ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கருச்சிதைவுக்கு பின் உண்டாகும் மனச்சோர்வை கையாள்வது எப்படி..? உங்களுக்கான சில டிப்ஸ்

கருச்சிதைவுக்கு பின் உண்டாகும் மனச்சோர்வை கையாள்வது எப்படி..? உங்களுக்கான சில டிப்ஸ்

கருச்சிதைவு

கருச்சிதைவு

ஆவலோடு காத்துக்கொண்டிருக்கும் தாய்மார்களுக்கு குழந்தை கருவிலேயே இறந்துவிடுகிறது அல்லது கரு கலைந்து விடுகிறது என்பது உடல் ரீதியான வலியைத் தவிர்த்து மனரீதியாக மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷன் என்று கூறப்படும் என்பது பின் மகப்பேறு மனச்சோர்வு என்று கூறப்படுகிறது. அதாவது குழந்தை பிறந்த பின்பு பெண்ணின் உடலில் ஏற்படும் மாற்றங்கள், குழந்தை பிறக்கும் பொழுது கர்ப்பிணி அனுபவித்த வலி வேதனை அல்லது அறுவை சிகிச்சையின் ரணம், ஆகியவற்றோடு மருந்துகள், தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் சேர்ந்து மன அழுத்தத்தையும் மனச்சோர்வையும் உண்டாக்குகிறது.

போஸ்ட்பார்ட்டம் என்பது குழந்தை பிறந்த பிறகு இருக்கும் காலகட்டம் ஆகும். குழந்தை பிறந்த 3 – 4 மாதங்களுக்கு சரியாக தூங்க முடியாது, உடல் பலவீனமாக இருக்கும், உடல் மற்றும் மன நலம் குழந்தை பிறப்புக்கு முன்பு இருந்த நிலைக்கு வருவதற்கு சில மாதங்கள் முதல் ஓரிரு வருடங்களாவது ஆகும். இந்த காலகட்டத்தில் குழந்தை பெற்ற பெண்களுக்கு போதிய அன்பும் ஆதரவும் உதவியும் இல்லாமல் போனால் அவர்கள் போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷனுக்கு எளிதாக உள்ளவர்கள். சமீப காலத்தில் இந்த பிரச்சனையால் பல பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

குழந்தை பிறகு பிறந்த பிறகு மட்டும் தான் இவ்வகையான மன சோர்வு உண்டாகுமா என்றால் இல்லை. கருச்சிதைவு அதாவது மிஸ்கேரேஜ் எனப்படும் கரு தங்காமல் போவது அல்லது கருச்சிதைவு ஏற்படுவதால் கூட பெண்களுக்கு இந்த மன அழுத்தம் ஏற்படும். ஒரு குறைப்பிரசவம் அல்லது கருச்சிதைவு என்பது 2 அல்லது 3 குழந்தை பிறப்புக்கு சமம் என்று பொதுவாக கூறுவார்கள்.

குழந்தை பிறந்த பிறகு ஒரு பெண்ணின் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமானதோ அதே அளவுக்கு கருச்சிதைவு ஏற்பட்ட பிறகும் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மிகவும் கவனமாக பராமரிக்க வேண்டும். மிஸ்கேரேஜ் உடலை மட்டும் பாதிக்காமல் பெண்களின் மன நலத்தையும் பெரிய அளவில் பாதிக்கும்.

கருச்சிதைவு ஒரு பெண்ணை எப்படி பாதிக்கும் மற்றும் அதற்கான தீர்வுகள் என்ன என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்

கருச்சிதைவு அல்லது மிஸ்கேரேஜ் என்றால் என்ன..?

கருத்தரித்த பெண்கள் பொதுவாக 3 – 4 மாதங்கள் வரை மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இதற்கு காரணம் குழந்தை கருவில் ஆரோக்கியமாக வளர வேண்டும் என்பதுதான். இந்த காலகட்டத்தில் தீவிரமாக வேலை அல்லது உடல் உழைப்பை எதுவும் குறைந்தது மூன்று மாதங்களுக்காவது பெண்கள் தவிர்க்க வேண்டும்.

மாதவிலக்கு காலத்தில் சிறுநீர் கழிக்கும்போது மிகுந்த வலி ஏற்படுகிறதா..? உங்களுக்கு இந்த பிரச்சினை இருக்கலாம்..!

அதுமட்டுமின்றி வேறு ஏதேனும் உடல் நல கோளாறுகள் இருந்தால் முழு ஓய்வு எடுக்கவும் மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இத்தகைய காலகட்டத்தில் குழந்தை வளர்ச்சி அடையாமல் உடல் பலவீனத்தால் அல்லது வ இரு காரணத்தால் கருவிலேயே கலைவது தான் மிஸ்கரேஜ் என்று கூறப்படுகிறது. இது கருத்தரித்த ஆறு வாரங்கள் முதல் நான்கு மாதங்கள் வரை ஏற்படும்.

கர்ப்பமாக இருப்பது எவ்வளவு நிறைய சந்தோஷத்தை தரும் என்பது அனைவருக்குமே தெரியும். இந்நிலையில் குழந்தை ஒவ்வொரு நாளும் எப்படி வளர்கிறது என்று ஆவலோடு காத்துக்கொண்டிருக்கும் தாய்மார்களுக்கு குழந்தை கருவிலேயே இறந்துவிடுகிறது அல்லது கரு கலைந்து விடுகிறது என்பது உடல் ரீதியான வலியைத் தவிர்த்து மனரீதியாக மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

கருச்சிதைவால் ஏற்படும் டிப்ரஷன் அறிகுறிகள்

கருச்சிதைவால் பாதிக்கப்பட்ட 43% பெண்களுக்கு டிப்ரஷன் ஏற்படுகிறது. அதன் அறிகுறிகள்

  • நம்பிக்கையின்மை, எதிலும் ஆர்வமின்மை
  • வெறுமையாக உணர்தல்
  • எடை குறைவு
  • தூக்கமில்லாமல் போவது
  • குற்ற உணர்வால் பாதிக்கப்படுவது, தன்னையே குற்றம் சொல்லிக் கொள்வது
  • ஆற்றல் இல்லாமல் இருப்பது
  • பிடித்த விஷயங்களை செய்ய மறுப்பது

கர்ப்ப காலத்தில் அதிக நேரம் தூங்கிக்கொண்டே இருப்பதும்... ஓய்வு எடுப்பதும் ஆபத்தா..? பதில் இதோ...

இதற்கான சிகிச்சை

கருச்சிதைவைப் பொறுத்தவரை, மகப்பேறு மருத்துவரிடம் உரிய சிகிச்சைகளை மேற்கொண்டு, மருந்துகள் பெற்றுக்கொள்ளலாம். இதனால் ஏற்படும் மன ரீதியான பாதிப்புக்கு உரிய கவுன்சிலிங்கை பெற வேண்டும் தீவிரமான மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை கோளாறு இருந்தால் அதற்குரிய மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையோடு சாப்பிடலாம் மருந்துகள் மற்றும் மருத்துவர்களின் சிகிச்சைகள் தவிர கணவன் மற்றும் குடும்பமும் ஆதரவாகவும் அன்பாகவும் இருப்பது போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷனில் இருந்து வெளிவர உதவும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Depression, Post Pregnancy Depression, Pregnancy Miscarriage