• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கருச்சிதைவுக்கு பிறகு பெண்களுக்கு ஏற்படும் மனச்சோர்வை எப்படி கையாளுவது..?

கருச்சிதைவுக்கு பிறகு பெண்களுக்கு ஏற்படும் மனச்சோர்வை எப்படி கையாளுவது..?

மனச்சோர்வு

மனச்சோர்வு

பொதுவாக கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள், உடல் மற்றும் மன மாற்றங்கள் அதிகம் ஏற்படும்.

  • Share this:
உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கையின்படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 மில்லியன் குழந்தைகள் கருவில் இருக்கும் போதே உயிரிழக்கின்றனர். மேலும் இந்த மரணங்கள் தடுக்கக்கூடியவை என தெரிவித்துள்ளது. சில வளர்ந்த நாடுகளில் பல பிறப்புகள் முறையாக பதிவு செய்யப்படாததால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக கூட இருக்கலாம் என கூறப்படுகிறது. கருச்சிதைவு ஏற்படும் தாயின் மன மற்றும் உடல் ஆரோக்கியம் கடுமையாக பாதிப்படையும்.

பொதுவாக கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள், உடல் மற்றும் மன மாற்றங்கள் அதிகம் ஏற்படும். அடிக்கடி சிறுநீர் கழிப்பது, ஹார்மோன் மாற்றம் அல்லது உணர்ச்சிகளில் ஏற்படும் மாற்றங்களால் அவதிப்படுவார்கள். அப்படியான நேரத்தில் ஏற்படும் கருச்சிதைவு அவர்களின் மனதை பெரிதும் பாதிக்கும்.

கருச்சிதைவு என்றால் என்ன?

கருச்சிதைவு என்பது குழந்தை பிறப்பதற்கு முன்னரே கரு சிதைவு ஏற்பட்டு குழந்தை கருவிலே உயிரிழப்பது ஆகும். ஒரு தாய் தனது கருவை இழக்கும்போது ஏற்படும் திடீர் சில உடல்நல சிக்கல்களால் உடல் வலிமையை இழப்பது மட்டுமல்லாமல், கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்த நாளில் இருந்து அவள் திட்டமிட்டிருந்த முழு கனவுகளையும் இழக்கிறாள். கருச்சிதைவு ஏற்பட்ட பின்னர் மிகுந்த மன உளைச்சலுடன் உயிரற்றவராக உணர்க்கிறார். மேலும் மனச்சோர்வில் இருந்து விடுபட முடியாமல் தவிர்க்கும் நிலை ஏற்படும்.

PCOS பிரச்சனை இருக்கும் பெண்கள் கருத்தரிக்க முடியுமா..? அதற்கான வழிகள் என்ன?

இந்த மனச்சோர்வை எவ்வாறு கண்டறிவது?

கருச்சிதைவுகளை அனுபவித்த பெண்களில் சுமார் 43% பேர் மனச்சோர்வைக் கொண்டிருப்பதாக ஒரு அறிக்கை காட்டுகிறது, கவலைக் கோளாறுகள், அல்லது அப்செசிவ்-கம்பல்ஸிவ் கோளாறு, பைபோலார் டிஸ்ஆர்டர் போன்ற உளவியல் கோளாறுகள் பெண்களுக்கு ஏற்படும். ஒரு சாதாரண மனச்சோர்வைப் போலவே, இந்த நிலையை சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.நம்பிக்கையற்றதாக உணர்வது, பிடித்த செயல்களில் ஆர்வம் இழப்பு, எடை இழப்பு, பசியின்மை, ஒழுங்கற்ற தூக்க முறைகள், ஓய்வின்மை, தேவையற்ற குற்ற உணர்வு மற்றும் தற்கொலை எண்ணங்கள் போன்றவை மனச்சோர்வின் அறிகுறிகள் ஆகும்.

சிகிச்சை முறைகள் :

கருச்சிதைவு அடைந்த பெண்களுக்கு பெரும்பாலும் உளவியல் மற்றும் மருத்துவ சிகிச்சை என இரண்டும் அவசியமாகும்.

உளவியல் சிகிச்சையின் போது மனநல மருத்துவர் தேவையான அறிவுரைகளை வழங்குவார்கள். மருத்துவ சிகிச்சையானது ஆண்டிடிரஸன் மருந்துகள், ஹார்மோன் சிகிச்சை, ஆன்டிசைகோடிக் மருந்துகள் மற்றும் மனநிலையை நிலைப்படுத்தும் மருந்துகளை உள்ளடக்கியது. மேலும் தீவிரமாக கருத்தரிக்க முயற்சிக்கும் போது அல்லது அடுத்தடுத்த கர்ப்பத்தின் போதும் தொடர்ந்து இந்த மருந்துகளை உட்கொள்ளலாம்.குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவு :

வாழ்க்கையில் எந்தவொரு கடுமையான பிரச்சனையையும் சமாளிக்க, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவு முக்கியமானது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. கருச்சிதைவு காரணமாக மனச்சோர்வடைந்த பெண் நிச்சயமாக தனது வருத்தத்தை தனது நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இத்தகைய காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண் தனிமையாக இருப்பதாக உணர்வார். இது தற்கொலை எண்ணங்களுக்கு வழிவகுக்கும்.

Iron Rich Foods : கர்ப்பிணிகளுக்கு கட்டாயம் தேவைப்படும் இரும்புச் சத்து : எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும்..?

எனவே நீங்கள் அவரை தனியாக விடாமல் அவரிடம் பேசி கொண்டே இருங்கள். எனினும் பாதிக்கப்பட்ட பெண்ணை ஆறுதல்படுத்தும்போது, நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகளில் விழிப்புடன் இருக்க வேண்டும், ஏனெனில் அது சில சமயங்களில் புண்படுத்தும் விதமாக இருக்கக்கூடும். அவர் மீண்டும் கருத்தரிக்க முடியும் என்பதை போன்ற பொசிட்டிவ்-வான வார்த்தைகளை அவருக்கு எடுத்துரைத்து ஆறுதல் செய்வது நல்லது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: