தினமும் சர்க்கரை அளவு இவ்வளவுதான் எடுத்துக்கொள்ள வேண்டுமா? தெரிந்துகொள்ளுங்கள்..!

Sugar | சர்க்கரை

FDA வெளியிட்டுள்ள தகவலின்படி சர்க்கரை உட்கொள்ளல் என்பது, உங்கள் தினசரி கலோரி உட்கொள்ளலில் 10 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளது.

  • Share this:
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தி எகனாமிக் டைம்ஸில் வெளியான ஒரு செய்தி அறிக்கையின்படி, “உலகின் மிகப்பெரிய சர்க்கரை நுகர்வோர் கொண்ட நாடு இந்தியா. இந்திய மக்கள் அனைவரும் சர்க்கரை உணவுகளை அதிகம் சாப்பிட விரும்புகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், உள்நாட்டு சந்தையில் விற்பனையை அதிகரிக்க, இந்திய சர்க்கரை ஆலைகள் உள்நாட்டு தேவையை அதிகரிப்பதற்கான ஒரு ஆன்லைன் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளன.

இதில் ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் உட்சுரப்பியல் நிபுணர்கள் தங்கள் நிபுணத்துவத்தையும் அறிவையும் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இது குறித்து இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் கூறியதாவது, " மூளை சக்தி, தசை ஆற்றல் மற்றும் நமது உடல் உயிரணுக்களின் சரியான செயல்பாட்டிற்கு செல்லும் ஒவ்வொரு இயற்கை செயல்முறைக்கும் சர்க்கரை மிகவும் முக்கியமான பொருளாக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளது. மேலும் சர்க்கரையில் உள்ள கலோரிகள் மற்ற எந்த ஒரு உணவில் உள்ள கலோரிகளுக்கும் சமம் என்று தெரிவித்துள்ளது. உடலில் கலோரிகள் போதுமான அளவு எரிக்கப்படாமலோ அல்லது அதிகமான கலோரிகளை உட்கொள்ளும்போதோ தான், உடல் எடை அதிகரிக்கும் நிலை ஏற்படுகிறது.சர்க்கரையின் இரண்டு முக்கிய ஆதாரங்கள்:

1. இயற்கையான சர்க்கரை, இயற்கையாகவே உணவு வகைகளில் காணப்படுவது.

2. கூடுதல் சர்க்கரை (Added Sugar), சர்க்கரைத்தூள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படுவது.

உண்மையில் மருத்துவர்கள் கவலைப்படுவது இந்த கூடுதல் சர்க்கரையை பற்றி தான். பழங்கள், பால், முழு தானியங்கள் போன்றவற்றில் உள்ள இயற்கை சர்க்கரை உடலில் கரைவது எளிது. இது தொடர்பாக ஹார்வர்ட் மருத்துவப் பள்ளி வெளியிட்டுள்ள ஒரு ஆய்வறிக்கையில், ஒரு சராசரி அமெரிக்கன் ஒரு நாளைக்கு 22 டீஸ்பூன் கூடுதல் சர்க்கரையை உட்கொள்கிறான் என்று கூறப்பட்டது. அதாவது அவர் கூடுதலாக 350 கலோரிகளைக் உட்கொள்கிறார். இது உடல் பருமன் மற்றும் இதய நோய்களை உருவாக்குகிறது. எனவே அமெரிக்கர்கள் கூடுதல் சர்க்கரையை வெகுவாகக் குறைக்க வேண்டும் என்று அமெரிக்க இதய சங்கம் (AHA) பரிந்துரைத்துள்ளது.ஒரு சராசரி இந்தியர் ஒரு நாளைக்கு எடுத்துக்கொள்ளும் 10 கரண்டி அளவு சர்க்கரை நுகர்வுடன் ஒப்பிடும் பொது, ஆண்டுக்கு கிட்டத்தட்ட 18 கிலோ சர்க்கரையை அவர் சாப்பிடுகிறார். இது நாம் உட்கொள்ளும் வெவ்வேறு பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களிலிருந்து மறைக்கப்பட்ட வடிவங்களில் உள்ள கணிசமான அளவு சர்க்கரையை உள்ளடக்கியுள்ளது. மேலும் ஒரு குளிர்பானத்தில் 40 கிராம் (அதாவது10 டீஸ்பூன்) பிரீ சுகர் இருக்கின்றன.

