ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

குறட்டை விடுவது நுரையீரல் உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கிறதா..? நிபுணர்களின் விளக்கம்

குறட்டை விடுவது நுரையீரல் உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கிறதா..? நிபுணர்களின் விளக்கம்

குறட்டை

குறட்டை

sleep apnea : இது ஒரு நோயல்ல, ஆனால் தூக்கத்தில் மூச்சுத்திணறல், நாள்பட்ட ஹைபோக்செமிக் நுரையீரல் நோய் மற்றும் இடது இதய செயலிழப்பு போன்ற அடிப்படை சுகாதார நிலைமைகளின் விளைவாகும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

எப்போதும் நாம் ஆரோக்கியமாக இருக்க கட்டாயம் செய்ய வேண்டியவற்றில் தினசரி உடற்பயிற்சிகள் மற்றும் நல்ல ஆரோக்கியமான உணவுகள் மிக முக்கிய பங்கு வகிப்பதை நாம் அறிவோம். இவ்விரண்டை போலவே ஒரு நபர் தூங்கும் தூக்கத்தின் தரம் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு முக்கியமானது என்பது பலருக்கும் புரிவதில்லை.

தூக்கத்தின் போது ஏற்படும் கண்டறியப்படாத மூச்சுத்திணறல் அதாவது அன்டைக்னைஸ்டு ஸ்லீப் ஆப்னியா (Undiagnosed Sleep Apnea) காரணமாக வாழ்க்கைத் தரம் குறைவதோடு, இதய மற்றும் வளர்சிதை மாற்ற ஆரோக்கிய அபாயத்தை நேரடியாக கொண்டுள்ளது. தவிர இது நுரையீரல் உயர் ரத்த அழுத்தத்தையும் (Pulmonary Hypertension) ஏற்படுத்துகிறது.

ஸ்லீப் ஆப்னியா என்றால் என்ன?

ஸ்லீப் ஆப்னியா என்பது ஒரு தூக்க கோளாறு. இது உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய பிரச்சனை போன்ற கடும் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட வழிவகுக்கும். இதனை கண்டறிந்து உரிய சிகிச்சை பெறாவிட்டால், தூக்கத்தின் போது சுவாசத்தில் அடிக்கடி பிரச்சனை ஏற்படுத்துகிறது. இரவு முழுவதும் தூங்கினாலும் கூட உரத்த குறட்டை மற்றும் பகல்நேரத்தில் சோர்வை ஏற்படுத்துகிறது. குறிப்பாக இந்த கோளாறு பெண்களை விட ஆண்களை அதிகம் பாதிக்கிறது. குறிப்பாக இதனால் அதிகம் பாதிக்கப்படுவோர் எடை அதிகமுள்ள வயதான ஆண்கள் தான். சராசரியாக எடையுள்ள நபர்களில் 3 சதவீதத்தினருக்கு ஸ்லீப் ஆப்னியா ஏற்பட்டால், உடல் பருமனானவர்களில் 20 சதவீதத்திற்கும் அதிகமானவர்களை பாதிக்கிறது.

இந்த கோளாறின் போது ஆக்ஸிஜன் மற்றும் ரத்த ஓட்டத்தை பாதிக்கப்பட்டவர் மீண்டும் மீண்டும் இழப்பதன் காரணமாக அவரது நுரையீரல் தமனியின் அழுத்தம் அதிகரிக்கும். சுவாச சிகிச்சை மற்றும் தூக்க மருந்து ஆலோசனை பிரிவில் பிரபலமாக உள்ள மருத்துவரான வினய் காண்ட்ரூ கூறுகையில், இந்த தூக்க கோளாறு உயர் ரத்த அழுத்தம், இன்சுலின் ரெசிஸ்டன்ஸ், நுரையீரல் வாஸ்குலர் டிசீஸ், இஸ்கிமிக் ஹார்ட் டிசீஸ், பக்கவாதம், இதய செயலிழப்பு மற்றும் சில நேரங்களில் திடீர் மரணம் ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கும் என்று எச்சரிக்கிறார்.

சிறுநீரகக் கல் பிரச்சனை.... வலியை குறைக்க உதவும் இந்த உணவுகளை தினமும் சாப்பிடுங்கள்..!

நுரையீரல் உயர் ரத்த அழுத்தம் என்றால் என்ன? ஸ்லீப் ஆப்னியாவுடன் எவ்வாறு தொடர்புடையது..

இது ஒரு நோயல்ல, ஆனால் தூக்கத்தில் மூச்சுத்திணறல், நாள்பட்ட ஹைபோக்செமிக் நுரையீரல் நோய் மற்றும் இடது இதய செயலிழப்பு போன்ற அடிப்படை சுகாதார நிலைமைகளின் விளைவாகும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். நுரையீரல் உயர் இரத்த அழுத்தமானது நுரையீரலில் உள்ள தமனிகளையும், இதயத்தின் ஒரு பக்கத்தையும் பாதிக்கிறது மற்றும் நுரையீரலில் உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. நுரையீரல் உயர் இரத்த அழுத்தம் நுரையீரலில் உள்ள தமனிகளையும் இதயத்தின் வலது பக்கத்தையும் பாதிக்கிறது. எளிமையாக சொல்வதென்றால் நுரையீரலின் தமனிகள் தடிமனாகி மற்றும் அதன் பாதை குறுகுவதால், ரத்த குழாயில் ஏற்படும் அதிக ரத்த அழுத்தம் காரணமாக ஏற்படுகிற ஒரு நோய் நிலை ஆகும்.

ஸ்லீப் ஆப்னியா என்பது நுரையீரல் தமனி அழுத்தம் அதிகரிக்க வழிவகுக்கிறது. மூச்சுத்திணறல் காரணமாக ரத்த ஓட்டத்தில் ஆக்ஸிஜனை மீண்டும் மீண்டும் இழப்பதால் இந்த அதிகரிப்பு ஏற்படுகிறது. இதன் விளைவாக ரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைகிறது.மூச்சுத்திணறல் என்பது 10-வினாடிகள் (அல்லது அதற்கு மேல்) சுவாசம் தடைபடுவது என வரையறுக்கப்படுகிறது.

ஸ்லீப் ஆப்னியா அறிகுறிகள்..

அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் ஆப்னியா (Obstructive Sleep Apnea) உள்ள ஒருவர் சுவாசிக்க முயற்சித்தாலும், மேல் காற்றுப்பாதை அடைப்பு காரணமாக மூக்கு அல்லது வாயிலிருந்து காற்று வெளியே அல்லது உள்ளே செல்லாது. அதே போல சென்ட்ரல் ஸ்லீப் ஆப்னியா (Central Sleep Apnea) கொண்டவர்களுக்கு, சுவாசத்தை கட்டுப்படுத்தும் தசைகளுக்கு அவர்கள் மூளை சரியான சிக்னல்களை அனுப்பாததால் தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படும். தினசரி தவறாமல் 7 - 8 மணிநேரம் நிம்மதியான தூக்கமே இந்த நிலை ஏற்படுவதை தடுக்கும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Lungs health, Sleep Apnea