ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மதிய உணவு சாப்பிட்டவுடனே தூக்கம் வருகிறதா? இதைத் தெரிந்து கொள்ளுங்கள்!

மதிய உணவு சாப்பிட்டவுடனே தூக்கம் வருகிறதா? இதைத் தெரிந்து கொள்ளுங்கள்!

தூக்கம்

தூக்கம்

மதிய உணவு சாப்பிட்ட பின் தூக்கம் வருகிறது என்றால் அது ஒரு குறைப்பாடக கருதப்படுகிறது. அதற்கு நாம் எடுத்துக்கொள்ளும் உணவு முறையே காரணமாக உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இரவு எவ்வளவு நன்றாகத் தூங்கினாலும் சரி, தூங்கவில்லை என்றாலும் சரி மதிய நேரத்தில் சில நிமிடங்களாவது தூங்குவது மிகப்பெரிய புத்துணர்ச்சியைத் தரும். Nap என்று சொல்லப்படும் 15 முதல் 30 நிமிடம் வரை தூங்கி எழுந்து கொள்வது உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி அளித்து எஞ்சிய பொழுதுக்காக, சுறுசுறுப்பாக வேலை செய்ய வைக்கும்.

சிலருக்குக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் மதிய உணவு சாப்பிட்ட உடனேயே கண்கள் சொருகி தூக்கம் சொக்கும். அவ்வாறு மதிய உணவு சாப்பிட்டவுடன் தூக்கம் வருவது இயல்பானதுதானா என்றால் இல்லை! இது ஈட்டிங் டிஸ்ஆர்டர் என்று ஒருவகையான குறைபாடு. மதிய நேரத்தில் குட்டித்தூக்கம் பல நேரங்களில் நீண்ட நேரத் தூக்கமாக மாறி, மிகவும் சோர்வாக்கி விடும். அது மட்டுமில்லாமல், கல்லூரி, அலுவலகம் என்றெல்லாம் எப்படித் தூங்க முடியும்? மதிய உணவு சாப்பிட்ட பின் தூங்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

மதிய உணவு சாப்பிட்ட பின் தூக்கம் வருகிறது என்றால், இந்த மூன்று விஷயங்களைப் பின்பற்ற வேண்டும்.

1. புரதச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்க்க வேண்டும்

2. மாவுச் சத்து நிறைந்த உணவுகளைக் குறைவாகச் சாப்பிட வேண்டும்

3. மதிய உணவு நேரத்தில், சில உணவுகள் ஆபத்து, அவற்றைத் தவிர்க்க வேண்டும்

பொதுவாகவே மதிய நேரத்தில் அரிசிச் சாதம் கொஞ்சம் அதிகம் சாப்பிட்டாலே, மந்தமாகத் தோன்றும். எனவே மதிய நேரத்தில் மாவுச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடக்கூடாது. அதற்காக முழுவதுமாக கார்ப் உணவுகளைத் தவிர்க்கக் கூடாது. அரிசிச் சாதம் அல்லது சப்பாத்தி உடன், புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மதிய உணவு பின் வரும் தூக்கம்

அசைவ உணவுகளில் புரதச் சத்து நிறைந்து இருக்கிறது. எனவே சிக்கன், மட்டன் அல்லது மீனைப் பொறிக்காமல், கிரில் செய்து, வேக வைத்து டோஸ்ட் செய்து மதிய உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதிலிருக்கும் புரதச் சத்து உங்களுக்கு ஆற்றல் தருவதோடு மட்டுமல்லாமல் குறைவான கலோரிகளை உட்கொள்ள வைக்கிறது. மேலும், மதிய நேரத்தில் சோர்வையும் தூக்கத்தையும் தடுக்கிறது.

இதற்கு அடுத்ததாகக் காய்கறிகள் மற்றும் பழங்களின் கலவையைச் சாப்பிடும் பொழுது அது உங்கள் மனநலத்தையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

பழங்கள் மற்றும் காய்கறிகளில் வைட்டமின் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துக்கள் உள்ளன. இவை உங்களைப் புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும். இதனால் நீங்கள் தூங்குவதைத் தவிர்க்கலாம்.

சரியான உணவுகளை எடுத்துக் கொள்வது முக்கியமாக உள்ளது

சரிவிகித உணவு என்று கூறும் வகையில் கொஞ்சம் சாதம், முட்டை, அசைவ உணவு சாப்பிடுவார்கள் ஏதேனும் அசைவம், மற்றும் காய்கறிகள், கீரை உணவு ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். காய்கறிகளைக் கூட வேக வைத்து அல்லது கூட்டு போலச் சமைத்துச் சாப்பிடலாம். இதன் மூலம் மதியம் தூங்குவதைத் தவிர்க்க முடியும்.

Also Read : ஹிமாச்சலம் முதல் தமிழ்நாடு வரை.. யோகா டூரிசம் செய்ய ஏற்ற 5 இடங்கள்

மாவுச்சத்து என்று சொல்லும் பொழுது அரிசியை, உருளைக்கிழங்கு, அல்லது சப்பாத்தி தான் பெரும்பாலானவர்களுக்குத் தோன்றும். ஆனால் அரிசியைத் தவிர்த்து மைதா மாவில் கோதுமை மாவில் செய்யப்படும் வேறு சில உணவுகளும் அதிக மாவுச்சத்து நிறைந்தவை தான். உதாரணமாக மதிய உணவுக்கு எனக்கு வழக்கமாகச் சாப்பிடும் மீல்ஸ் அல்லது மினி மீல்ஸ் மற்றும் சாத வகைகள் எதுவும் தேவையில்லை;

நான் அதற்குப் பதிலாக நூடுல்ஸ் அல்லது ஒரு பர்கர் அல்லது ஒரு மினி பீட்சா சாப்பிட்டுக் கொள்வேன் என்று நீங்கள் கூறினால், நீங்கள் வழக்கமாகச் சாப்பிடும் மதிய உணவை விட இந்த உணவுகளில் அதிக கலோரிகள் மற்றும் அதிக மாவுச்சத்து உள்ளன. இவற்றை சாப்பிட்டால் உடனடியாக கண்களைச் சுழற்றிக் கொண்டு தூக்கம் வரும். எனவே மதிய நேரத்தில் பீட்சா, நூடுல்ஸ், பர்கர், பாவ்பாஜி, பிரெட் வகைகள் மற்றும் எண்ணெய்யில் பொரிக்கப்பட்ட உணவுகளை நீங்கள் முழுவதுமாக தவிர்க்க வேண்டும்.

Published by:Janvi
First published:

Tags: Health tips, Sleep