இனப்பெருக்கம் என்பதை தாண்டி ஆணும், பெண்ணும் உடல் அளவிலும், மனதளவிலும் ஒன்றிணைந்து பேரின்பம் காணுவதற்கான வழிமுறையாக தாம்பத்ய உறவு இருக்கிறது. பேரின்பம், புத்துணர்ச்சி கிடைக்கிறது என்பதற்காக எந்நேரமும் அதுகுறித்து சிந்தித்துக் கொண்டிருக்க முடியாது. ஆக, தாம்பத்ய உறவுகளுக்கும் மனதளவில் கட்டுப்பாடு உண்டா என்ற கேள்வி எழுகிறது.
ஆரோக்கியமான தாம்பத்ய வாழ்க்கை என்பது ஒவ்வொரு நபருக்கும், ஒவ்வொரு தம்பதியருக்கும் வேறுபடுகிறது. சிலர் எப்போதாவது தாம்பத்ய உறவு வைத்துக் கொள்ள நினைக்கின்றனர். சிலர் ஒரே நாளில் பலமுறை தாம்பத்ய உறவு வைத்துக் கொள்கின்றனர். ஆக, எத்தனை முறை தாம்பத்ய உறவு வைத்துக் கொள்வது என்று சரியாக வரையறுப்பது சற்று கடினம் தான்.
தாம்பத்ய உறவுக்கு எல்லை உண்டு என்பதெல்லாம் சும்மா என்று சிலர் கருதுகின்றனர். மற்றொரு பக்கம் எத்தனை முறை தாம்பத்யம் வைத்துக் கொள்ளலாம் என்ற வரையறை குறித்து பலர் ஆச்சரியமான சிந்தனைகளை கொண்டுள்ளனர்.
எத்தனை முறை உறவு கொள்வது அதிகமானது?
இந்த கேள்விக்கு சரியான பதில் என்னவென்றால், தனிநபரின் உடல்திறன் மற்றும் மன விருப்பம் பொருத்து தாம்பத்ய உறவு எண்ணிக்கை மாறுபடும். நீங்கள் எந்த அளவுக்கு ஆற்றலுடன் உள்ளீர்கள் என்பதையும் தாண்டி, இதன் மூலம் உங்கள் பார்ட்னர் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா, சௌகரியமாக உணர்கிறார்களா என்பதும் முக்கியமானது.
அதே சமயம் 18 முதல் 29 வயது வரையிலான நபர்கள் சராசரியாக ஆண்டுக்கு 112 முறை உறவு வைத்துக் கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேபோல 30 முதல் 39 வயது வரை உள்ளவர்கள் 86 முறையும், 40 முதல் 49 வயதுள்ளவர்கள் 69 முறைக்கு குறைவாகவும் ஆண்டு ஒன்றுக்கு தாம்பத்ய உறவு வைத்துக் கொள்கின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
Also Read : கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்க கூடிய செக்ஸ் பொசிஷன்கள் என்ன..?
ஆக, இந்த சராசரி எண்ணிக்கையை காட்டிலும் நீங்கள் அதிகமான முறை உறவு வைத்துக் கொள்கிறீர்கள் என்னும் நிலையில், அது அளவுக்கு அதிகமானதா என்று கேள்வி எழுகிறது. ஆனால், அப்படி எதுவும் அளவுகள் கிடையாது என்றாலும், பிறப்புறுப்புகளில் வலி, வறட்சி போன்றவை ஏற்படும்போது நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
பெண்கள் அதிக உடலுறவு கொண்டால் என்ன ஆகும்?
அளவுக்கு அதிகமாக தாம்பத்ய உறவு வைத்துக் கொள்ளும்போது பெண்ணுறுப்பு வறண்டு காணப்படும். இதனால் பாலியல் உறவு வைத்துக் கொள்ளும்போது அசௌகரியம், வலி போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம். அதேபோல அதிக தொடர்புகள் காரணமாக பெண்ணுறுப்பு சேதம் அடையலாம்.
ஆண்கள் அதிக உடலுறவு கொண்டால் என்ன ஆகும்?
ஆண்களை பொருத்தவரையில் வலி, அசௌகரியம், உணர்வின்மை, எரிச்சல் போன்ற பிரச்சினைகள் உண்டாகலாம். குறிப்பாக வார இறுதி நாட்களை குதூகலமாக கழிக்க வேண்டும் என்ற தீராத ஆசையுடன் வெள்ளி முதல் ஞாயிறு வரையிலான 3 நாட்களில் ஒரு நபர் 8 முதல் 10 முறைக்கு மேல் உறவு வைத்துக் கொண்டால் நிச்சயமாக கடுமையான வலி உண்டாகும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Healthy sex Life, Sex, Sexual Health