இருந்த சமயத்தில் உடற்பயிற்சி, தியானம் , மன அமைதி, உணவு இந்த விஷயத்தில் ஒரு போதும் சமரசம் செய்துகொண்டதில்லை எனக் கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
இந்தியாவின் பெருமைமிகு ஃபேஷன் டிசைனர் பட்டியலில் மசாபா குப்தாவுக்கென தனித்துவம் உண்டு. தற்போது அவர் சமூகவளைதள ஈர்ப்பாளராகவும் உருவெடுத்து வருகிறார். இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். ஃபேஷன் டிசைனராக மட்டும் தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்ள விரும்பாத மசாபா மாடலாகவும், படத்திலும் சில கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். சில நேரங்களில் சமூக ஆர்வலராகவும் செயல்படுவார். இப்படி பன்முகம் கொண்ட மசாபா சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துகொண்ட செய்தி கவனம் ஈர்த்தது.

அதில் அவர் தன் பிசிஓடி பிரச்னையை எப்படி எதிர்கொண்டார் என பகிர்ந்துகொண்டுள்ளார். உலக அளவில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் பிசிஓடி பேராபத்தாக உருவெடுத்து வருகிறது. அந்த வகையில் தான் அதிலிருந்து எப்படி போராடி மீண்டுள்ளேன் என கூறியுள்ளார்.

அவர் பிசிஓடி இருந்த சமயத்தில் உடற்பயிற்சி, தியானம் , மன அமைதி, உணவு இந்த விஷயத்தில் ஒரு போதும் சமரசம் செய்துகொண்டதில்லை எனக் கூறியுள்ளார். அதாவது அவர் “ உங்கள் வாழ்க்கையில் உடற்பயிற்சி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாற்றுங்கள். உங்கள் குடும்ப வாழ்க்கை மற்றும் வேலை, தொழில் இரண்டிலும் அவசரமின்றி முன்கூட்டிய திட்டங்களுடன் செயல்படுங்கள். தேவையற்ற டென்ஷன்களை தவிர்த்து மன நிம்மத்தியுடன் வாழ கற்றுக்கொள்ளுங்கள். இதை ஒவ்வொரு நாளும் மறவாதீர்கள்.



 




View this post on Instagram





 

A post shared by Masaba (@masabagupta)






நான் தினசரி காலை 7 - 9 மணி வரை உடற்பயிற்சி, நடைபயிற்சி , யோகா இப்படி எதையாவது கட்டாயம் செய்வேன். அதேபோல் வெளிப்புற உணவுகளை ஒருபோதும் ஆர்டர் செய்து சாப்பிட மாட்டேன். இரவு நீண்ட நேரம் விழித்திருக்க மாட்டேன். மன அழுத்தத்தை கொண்டிருக்க மாட்டேன். என் அமைதியை தொந்தரவு செய்யும் செல்ஃபோன் அழைப்புகளை ஏற்க மாட்டேன். கவனங்களை சிதர விட மாட்டேன். வீட்டு உணவுகளை மகிழ்ந்து உண்டேன். நிறைய தண்ணீர், பழம், சாப்பிட்டேன். எப்போதும் உடலை சுருசுருப்பாகவும், நீரேற்றத்துடனும் வைத்திருப்பேன். எத்தனை ஹார்மோனல் பிரச்னைகளை சந்தித்தாலும் அவற்றை எல்லாம் போராடி கடந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிடுவேன் எனக் கூறியுள்ளார்.

Depression : மனச்சோர்வு எதனால் ஏற்படுகிறது? அறிகுறிகள் மற்றும் காரணங்கள் என்ன..?

இன்று பிசிஓடி காரணமாக அனுபவிக்கும் மற்ற பிரச்னைகளும் பெண்களிடையே அதிகரித்துவிட்டது. குறிப்பாக அதிக உடல் பருமன், ஹார்மோன் மாற்றங்களால் உண்டாகும் மன அழுத்தம், மனச்சோர்வு, முடி உதிர்வு , சிலர் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கும் உள்ளாகியிருக்கின்றனர். இந்த பிரச்னையானது முறையற்ற வாழ்க்கை முறை, உடல் உழைப்பின்மை போன்ற காரணங்களால்தான் உண்டாகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே மசாபாவைப் போல் நீங்களும் உங்கள் வாழ்க்கை முறையில் செய்யும் தவறுகளை சரி செய்தாலே பிசிஓடி பிரச்னையை சரி செய்யலாம்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Masaba Gupta, PCOD, Weight gain, Women Health

அடுத்த செய்தி