சிறுநீர் போகும் இடத்தில் கடுமையான எரிச்சல். அதோடு முட்டிக்கொண்டு சொட்டு சொட்டாக வந்துகொண்டெ இருந்தால் அது உடலளவில் கடுமையான அசௌகரியத்தை உண்டாக்கும் அல்லது அடிக்கடி திடீரென அறிகுறியே இல்லாமல் அவசரமாக முட்டிக்கொண்டு வந்துவிடும். இதற்குக் காரணம் உங்கள் சிறுநீர்ப்பையின் தசைகள் திடீரென சுருங்கும்போது அதிகப்படியான சிறுநீர் ஏற்படுகிறது.
இதை உணவின் மூலம் குணப்படுத்தலாம். எவ்வாறு..?
வாழைப்பழம் : வாழைப்பழத்தில் பொட்டாசியம், ஃபைபர் இருப்பதால் சிறுநீர்ப்பைக்கு சிறந்தது.
நட்ஸ் : பாதாம் அல்லது வேர்க்காலை சாப்பிட்டால் கூட இஹை சரிசெய்யலாம். இதில் அதிக புரோட்டின் மற்றும் நார்ச்சத்து உள்ளது.
வெள்ளரிக்காய் : வெள்ளரி கோடையில் கிடைக்கக் கூடிய எளிய காய். இதை ஒரு பெரிய பவுல் நிறைய நறுக்கி சாப்பிடலாம்.
பருப்பு மற்றும் கொட்டை வகைகள் : பச்சை பயிறு, துவரம்பருப்பு, கொண்டைக்கடலை என தானியம், பருப்பு, கொட்டை வகைகளை உட்கொள்ளலாம்.
தவிர்க்க வேண்டிய உணவுகள் :
கார உணவு : அதிக காரம், எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிறுங்கள்.
வேப்பிலை சாறு கொரோனாவை எதிர்த்துப் போராடும் ஆற்றலைக் கொண்டுள்ளது - ஆய்வு
காஃபி : காஃபி அருந்துவதைத் தவிறுங்கள். இது சிறுநீரகத்தில் அதிக நீரை உண்டாக்கும். எரிச்சலை அதிகரிக்கும்.
சிட்ரஸ் பழங்கள் : எலுமிச்சை, ஆரஞ்சு, அன்னாசி, தக்களி என சிட்ரஸ் பழங்களைத் தவிறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kidney Disease, Urine