நமக்குத் தேவையான சர்க்கரை நுகர்வு:

பெரும்பாலான பெண்களுக்கு ஒரு நாளைக்கு 100 கலோரிகளுக்கு மேல், அதாவது சுமார் 6 டீஸ்பூன் அல்லது 24 கிராமுக்கு மேல் கூடுதல் சர்க்கரையை சேர்த்துக்கொள்ளக்கூடாது என்று AHA பரிந்துரைத்துள்ளது. பெரும்பாலான ஆண்களுக்கு ஒரு நாளைக்கு 150 கலோரிகளுக்கு மேல் (சுமார் 9 டீஸ்பூன் அல்லது 36 கிராம் சர்க்கரை) சர்க்கரையை சேர்த்துக்கொள்ள கூடாது என்றும் பரிந்துரைத்துள்ளனர்.சர்க்கரை உள்ளடக்கத்தை எவ்வாறு அளவிடுவது?

பொதுவாக கூடுதல் சர்க்கரையை சாப்பிடுவதால் ஊட்டச்சத்து அல்லது நன்மை எதுவும் கிடைக்கப்போவதில்லை. எனவே, "சர்க்கரை" முதல் அல்லது இரண்டாவது மூலப்பொருளாக பட்டியலிடும் உணவுகளை தவிர்ப்பது உட்பட, கூடுதல் சர்க்கரை கொண்ட தயாரிப்புகளைத் தவிர்ப்பது சிறந்தது. வெறுமனே, 4 கிராம் சர்க்கரை = 1 டீஸ்பூனுக்கு சமம். நாம் சில சமயங்களில் உணவுக்கு சர்க்கரையைச் சேர்க்கும்போது, பெரும்பாலான சர்க்கரை பதப்படுத்தப்பட்ட மற்றும் தயாரிக்கப்பட்ட உணவுகளிலிருந்து வருகிறது.

அடிக்கடி வெளியே சென்று சாப்பிடுவது உயிரைப்பறிக்கும் நோய்களுக்கு வழிவகுக்கும்: ஆய்வில் அதிர்ச்சி

சர்க்கரை-இனிப்பு பானங்கள் மற்றும் காலை உணவு தானியங்களில் இருக்கும் சர்க்கரை கூட மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. பொதுவாக தேநீர் மற்றும் இனிப்பு வகைகளில் நாம் சேர்க்கும் வெள்ளை சர்க்கரையின் அளவுகளை மட்டுமே நாம் கணக்கிடுகிறோம். ஆனால், கெட்ச்அப், பதப்படுத்தப்பட்ட உணவு, அரிசி, பேக்கரி பொருட்கள், பால் பொருட்கள் போன்ற உணவுகளில் சர்க்கரை மறைக்கப்பட்ட மூலப்பொருட்களாக சேர்ந்திருப்பதை நாம் உணருவதில்லை. எனவே நாம் உண்ணும் ஒவ்வொரு பொருளில் உள்ள சர்க்கரைகளின் அளவை கணக்கிடுவது மிகவும் அவசியம். 

உங்கள் தினசரி கலோரி உட்கொள்ளலில் எத்தனை சதவீதம் சர்க்கரையாக இருக்க வேண்டும்?

தொகுக்கப்பட்ட உணவை நீங்கள் வாங்கி சாப்பிடுவதற்கு முன்பு அதில் உள்ள லேபிளை படித்து சர்க்கரை உள்ளடக்கத்தை சரிபார்க்க வேண்டும். உதாரணமாக, ஒரு தேக்கரண்டி கெட்ச்அப்பில் ஒரு டீஸ்பூன் சர்க்கரை உள்ளது என்று டைம்ஸ் ஆப் இந்தியா ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் FDA வெளியிட்டுள்ள தகவலின்படி சர்க்கரை உட்கொள்ளல் என்பது, உங்கள் தினசரி கலோரி உட்கொள்ளலில் 10 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்க தேசிய மருத்துவ நூலகமும் , "உடல் பருமன் போன்ற பிரச்சனையை கட்டுப்படுத்த, ஒரு நாளைக்கு தனிநபரின் உணவு மற்றும் பானங்களின் அளவை குறைக்க வேண்டும்" என வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர். அதேபோல பிரீ சர்க்கரைகளைக் கொண்ட உணவுகளின் மொத்த உட்கொள்ளல் 10% க்கும் குறைவாக இருக்க வேண்டும். இதைவிட முக்கியமானது என்னவென்றால், உலக சுகாதார நிறுவனம் இந்த சதவீதத்தை 10 முதல் 5 சதவீதமாகக் குறைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 
Published by:Sivaranjani E
First published: