முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / நோயாளிகளின் வாழ்நாள் அதிகரிக்க செய்ய வேண்டியது இதுதான் - ஆய்வில் வெளியான தகவல்

நோயாளிகளின் வாழ்நாள் அதிகரிக்க செய்ய வேண்டியது இதுதான் - ஆய்வில் வெளியான தகவல்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

நோயாளிகளுக்கு குடும்பத்தினருடனான சந்திப்பின்போதும், பிற சந்திப்புகளின் போதும் நம்பிக்கை அளித்தால் அவர்களின் வாழ்நாள் 29 சதவிகிதம் வரை உயரும் வாய்ப்பு இருக்கிறதாம்.

  • Last Updated :

ஒருவருக்கு உடல் நலத்துடன் மனநலமும் முக்கியம். நோயால் ஏற்படும் பாதிப்பை விட, நோய் குறித்த அச்சத்தால் ஏற்படும் பாதிப்பே அதிகம் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரிக்கும் சூழலில் பலருக்கு நோய்கள், அதன் அறிகுறிகள் ஆகியவற்றை அறிந்துகொள்ள முடிகிறது. ஆனாலும் அவை ஒரு வித அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.

கொரோனா இரண்டாவது அலையால் மக்கள் பலரும் உறவினர்களையும், நண்பர்களையும் இழந்து வருகின்றனர். கொரோனா பற்றிய துயரச் செய்திகள் மக்களை பீதியடைய வைக்கிறது. அத்தகைய செய்திகள் மக்களின் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் என மன வல்லுநர்கள் ஆலோசனை தெரிவித்து வருகின்றனர்.

உதாரணமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் 85% சதவிகிதம் பேருக்கு தீவிர பாதிப்பு ஏற்படவில்லை எனவும் அவர்களுக்கு நோய் குறித்த அச்சமே பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இப்படி இருக்க மருத்துவர்களுக்கும் நோயாளிக்கும் தனிப்பட்ட முறையினாலான உறவு அவர்களின் வாழ்நாள் அதிகரிக்க செய்யும் என்கிறது சமீபத்திய ஆய்வு. PLOS Medicine என்ற இதழில் வெளியான ஆய்வு முடிவில் ஒருவருடனான உறவு முறை நமது நடவடிக்கைகளிலும் உடல் ஆரோக்கியத்திலும் எதிரொலிக்கும் என்கிறது. நோயாளிகளுக்கு ஒருவருடன் ஆரோக்கியமான மற்றும் தனிப்பட்ட முறையிலான உறவுமுறை அவர்களின் துன்பம் குறைத்து, வாழ்நாளை அதிகப்படுத்த உதவும். இந்த ஆய்வு 40,000 நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்டிருருக்கிறது.

ஒரு நோயாளிகள் என்றில்லை ஒருவருக்கு சிறப்பான உறவுகள் கிடைத்தால் அவர்களின் வாழ்நாள் மற்றும் ஆரோக்கியம் அதிகரிக்கும். தற்போது பெரும்பாலான மருத்துவமனைகள் , தனியாக மன நலம் மருத்துவரை வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. ஆனால் சிறிய மருத்துவமனைகள் இன்னும் இந்த வசதியில்லை.

நோயாளிகளுக்கு குடும்பத்தினருடனான சந்திப்பின்போதும், பிற சந்திப்புகளின் போதும் நம்பிக்கை அளித்தால் அவர்களின் வாழ்நாள் 29 சதவிகிதம் வரை உயரும் வாய்ப்பு இருக்கிறதாம். அதாவது இதய பாதிப்பு உள்ள ஒருவருக்கு அதற்கான சிகிச்சையுடன் பிறருடனான உறவுமுறை வளர்ப்பதன் மூலம் அவர் உடல் நலம் மேம்படைகிறதாம். இந்த உறவுமுறை அவர்களது குடும்பத்தினருடனோ அல்லது நலம் விரும்பிகளுடனோ இருக்கலாம்.

இதனையடுத்து நோயாளிகளுக்கு சமூக தொடர்பை ஏற்படுத்தவதன் அவசியத்தை உணர்த்தும் இந்த ஆய்வு, எல்லா மருத்துவமனைகளும் இதனை நடைமுறைத்த கோரிக்கைவிடுத்துள்ளது. ஒருவருடனான நேர்மறையான உறவு முறை நம் வாழ்நாளை அதிகரிக்கிறது என்பதை இந்த ஆய்வு தெளிவாக தெரிவிக்கிறது. இந்த கோரோனா காலக்கட்டங்களில் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் சூழலில், குறைந்த பட்சம் நம் உறவினர்களிடமோ, நண்பர்களிடமோ போன் மூலம் உரையாடுவது நம் நலனை மேம்படுத்தும். அன்பை வளர்ப்போம்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Corona, Health, Mental Health