ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

உள்ளாடை ஈரப்பதமாவதால் பூஞ்சை தொற்று... தவிர்க்க உதவும் பேண்டி லைனர்கள் பற்றி தெரியுமா..?

உள்ளாடை ஈரப்பதமாவதால் பூஞ்சை தொற்று... தவிர்க்க உதவும் பேண்டி லைனர்கள் பற்றி தெரியுமா..?

பேண்டி லைனர்கள்

பேண்டி லைனர்கள்

பூஞ்சை தொற்று ஏற்படுவதைப் போலவே கேண்டிடா என்ற வகை தொற்றும் பெண்ணுறுப்பில் ஏற்படக் கூடும். இதை நீங்கள் கண்டுகொள்ளவில்லை என்றால் அடிக்கடி இந்த தொற்று ஏற்பட்டு உங்களுக்கு தொந்தரவு தரக் கூடும். பெண்ணுறுப்பில் ஈரப்பதம் இருப்பதே இந்த கேண்டிடாவின் வளர்ச்சிக்கு காரணமாகும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மாதவிலக்கு நாட்களில் நாப்கின், டேம்பான், மென்ஸ்சுரல் கப் என ஏதோ ஒன்றை பயன்படுத்தி சுகாதாரத்தை நீங்கள் மேம்படுத்திக் கொள்வது தெரிந்த விஷயம் தான். ஆனால், சாதாரண நாட்களிலும் பெண்ணுறுப்பில் ஏதோ ஒரு திரவம் கசிவதை நீங்கள் பார்த்தது உண்டா? அவற்றில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து யோசித்துள்ளீர்களா? இல்லை என்றால் தொடர்ந்து படிக்கவும்.

பெண்ணுறுப்பில் ஏதேனும் கசிவு ஏற்படும் முற்றிலும் இயல்பானதே. பெண்ணுறுப்பு தன்னைத் தானே சுத்தம் செய்து கொள்வதற்காக இந்த திரவத்தை சுரக்கச் செய்கிறது. ஆனால், அதுவே அளவுக்கு அதிகமாக சுரக்கும்போது நோய்த்தொற்று ஏற்பட்டு விடுகிறது.

பூஞ்சை தொற்று ஏற்படுவதைப் போலவே கேண்டிடா என்ற வகை தொற்றும் பெண்ணுறுப்பில் ஏற்படக் கூடும். இதை நீங்கள் கண்டுகொள்ளவில்லை என்றால் அடிக்கடி இந்த தொற்று ஏற்பட்டு உங்களுக்கு தொந்தரவு தரக் கூடும். பெண்ணுறுப்பில் ஈரப்பதம் இருப்பதே இந்த கேண்டிடாவின் வளர்ச்சிக்கு காரணமாகும்.

பேண்டி லைனர்கள் :

பெண்ணுறுப்பில் ஏற்படும் கசிவுகளை உறிஞ்சுவதற்கு நீங்கள் பேண்டி லைனர்கள் பயன்படுத்தலாம். இதுவும் மாதவிலக்கு காலத்தில் பயன்படுத்தும் நாப்கின் போன்ற தொற்று தடுப்பு பொருள் தான். அசௌகரியம் அல்லது அரிப்பு போன்ற தவிர்க்கும் வகையில் மெல்லிய, சுத்தமான பேண்டி லைனர்களை நீங்கள் பயன்படுத்தலாம்.

மீண்டும் பயன்படுத்தத் தகுந்த பருத்தியால் ஆன பேண்டி லைனர்களை பயன்படுத்தும் பட்சத்தில், அவை சுற்றுச்சூழலுக்கு உகந்தவையாக இருக்கும்.

ஈரமின்றி பாதுகாக்கும் :

பெண்ணுறுப்பில் திரவம் சுரப்பது இயல்பானது தான் என்றாலும் கூட, சில சமயங்களில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகளுக்கு அது சொர்க்க பூமியாக மாறக் கூடும். ஆனால், பேண்டி லைனர் பயன்படுத்தும் பட்சத்தில், நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய இந்த கிருமிகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.

Also Read : இதையெல்லாம் நம்பாதீங்க... சிறுநீர் பாதைத் தொற்று பற்றி நிலவி வரும் தவறான கருத்துகள்..!

உள்ளாடை அழுக்கு தவிர்க்கப்படும் :

பெண்ணுறுப்பில் கசியும் திரவம் உங்கள் உள்ளாடைகளில் கறைகளை ஏற்படுத்தக் கூடும். அதை நீக்குவதற்காக நீங்கள் சிரமப்பட்டு சலவை செய்ய வேண்டியிருக்கலாம். ஆனால், பேண்டி லைனர்களை பயன்படுத்தும்போது அவை அழுக்காவது தவிர்க்கப்படும். உங்கள் பெண்ணுறுப்புக்கும் அது பாதுகாப்பாக அமையும்.

வியர்வைகளை உறிஞ்சும் :

அங்கும், இங்கும் ஓடியாடி வேலை செய்யும் அல்லது உடல் ரீதியாக உழைக்கும் பெண்களுக்கு உடல் முழுக்க வியர்த்துக் கொட்டும். அதே சமயம், பெண்ணுறுப்பு பகுதியில் ஏற்படும் வியர்வையானது நோய் கிருமிகளை வரவேற்கும். அதுவே நீங்கள் பேண்டி லைனர்களை பயன்படுத்தும் பட்சத்தில் அதில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

மாதவிடாய் கால பயன்பாடு :

தினசரி பேண்டி லைனர்களை பயன்படுத்துவது சிலருக்கு அசௌகரியமாகத் தோன்றலாம். ஆனால், மாதவிலக்கு காலத்திற்கு முன்பு மற்றும் பின்பு ஓரிரு தினங்களுக்கு இதை நீங்கள் பயன்படுத்தும் பட்சத்தில் மிகுந்த பாதுகாப்பு கிடைக்கும். குறிப்பாக, பெண்ணுறுப்பில் பிஹெச் அளவு சமநிலையில் இருக்க உதவும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Intimate Hygiene, Women Health