ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஒன்றுக்கும் மேற்பட்ட முறை கோவிட் தொற்றால் பாதிக்கப்படுவது ஏன் ஆபத்து..? ஆய்வில் வெளியான அதிர்ச்சி...

ஒன்றுக்கும் மேற்பட்ட முறை கோவிட் தொற்றால் பாதிக்கப்படுவது ஏன் ஆபத்து..? ஆய்வில் வெளியான அதிர்ச்சி...

கொரோனா

கொரோனா

COVID 19 | BA.5 போன்ற ஒமைக்ரான் சப் வேரியன்ட்கள், நோய் எதிர்ப்பு சக்தியை தவிர்த்து மனிதர்களில் ஊடுருவும் திறன் கொண்டவை என ஆய்வுகள் காட்டுகின்றன.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கோவிட் தொற்றுக்கு தற்போது வரை பலரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், பரவ துவங்கியது முதல் பல நபர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை இந்த கொடூர தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு வெகுவாக குறைந்து காணப்பட்டாலும், பலமுறை கோவிட் தொற்றுக்கு ஆளாகும் நபர்கள் எதிர்காலத்தில் தொல்லை தரும் உடல்நல பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும் அபாயம் அதிகம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். மிகவும் பரவக்கூடிய வேரியன்ட்டான ஒமைக்ரான் காரணமாக சிலர் தாங்கள் மூன்றாவது அல்லது நான்காவது முறை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். BA.5 போன்ற ஒமைக்ரான் சப் வேரியன்ட்கள், நோய் எதிர்ப்பு சக்தியை தவிர்த்து மனிதர்களில் ஊடுருவும் திறன் கொண்டவை என ஆய்வுகள் காட்டுகின்றன.

இதனிடையே ஒரு புதிய ஆய்வில், 5.6 மில்லியனுக்கும் அதிகமான ராணுவ வீரர்களின் மெடிக்கல் ரெக்கார்ட்ஸ் பகுப்பாய்வு செய்யப்பட்டன. அதில் ஒவ்வொரு முறை கோவிட் தொற்றால் பாதிக்கப்படுவது அவர்கள் இறக்கும் அபாயத்தை அதிகரிப்பதை முடிவுகள் காட்டுகிறது. பலமுறை ஏற்படும் தொற்று பாதிப்பு இதயம், ரத்தம் மற்றும் மூளை தொடர்பான உடல்நலப் பிரச்சனைகள் மற்றும் நீரிழிவு நோய், நாள்பட்ட சோர்வு மற்றும் லாங் கோவிட் போன்ற நோய்களின் அபாயங்களையும் அதிகரிப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது.

மறு தொற்றுகளின் உடனடி மற்றும் நீண்ட கால தாக்கம்..

பொதுவாக மீண்டும் மீண்டும் ஏற்பட கூடிய தொற்றுகள் முதன் முதலில் ஏற்பட்டதை விட லேசானவையாகவே இருக்கும். இதற்கு காரணம் ஒருவரது நோயெதிர்ப்பு அமைப்பு ஏற்கனவே கோவிட் தொற்றை எதிர் கொண்டுள்ளதால் அதை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி அறிந்திருக்கும். எனவே தொற்றுக்கு விரைவாக எதிர்வினையாற்றும். இதனால் லேசான அறிகுறிகள் மட்டுமே அடுத்தடுத்த தொற்றின் போது ஒருவருக்கு இருக்க கூடும். எனினும் சில நேரங்களில் மறு தொற்றுகள் குறிப்பிட்ட நபரின் ஆரோக்கியத்தில் கடுமையான உடனடி தாக்கத்தை ஏற்படுத்த கூடும். அதாவது ஒவ்வொரு முறை ஏற்படும் கோவிட் நோய் தொற்றும் குறிப்பிட்ட நபரின் உடலுக்கு தீங்கு அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே லேசான மறுதொற்றுகள் கூட புறக்கணிக்கப்பட கூடாது என்று வலியுறுத்துகிறார்கள் நிபுணர்கள்.

Also Read : மங்கி பாக்ஸ் பற்றி பரவும் இந்த வதந்திகளை நம்பாதீங்க...

தடுப்பூசியின் பங்கு..

ஒமைக்ரான் இயற்கை அல்லது தடுப்பூசியால் அதிகரிக்கப்பட நோயெதிர்ப்பு சக்தியை தாண்டி ஒருவருக்கு பரவும் திறன் கொண்டது. எனினும் சமீபத்திய ஆய்வு தடுப்பூசி போட்டு கொண்டுள்ள மற்றும் முன்பு தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் கடுமையான, தீவிரமான அல்லது அபாயகரமான மறுதொற்றைப் பெறுவதற்கான வாய்ப்பு 97% குறைவாக இருப்பதாகக் காட்டுகிறது. ஆயினும், ஒவ்வொரு அடுத்தடுத்த கோவிட் தொற்றும் ஒரு ஒருவருக்கு அபாயத்தை அதிகரிக்கிறது . கோவிட் தொற்றுகள் ரத்த நாளங்களில் நீண்டகால வீக்கத்தை ஏற்படுத்த கூடும், இது ரத்தக் கட்டிகளின் வளர்ச்சி, மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.

மறுதொற்று மற்றும் லாங் கோவிட் இரண்டுக்குமான தொடர்பு பற்றிய ஆராய்ச்சி..

முதல் முறையாக தொற்று ஏற்பட்ட பிறகு சில மாதங்கள் முதல் பல வருடங்கள் வரை நீடிக்கும் சில அறிகுறிகளின் நீண்ட பட்டியலுடன் தொடர்புடைய லாங் கோவிட் நிலை உருவாகும் அபாயத்தை ஒவ்வொரு மறு தொற்றும் கொண்டிருக்கலாம் என விஞ்ஞானிகள் கவலை கொண்டுள்ளனர். 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள், தடுப்பூசி போடாதவர்களுடன் ஒப்பிடும் போது, லாங் கோவிட் உருவாகும் வாய்ப்பு பாதி மட்டுமே என ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. மற்றொரு ஆய்வு தடுப்பூசிகள் லாங் கோவிட் நிலை உருவாக்கும் அபாயத்தை சுமார் 15% வரை குறைக்கலாம் என்று தெரிவிக்கிறது. இதனிடையே மிக சமீபத்திய ஆய்வு, ஒரே ஒரு முறை மட்டுமே கோவிட் தொற்றைப் பெற்றவர்களுடன் ஒப்பிடும்போது, பல முறை தோற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு லாங் கோவிட் அதிகமாக இருப்பதாக கூறுகிறது.

Also Read : பன்றி காய்ச்சலை விரட்ட இந்த 5 உணவு பொருட்கள் போதும்...

லாங்கோவிட் எதனால்.?

தொற்றின் கடுமையான கட்டம் முடிந்த பிறகும் உடலில் இருக்கும் வைரஸின் துகள்களால் லாங் கோவிட் ஏற்படலாம் என சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சில ஆய்வாளர்கள் இது ஏற்கனவே இருக்கும் தன்னுடல் தாக்க கோளாறு அல்லது முந்தைய தொற்றுக்கு பின் சரியாக மீட்டமைக்கப்படாத நோயெதிர்ப்பு அமைப்பு காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். ஆனால் சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. கொரோனா வைரஸ் வேரியன்ட்கள் மாறி கொண்டே இருப்பதால், அவ்வப்போது பாதிப்புகள் மிகவும் மோசமாக இருப்பதை நாம் காணலாம். எனவே நிச்சயமற்ற தன்மையிலிருந்து தங்களைப் பாதுகாத்து கொள்ள மக்கள் இன்னும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற தடுப்பூசி, மாஸ்க், சோஷியல் டிஸ்டன்ஸ் உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்ற நிபுணர்கள் கூறுகின்றனர்.

First published:

Tags: CoronaVirus, Covid-19, Omicron