முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உடல் பருமனாக இருப்பது கர்ப்பத்தை பாதிக்குமா..? மருத்துவர்களின் பதில்..!

உடல் பருமனாக இருப்பது கர்ப்பத்தை பாதிக்குமா..? மருத்துவர்களின் பதில்..!

கர்ப்பகால உடல் பருமன்

கர்ப்பகால உடல் பருமன்

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் பெண்களில் பலர் உணவுக் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கின்றனர். ஆனால், கர்ப்ப காலத்தில், “நீ இப்போது இரண்டு உயிர்களுக்கு சேர்த்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாய், ஞாபகம் வச்சுக்கோ’’ என்ற அறிவுரையை மருத்துவர் முதல் வீட்டில் உள்ள பெரியவர்கள் வரை ஒருவர் பாக்கி இல்லாமல் சொல்லிவிடுவார்கள்.

மேலும் படிக்கவும் ...
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் பெண்களில் பலர் உணவுக் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கின்றனர். ஆனால், கர்ப்ப காலத்தில், “நீ இப்போது இரண்டு உயிர்களுக்கு சேர்த்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாய், ஞாபகம் வச்சுக்கோ’’ என்ற அறிவுரையை மருத்துவர் முதல் வீட்டில் உள்ள பெரியவர்கள் வரை ஒருவர் பாக்கி இல்லாமல் சொல்லிவிடுவார்கள்.

ஆக, கர்ப்ப காலத்தில் உணவுக் கட்டுப்பாடு திட்டமெல்லாம் காணாமல் போய்விடும். குழந்தை போதுமான ஊட்டச்சத்துடன், ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் என்றால் நாம் இதைச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகுவோம். இருப்பினும், கர்ப்ப காலத்தில் அதிகம் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சினைகள் ஏற்படுமோ என்ற கவலை எல்லோருக்கும் இருக்கத்தான் செய்கிறது.

உடல் பருமன் என்றால் என்ன..?

உடலில் தேவையின்றி அதிகப்படியான கொழுப்பு படிவதையே உடல் பருமன் என்று குறிப்பிடுகிறோம். இதனை பிஎம்ஐ கொண்டு கணக்கீடு செய்கின்றனர். பொதுவாக 25 முதல் 29.8 வரையிலான பிஎம்ஐ கொண்டவர்கள் அதிக எடை கொண்டவர்களாகவும், 30 அல்லது அதற்கு மேற்பட்ட பிஎம்ஐ கொண்டவர்கள் உடல் பருமன் உடையவர்களாகவும் கருதப்படுகின்றனர்.

உடல் பருமன் காரணமாக கர்ப்ப கால வாழ்க்கை பாதிக்கப்படுமா..?

புதிய தாய்மார்களாக அவதாரம் எடுக்க இருப்பவர்கள் எதிர்கொள்கின்ற மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று உடல் பருமன் ஆகும். இதனால் பல விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம். குறிப்பாக பிஎம்ஐ அளவுகள் அதிகரிக்கின்ற பெண்களுக்கு கீழ்காணும் தொந்தரவுகள் ஏற்படக் கூடும்:

கர்ப்ப காலத்தின் இரண்டாம் அத்தியாய காலத்தில் உயர் ரத்த அழுத்தம் சிலருக்கு ஏற்படலாம். இதனை கர்ப்பகால ரத்த அழுத்தப் பிரச்சினை என்று குறிப்பிடுவார்கள். அதேபோல ப்ரீ-எக்லாம்ப்சியா என்னும் மிகத் தீவிரமான ரத்த அழுத்தப் பிரச்சினையும் கூட உண்டாகலாம். இதன் காரணமாக சிலருக்கு கல்லீரல் பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம். சிலருக்கு அரிதிலும், அரிதாக ஹார்ட் அட்டாக், ஸ்டிரோக் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

Also Read : கர்ப்ப காலத்தில் தலைசுற்றல் இருந்தால் சத்து இல்லை என்று அர்த்தமா..?

வயிற்றில் வளருகின்ற சிசு, சில சமயம் வழக்கத்தை விட கூடுதல் அளவில் இருக்கலாம். இதை மேக்ரோசோமியா என்று குறிப்பிடுவர். இதனால் பிரசவத்தின்போது குழந்தைகளுக்கு காயம் ஏற்படும். கர்ப்பகால சர்க்கரை அதிகரிப்பு என்னும் பிரச்சினை சிலரை தாக்கக்க் கூடும். அதாவது கர்ப்ப காலத்திற்கு மட்டும் நீரிழிவு பிரச்சினை ஏற்படும். இதன் காரணமாக சிசேரியன் பிரசவம் செய்ய நேரிடும்.

சில பெண்கள் தூங்கும்போது நீண்ட நேரம் மூச்சு விடுவதையே நிறுத்தி விடுவர். அதேபோல மிகுந்த உடல்சோர்வு சிலருக்கு ஏற்படும். உடல் பருமன் கொண்ட பெண்களுக்கு பிறக்கின்ற குழந்தைகளுக்கு பிறவிக் குறைபாடுகள் இருக்கலாம்.

ஆரோக்கியமான பிரசவத்திற்கான தீர்வுகள் என்ன

கர்ப்ப காலத்திலும் கூட கீழ்காணும் நடைமுறைகளை பின்பற்றி உடல் பருமனை குறைப்பதோடு, கர்ப்ப காலத்தை ஆரோக்கியமானதாக மாற்றலாம்.

நீச்சல் பயிற்சி மற்றும் நடைபயிற்சி போன்றவற்றை குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் செய்வதன் மூலமாக உடல் எடையை குறைக்கலாம். குறைவான மாவுச்சத்து மற்றும் அதிகமான நார்ச்சத்து கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் சர்க்கரை எடுத்துக் கொள்வதை தவிர்த்து உணவு மற்றும் பானங்கள் மூலமாக சர்க்கரை தேவையை நிறைவு செய்ய வேண்டும்.

First published:

Tags: Obesity, Pregnancy