ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சூரிய கிரகணத்தின் போது நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன..?

சூரிய கிரகணத்தின் போது நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன..?

சூரிய கிரகணத்தின் போது நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன..?

சூரிய கிரகணத்தின் போது நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன..?

சூரிய கிரகணத்தின் போது சரியான பாதுகாப்பு இல்லாமல் வெறும் கண்களால் சூரியனை பார்ப்பது மிகவும் ஆபத்தான செயல் என்கிறார்கள் நிபுணர்கள்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பூமி மற்றும் சூரியனுக்கு இடையே சந்திரன் ஒரே நேர்கோட்டில் கடந்து செல்வது தான் சூரிய கிரகணம். இன்று நடைபெற உள்ள சூரிய கிரகணமானது தமிழ்நாட்டில் சென்னை, கோவை, ஊட்டி மற்றும் ஐதராபாத், விசாகப்பட்டினம், பாட்னா, பெங்களூரு, திருவனந்தபுரம், மங்களூரு, கான்பூர், லக்னோ, நாக்பூர், வாரணாசி ஆகிய நகரங்களில் ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக சூரிய கிரகணம் தெரியும்.

  சென்னையில் 5.14 மணிக்கு தொடங்கி 5.50 மணிக்கே முடிந்துவிடும், அதிகபட்சம் 8 விழுக்காடு மட்டுமே சூரிய மறைப்பு இருக்கும். இந்நிலையில் சூரிய கிரகணம் நம் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதை இங்கே அறிந்து கொள்ளலாம்.

  கண்கள்:

  சூரிய கிரகணத்தின் போது சரியான பாதுகாப்பு இல்லாமல் வெறும் கண்களால் சூரியனை பார்ப்பது மிகவும் ஆபத்தான செயல் என்கிறார்கள் நிபுணர்கள். இது சோலார் ரெட்டினோபதி அல்லது மைய பார்வை இழப்பு, பார்வை சிதைவு மற்றும் விழித்திரை தீக்காயங்கள் உள்ளிட்ட சில பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

  செரிமான பிரச்சனைகள்:

  கிரகணத்தின் போது சாப்பிடுவது அல்லது தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்பது பழங்காலத்திலிருந்தே கடைபிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கைகளில் ஒன்று. கிரகணங்களின் போது சாப்பிடுவது செரிமான செயல்முறையை மெதுவாக்குகிறது. சூரிய கிரகணத்தின் கதிர்கள் சமைத்த உணவை பாதிக்கலாம் என்று நம்பப்படுகிறது. அஜீரண கோளாறு மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.

  Also read :  உங்கள் வயிற்று வலிக்கு காரணம் என்ன..? அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்!

  கர்ப்பிணிகள்:

  கர்ப்பிணிப் பெண்கள் சூரிய கிரகணத்தின் போது வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். பண்டைய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிடத்தின் படி, சூரிய கிரகணம் கர்ப்பத்திற்கு மோசமானதாக கருதப்படுகிறது. கர்ப்பமாக உள்ளவர்கள் சூரிய கிரகணத்தின் போது வீட்டிற்குள் இருக்க வேண்டும், வெளியே செல்வது கருவில் உள்ள குழந்தைக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்த கூடும் என்று நம்பப்படுகிறது. எனினும் இதற்கு அறிவியல் சான்றுகள் எதுவும் இல்லை.

  மனநிலை மாற்றங்கள்:

  சூரிய கிரகணம் ஒரு நபரின் ஒட்டுமொத்த மனநிலையை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த வானியல் நிகழ்வு விஷயங்களில் கவனம் செலுத்துவதை கடினமாக்கும் என்று நம்பப்படுகிறது.

  Also read : மூன்று வேளையிலும் உணவை இந்த குறிப்பிட்ட நேரத்தில்தான் சாப்பிடனுமாம்..!

  சூரிய கிரகணத்தின் போது என்ன செய்ய வேண்டும்?

  முடிந்தவரை வீட்டிற்குள் இருங்கள். வேடிக்கைக்காக கூட கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முயற்சிக்காதீர்கள். உங்கள் வழக்கமான டயட்டைபின்பற்றுங்கள் மற்றும் உங்களை ஹைட்ரேட்டாக வைத்திருங்கள்.

  சூரிய கிரகணம் எப்படி இருக்கும்.?

  இது ஒரு பகுதி கிரகணமாக இருக்கும், அதாவது சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்காது. கிரகணத்தின் போது சூரியன் பிறை வடிவத்தை கொண்டிருக்கும்.

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Eclipse, Solar eclipse