உடல் எடையைக் குறைக்க தினமும் எத்தனை மணி நேர உடற்பயிற்சி அவசியம்..?

உடல் எடையைக் குறைக்க தினமும் எத்தனை மணி நேர உடற்பயிற்சி அவசியம்..?

Workout | உடற்பயிற்சி

உண்மையை சொல்வதானால், இதற்கு வாரத்தில் இவ்வளவு நாட்கள் தான் செய்ய வேண்டும் என்ற வரையறை எல்லாம் இல்லை. ஒர்க் அவுட் செய்வதன் குறிக்கோள்கள்,உங்கள் நேரத்தைப் பொருத்து வரையறை செய்துகொள்ள வேண்டும்.

  • Share this:
உடற்பயிற்சி செய்வதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. இதில் உடல் எடையை குறைப்பதற்கும் மசில்ஸை பில்ட் அப் செய்து உடலை ஃபிட்டாக வைக்க உதவும் உடற்பயிற்சிகளை (ஒர்க் அவுட்) பலரும் செய்து வருகின்றனர். உடலை ஃபிட்டாக வைத்திருப்பது ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது மற்றும் சில காலப்போக்கில் ஏற்படும் மருத்துவ நிலைமைகள் வருவதற்கான வாய்ப்பை குறைக்கிறது. பொதுவாக ஒர்க் அவுட்டில் ஈடுபடுபவர்களின் குறிக்கோள் உடல் எடையை குறைப்பது, தசைகளை ஃபிட்டாக உருவாக்குவது அல்லது ஆரோக்கியமாக உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டது.

உடல் செயல்பாடுகளில் (physical activities) தவறாமல் ஈடுபடுவது மனநிலை இயல்பாக இருக்க உதவுகிறது. மன அழுத்தத்தைக் குறைத்து, நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. எவ்வாறாயினும் ஒரு வாரத்தில் அடிக்கடி எவ்வளவு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா.? எடை குறைப்பு அல்லது ஃபிட்டான தசைகளை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு தொடர்ந்து ஒர்க் அவுட்களில் ஈடுபட்டிருந்தாலும் பலருக்கு இந்த சந்தேகம் அடிக்கடி வந்து போகும்.

உண்மையை சொல்வதானால், இதற்கு வாரத்தில் இவ்வளவு நாட்கள் தான் செய்ய வேண்டும் என்ற வரையறை எல்லாம் இல்லை. ஒர்க் அவுட் செய்வதன் குறிக்கோள்கள், உடற்பயிற்சி பின்னணி மற்றும் உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறது மற்றும் நாட்களின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை பொருத்தது. எனினும் என்ன காரணத்திற்காக எவ்வளவு ஒர்க் அவுட்கள் செய்தல் போதுமானதாக இருக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.பொது ஆரோக்கியம்:

உங்கள் நோக்கம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அதற்கேற்ற பயிற்சிகள் அல்லது உடல் செயல்பாடுகளை தேர்வு செய்து கொள்ள வேண்டும். இதற்காக ஒரு நிலையான பயிற்சி வழக்கத்தை பின்பற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. உங்களுக்கு எந்த நாட்களில் நிறைய ஃப்ரீ டைம் இருக்கிறதோ அந்த நாட்களில் 30 நிமிடங்கள் வரை ஒர்க் அவுட்களில் ஈடுபடலாம்.

இல்லையெனில் விரைவாக அதிக தீவிர இடைவெளி பயிற்சி எனப்படும் HIIT-யில் 15 நிமிடங்கள் ஈடுபடலாம். ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் வாக்கிங் அல்லது ஜாகிங் செய்வது கூட உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க மிகவும் உதவும். குறிப்பாக ஜிம்மிங் பற்றி சொல்வதென்றால் ஆரோக்கியமாக இருக்க 2 நாட்கள் வலிமை பயிற்சியும் (strength training ), 2 நாட்கள் கார்டியோவும் (cardio) செய்வது போதுமானது.எடை குறைப்பு:

உடல் எடையை குறைப்பது தான் உங்கள் முக்கிய நோக்கம் என்றால் உங்கள் எடையிழப்பு இலக்கை மனதில் வைத்து ஒர்க் அவுட்களில் வழக்கமாக ஈடுபட்டால் நல்ல பலன் கிடைக்கும். துவக்கத்தில் நாளொன்றுக்கு சீரான இடைவெளியில் 3 முறை வரை ஒர்க் அவுட்களில் ஈடுபடலாம். ஒரு மாதத்திற்குப் பின் இதை 5 முறை ஆக்கலாம்.

கொழுப்பை வேகமாக எரிக்க விரும்பும் ஆண்கள் இதை செய்தால் நல்ல பலன் கிடைக்கும் - ஆய்வில் தகவல்!

வழக்கமான பயிற்சிகள், இதயத்திற்கு வலு சேர்க்கும் கார்டியோ மற்றும் உடலை வலிமையாக்கும் பயிற்சிகளின் கலவையாக இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். உடல் எடையை குறைக்க அதிக கலோரிகளை எரிக்க வேண்டும் என்பதால் தீவிர ஒர்க் அவுட்கள் செய்வதன் மூலம் இலக்கை எளிதாக அடைய முடியும். தீவிர உடற்பயிற்சி செய்யும் இளைஞர்கள் என்றால் வாரத்திற்கு சராசரியாக 150 நிமிடங்கள், மிதமான உடற்பயிற்சி என்றால் வாரத்திற்கு 300 நிமிடங்கள் ஒர்கவுட்களில் ஈடுபடலாம்.மசில்ஸ் பில்ட் அப்:

உடலை ஃபிட்டாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் தசைகளை கட்டமைப்பது உங்கள் நோக்கம் என்றால் வாரத்தில் 4 முதல் 5 நாட்கள் ஒர்க் அவுட்கள் செய்வது போதுமானது. இருப்பினும் இதற்கான ஒர்க் அவுட்கள் எடை குறைக்க முயற்சிப்பவர்கள் செய்ய வேண்டிய பயிற்சிகளை விட முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.

உளி போன்றதொரு உடற்கட்டை பெற விரும்பினால் பளு தூக்குதலில் ஈடுபடலாம். இதற்காக கார்டியோ பயிற்சிகளை முழுமையாக கைவிட வேண்டும் என்று அர்த்தமில்லை. மிதமான எடையில் மீண்டும் மீண்டும் தம்புல்ஸ் தூக்கி ஒர்க் அவுட் செய்வது கொழுப்பை எரிக்கவும், தசைகளை உருவாக்கி கட்டமைக்கவும் உதவும். தினமும் 40 முதல் 50 நிமிடங்கள், வாரத்தில் 4 முதல் 5 நாட்கள் வரை இதற்கான ஒர்க் அவுட்களில் ஈடுபட்டால் போதும்.

 
Published by:Sivaranjani E
First published: