வலிப்பு நோயைப் பற்றி நம்மில் எத்தனைக்கு பேருக்கு தெரியும் ?

வலிப்பு நோயைப் பற்றி நம்மில் எத்தனைக்கு பேருக்கு தெரியும் ?

வலிப்பு நோய்

இந்தியாவில், தற்போது நடந்த ஆராய்ச்சியின் படி 13 கோடி மக்கள் வலிப்பு நோயால் பாதிப்பு அடைகிறார்கள், அதில் 29 லட்சம் மக்கள் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர்.

 • Share this:
  ஒரு கோடி மக்கள் நோய் உள்ளதைக் கண்டறியாமல் அல்லது அதற்கு மருத்துவ சிகிச்சை பெறாமல் உள்ளனர். மேலும், வலிப்புப் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததாலும் தவறான புரிதல்கள் காரணமாகவும் தவறான கண்ணோட்டம் கொண்டுள்ளனர்.

  வலிப்பு நோய் ஒரு மூளை நரம்பியல் தொடர்பான கோளாறு, இதில் நோயாளிகளுக்கு அடிக்கடி நினைவு மாறியோ, நினைவை இழந்தோ, கால்கைகளை வெட்டுவது  போன்றோ வரும். வலிப்பு என்பது உடல் அங்கங்கள் சுண்டுவது மட்டுமல்ல, வெறும் பிரக்ஞை மாறுவதும், நிதானம் இழப்பது போலவும் வரலாம். வலிப்பு என்பது மருத்துவ ரீதியாக மூளை மின் செயல்பாட்டின்1 தவறான வெளிப்படுத்தலாகும்.

  வலிப்பு நோய் வரப் பல காரணங்கள் உள்ளன. இதில் மூளைக் காய்ச்சல், தலையில் அடி பட்டு மூளைக்காயம், தொற்றுகள், மரபுக் காரணங்கள் போன்றவையும் அடங்கும். 70 சதவீத வலிப்பு நோய் பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் என அனைவரையும் தாக்கும்; இருப்பினும், எவரொருவருக்கும் வலிப்பின் காரணத்தை கண்டு பிடித்து அதற்குரிய சிகிச்சை தர வேண்டும். பொதுவாக, வலிப்பு மருந்துகளை விடுத்தல், மன அழுத்தம், பதற்றம், ஹார்மோன்கள் மாற்றம், சில உணவுகள், மது, எனப் பல தூண்டுதல்கள், வலிப்பு நோயினை அதிகப் படுத்தலாம்.

  வலிப்பு நோயின் முக்கிய பிரச்சினைகள்:

  வலிப்பு நோய் பலவிதமாக வெளிப்படுவதால், வலிப்பு நோயைப் பற்றிக் கலாச்சாரம் சார்ந்த கருத்துக்களும், மூட நம்பிக்கைகளும் உள்ளன. இதனால் பல நேரம் மருத்துவ சிகிச்சை முறைகள் சரியாகக் கொடுக்கப்படுவதில் சிக்கல்கள் உண்டாகின்றன.

  வலிப்பு ஒரு நோய் அல்ல; மூளைச் செயல்மாற்றத்தின் அறிகுறி மட்டுமே! அதனை நன்கு அறிந்து சரியான முறையில் சிகிச்சை தரப்படாவிடில் வலிப்பு உள்ள நோயாளிகள் உடல் நலம், மனம் மற்றும் சமூக நலத்தில் பாதிப்பு ஏற்பட்டு, வாழ்க்கைத் தரத்தை7 கெடுத்துக் கொள்கின்றனர். ஓரளவு வலிப்பு கட்டுக்குள் இருக்கும் மக்கள், அவர்களின் வலிப்பு பற்றி மனம் திறந்து உற்றார், உறவினர்கள், நண்பர்களிடம் அல்லது உடல் வேலை செய்பவர்களிடம் சொல்வது நல்லது. வலிப்பு நோயாளிகளை வித்தியாசமாகப் பார்ப்பதை மக்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். எத்தனையோ அறிஞர்கள், விளையாட்டு வீரர்கள் இந்த நோயினால் சிகிச்சைப் பெற்று வாழ்வில் உயர்ந்த நிலையை அடைந்து உள்ளார்கள்.

  இந்தியாவில், ஒரு காலத்தில், இது பேய்கள் மற்றும் சாத்தான்களால் உருவாகிறது என்று தவறாக எண்ணினர். இன்று காலம் மாறி வருகிறது; சரியான சிகிச்சை தரப்படுவதால் இந்நோயினைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

  உங்களுக்கு அல்லது உங்களுக்குத் தெரிந்த நபர்களுக்கு, வலிப்பு ஏற்பட்டால், உங்கள் மருத்துவருடன் என்ன நடக்கிறது என்பதை மனம் திறந்து வெளிப்படையாகக் கலந்து உரையாடிக் கொள்வது மிக முக்கியம்.

  வலிப்பு நோய் உள்ளவர்கள், வலிப்பு எத்தனை முறை வருகிறது, எந்த நேரத்தில் வருகிறது, எவ்வாறு வருகிறது என்பதைக் கணக்கில் வைத்துக்கொள்ள வேண்டும். இது மருத்துவர்கள் மருந்து உதவுகிறதா? வலிப்பின் தீவிரத்தை தெரிந்துகொள்ள, மிகவும் உதவும். மருத்துவக் குறிப்பில் வலிப்பு எவ்வாறு வந்தது? எந்த வேளையில் ஆரம்பித்தது? போன்ற தேவையான தகவல்களுடன் ஆராய்வதே வலிப்பு நோயைக் கண்டறிய மருத்துவர்கள் பயன்படுத்தும் முதல் கருவி. உங்கள் உறவினர்கள் யாரேனும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களைப் புரிந்துகொண்டு, உதவியாக இருப்பது முக்கியம். கைபேசி புகைப்படக்கருவி கொண்டு வலிப்பு வருவதைப் படம் எடுத்துக் காட்டுவது, மருத்துவருக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.

  30 முதல் 40 சதவீத வலிப்பு மட்டுமே மரபணு வாயிலாக வருகிறது. அதுவும் நேரடி இரத்த பந்த உறவினர்களுக்கு மட்டுமே இந்த வலிப்பு வர வாய்ப்புண்டு வலிப்பு நோய் உள்ளவர்கள் தங்கள் குடும்ப மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவது முக்கியம். அப்பொழுதுதான் ஆலோசனைகள், அவசரக்கால சிகிச்சை கிடைக்கும். பின்னர் அருகில் உள்ள நரம்பியல் மருத்துவரை அணுகி சிகிச்சை பற்றி முழுமையாகத் தெரிந்துக் கொள்ள அணுகவும்.

  வலிப்பு நோய் உள்ள குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஏதேனும் அறிவுரை உள்ளதா?     குழந்தை வளர்ப்பவர்கள் அவசியம் என்ன தெரிந்துகொள்ள வேண்டும்?

  முடிந்தவரை நம் பாதுகாப்பில் குழந்தை இருப்பது நல்லது, எத்தகைய வலிப்பு அவர்களைத் தூண்டுகிறது என்பதை அறிந்து அந்த சூழ்நிலைகளை முடிந்த வரை தவிர்க்கவும், அவர்களின் ஆசிரியர்கள்/ பாதுகாவலர்கள் அந்த குழந்தையின் மருத்துவக் கோளாறு பற்றி கண்டிப்பாக அறிந்து அவரச உதவி எண்களை வைத்துக்கொள்ள வேண்டும்.

  மருந்துகள் சரியான நேரத்தில் உட்கொள்ளப்படுகின்றனவா மற்றும் தேவையான கண்காணிப்பு தொடர்சிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றனவா என உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏதேனும் நோய் அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரிடம் விரைந்து செல்வதை உறுதி செய்யுங்கள். குழந்தைக்கு வலிப்பு ஏற்படும் பொழுது, வாயில் எதையும் கொடுப்பதைத் தவிர்த்து, குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுங்கள்.

  இது பெண்களை வித்தியாசமாக பாதிக்கிறதா? மேலும் இது ஏதேனும் நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா - அதாவது, அவர்களின் ஒட்டுமொத்த உடல்நலம் அல்லது கருத்தரிக்கும் திறனைப் பாதிக்குமா?

  வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி / பெண்களைச் சுற்றியுள்ள சமூக-கலாச்சார எண்ணங்கள் குறித்து - அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் உரையாற்ற வேண்டும். சிகிச்சைகள் மற்றும் உரிய முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டால், வீட்டிலேயே ஒரு நல்ல ஆதரவு அமைப்பின் உதவியுடன் இயல்பான வாழ்க்கையை வாழ முடியும்; வலிப்பு நோய் உள்ள பெண்கள், வலிப்பு நோய் இல்லாத தங்கள் தோழிகளைப் போலவே கருத்தரிக்க இயலும்.

  இருப்பினும், சாதாரணமாகவே கர்ப்பம் என்பது, உடல் மற்றும் மன அழுத்தத்தையும், அதிகரித்து சோர்வையும் ஏற்படுத்தக் கூடும் என்பதால், வலிப்புத் தாக்கங்கள் சில சமயம் அடிக்கடி வருவதாகவும், மற்றும் கூடுதலாகவும் மாறக்கூடும். கவனமாக குறைக்க, நீங்கள் கர்ப்பம் தரிப்பதற்கு முன்பு அல்லது நீங்கள் கர்ப்பமாகத் திட்டமிட்டால் உங்கள் மருந்துகளைப் பற்றி உங்கள் நரம்பியல் நிபுணரிடம் பேசுங்கள். அவர்கள் உங்களை மாற்று சிகிச்சைக்கு மாற்ற விரும்பலாம். கர்ப்ப காலத்தில் உங்கள் மருந்துகளில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதை விட, அதற்கு முன்னரே மாற்றங்களைச் செய்வது பொதுவாக நல்லது.

  நீங்கள் வலிப்பு நோய்க்கு மருந்தை உட்கொள்ளும் காலத்தில் நீங்கள் கர்ப்பமாகிவிட்டால், அதைத் தொடர்ந்து எடுத்துக்கொண்டு, உங்கள் சிகிச்சையைப் பற்றி விவாதிக்க உடனடியாக உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் நிபுணரைத் தொடர்பு கொண்டு உங்கள் சிகிச்சையைப் பற்றி விவாதிக்கவும்.  உங்கள் நிபுணர்களின் ஆலோசனையின்றி குறிப்பாக கர்ப்ப காலத்தில், உங்களது சிகிச்சையை மாற்றவோ, உங்கள் மருந்துகளை உட்கொள்வதை நிறுத்தவோ வேண்டாம். ஏனென்றால், கர்ப்பத்தில் கடுமையான வலிப்புத் தாக்கம் ஏற்பட்டால், உங்களுக்கு அல்லது உங்கள் குழந்தைக்கு தீங்கு ஏற்படக்கூடும்.

  வலிப்பு நோய் உள்ளவர்கள் சாதாரண வாழ்க்கையை நடத்துவது சாத்தியமா? அவர்களின் வாழ்க்கைத் தரத்தில் என்ன பாதிப்பு இருக்கக் கூடும்?

  வலிப்பு நோய் உள்ள பெரும்பாலான மக்கள் சரியான சிகிச்சை மற்றும் மருத்துவர்களின் வழிகாட்டுதலுடன் ஆரோக்கியமான மற்றும் இயல்பான வாழ்க்கையை வாழ முடியும் .

  அபோட் இந்தியாவின் ‘வலிப்பிலிருந்து விடுதலை’ எனும் இயக்கத்தில் சேருங்கள் - அதை வெல்வதற்குத் தகுந்த சிகிச்சை பெறுவோம்’ என்னும் விழிப்புணர்வு, வலிப்பு நோயின் அறிகுறிகள் உள்ளவர்களை உடனடியாகத் தங்கள் நரம்பியல் நிபுணரை அணுகுமாறு ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

  மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்க.

  இது ஒரு கூட்டு இடுகை.

  Disclaimer:
  ** This is in partnership with Abbott India, written by Dr. D. Meikandan Senior Consultant Neurologist, Avvai Hospital, Madurai.

  Information appearing in this material is for general awareness only and does not
  constitute any medical advice. Please consult your doctor for any questions or concerns you may have regarding your condition.

  References:
  1 National Center for Chronic Disease Prevention and Health Promotion, Division
  of Population Health. https://www.cdc.gov/epilepsy/about/faq.htm
  2 Santhosh NS, Sinha S, Satishchandra P. Epilepsy: Indian perspective. Ann Indian
  Acad Neurol. 2014;17(Suppl 1):S3-S11.
  5 https://www.uchicagomedicine.org/conditions-services/neurologyneurosurgery/
  epilepsy-seizures/causes
  7 Durugkar S, Gujjarlamudi HB, Sewliker N. Quality of life in epileptic patients in
  doctor's perspective. Int J Nutr Pharmacol Neurol Dis 2014;4:53-7
  8 Shetty PH, Naik RK, Saroja A, Punith K. Quality of life in patients with epilepsy in
  India. J Neurosci Rural Pract. 2011;2(1):33-38.
  9 Jacqueline French, Cynthia Harden, Page Pennell, Emilia Bagiella, Evie
  Andreopoulos, Connie Lau, Stephanie Cornely, Sarah Barnard, and Anne Davis;
  Neurology April 5, 2016 vol. 86 no. 16 Supplement I5.001
  Published by:Tamilmalar Natarajan
  First published: