Home /News /lifestyle /

அரை பீர் உங்கள் கை மற்றும் கண்ணுக்கான கனக்க்ஷனை பாதிக்கும் - ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!

அரை பீர் உங்கள் கை மற்றும் கண்ணுக்கான கனக்க்ஷனை பாதிக்கும் - ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!

மாதிரி படம்

மாதிரி படம்

எதிர்கால ஆய்வுகளில், மோசமான நோய்கள் அல்லது நச்சு வெளிப்பாடுகள் போன்ற பிற வகையான நரம்பியல் நிலைமைகளால் அவர்களின் கண் அளவீடுகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதை கவனிக்க ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

  • News18
  • Last Updated :
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும். இந்த நடைமுறை இந்தியாவில் மட்டுமல்ல பல உலக நாடுகளில் வழக்கமாக பின்பற்றப்படுகிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை பரிசோதிக்க இன்றைய தொழில் நுட்பம் நமக்கு உதவுகிறது. ஆனால்  மதுவை அளவிட பயன்படுத்தும் மீட்டர் எந்த அளவிற்கு துல்லியமானது என்பதை கூற முடியாது. உதாரணமாக ஒருவர் குறைந்த அளவு மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் காவலரிடம் இருக்கும் மீட்டரில் சரியான அளவுகள் காண்பிக்காது. 

உண்மையாக சொல்லப்போனால் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது உங்களுக்கு மட்டுமல்ல உங்களை சுற்றி உள்ள பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அந்தவகையில், ஒன்று அல்லது இரண்டு கிளாஸ் மது உங்கள் டிரைவ்விங்கை பாதிக்காது என்று நினைப்பவர்களுக்காக நாசா ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது 75 கிலோ எடையுள்ள ஒரு நபர், பாதிக்கும் குறைவான பீர் சாப்பிட்ட (minimal alcohol consumption) பிறகு, வாகனம் ஓட்டுதல் மற்றும் பிற நடவடிக்கைகளில் ஈடுபடும் போது கை-கண் (பார்வையுடன் கூடிய செயல்) ஒருங்கிணைப்பில் சிக்கல் ஏற்படுவதாக நாசா தலைமையிலான புதிய ஆராய்ச்சி ஒன்று எச்சரித்துள்ளது. 

வாகனம் ஓட்டுதல், பைலட்டிங் செய்தல் அல்லது கனரக இயந்திரங்களை ஓட்டுவது (driving, piloting, or working heavy machinery)  போன்ற தீவிரமான பார்வை மற்றும் விசுவோமோட்டர் கட்டுப்பாட்டை (visuomotor control) நம்பியிருக்கும் அதிக ஆபத்துள்ள மனித நடவடிக்கைகளில் குறைந்த அளவு ஆல்கஹாலை ஒருவர் உட்கொள்வதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த புதிய தகவல்களை நாசாவின் (NASA) கண்டுபிடிப்புகள் நமக்கு வழங்குகிறது. 

முந்தைய ஆய்வுகளில், வாகனம் ஓட்டுவதற்கான வரம்பை நெருங்கும் இரத்த ஆல்கஹால் செறிவுகளில் (Blood Alcohol Concentrations (BACs)) மட்டுமே கண் அசைவுகள் மற்றும் பார்வை பாதிக்கப்பட்டது என்று கண்டறியப்பட்டது, ஆனால் இப்போதைய ஆராய்ச்சியோ பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கலிஃபோர்னியாவில் (California) உள்ள நாசாவின் அமெஸ் ஆராய்ச்சி மையத்தை (NASA's Ames Research Center) தலைமையாக கொண்ட குழுவின் ஆய்வில், முதன்முறையாக கை-கண் ஒருங்கிணைப்பில் (hand-eye coordination) ஆல்கஹாலை குடித்த பின்னர் ஏற்படும் வியத்தகு மாற்றத்தை கண்டறிந்துள்ளது. 

தி ஜர்னல் ஆஃப் பிசியாலஜியில் (The Journal of Physiology) வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில் ஆய்வின் முதன்மை ஆசிரியரான டெரன்ஸ் டைசன் (Terence Tyson) , "எங்களின் இத்தகைய கண்டுபிடிப்புகள் குடிப்பழக்கத்தின் உள்நிலை அனுபவம் பெரும்பாலும் சென்சார்மோட்டர் ஒருங்கிணைப்பின் வெளிப்புற குறைபாட்டுடன் ஒத்துப்போகவில்லை என்பதற்கான எச்சரிக்கைக் கதையை வழங்குகிறது. இதை வேறுவிதமாகக் கூறுவதென்றால், பெரும்பாலான மக்கள் மது அருந்திய பிறகு தாங்கள் தள்ளாடாமல் ஸ்டெடியாக இருப்பதாக உணர்கிறார்கள், ஆனால் அவை உண்மை இல்லை" என்று அவர் கூறினார். 

ஒரு சிறிய அளவு ஆல்கஹாலை குடித்துவிட்டு வாகனம் ஓட்டும்போது டிரைவருக்கு லேசான தள்ளாட்டம் இருக்கும். டிரைவர் தான் கண்ட்ரோலாக இருப்பதுபோன்ற தோன்றும் என்று டைசன் மேலும் கூறினார். இதை பற்றி சரியாக முடிவெடுக்க ஆராய்ச்சியின் தன்னார்வலர்களின் கண் அசைவுகள், அவர்களின் பதில்கள் மற்றும் Blood Alcohol Concentrations (BACs) ஆகியவற்றை ஒரு நாளில் பல முறை அளவிட்டனர். சீரற்ற முறையில், தன்னார்வலர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு ஆல்கஹால் அடங்கிய கலப்பு பானம் அதிக (0.06 சதவீதம்) அல்லது குறைந்த (0.02 சதவீதம்) உச்ச பிஏசி அதாவது (Blood Alcohol Concentrations (BACs)) அளவை எட்டியது, 

Also read... ஊரடங்கால் பெண்கள் இந்த பிரச்சனைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்களாம்.. ஆய்வில் தகவல்..

இதனால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட நாளில் எவ்வளவு மதுபானத்தை குடித்தார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. கண்-இயக்கத்தின் வெவ்வேறு கூறுகள் மற்றும் பதில்களுக்கு உதவும் மூளையின் குறிப்பிட்ட பகுதிகளில் நரம்பியல் செயலாக்கத்தை மதிப்பிடுவதாக நிரூபிக்கப்பட்ட 21 வெவ்வேறு நடவடிக்கைகளை ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டனர். ஆய்வில் இருபாலரும் பங்கேற்றனர், பெரும்பாலும் 20 வயதிற்குட்பட்ட, வாரத்திற்கு சராசரியாக 1-2 மதுபானங்களை குடிக்கின்ற நபர்களை ஆய்வு சோதித்தது. மேலும் ஆய்வுக்கான பங்கேற்பாளர்கள் முந்தைய இரவில் முழு இரவு தூக்கத்தைக் கொண்டிருப்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதிசெய்தனர், சோதனைக்கு முன்னர் தொடர்ச்சியாக பல இரவுகள் ஆல்கஹால் மற்றும் காஃபின் நுகர்வு (alcohol and caffeine consumption) இரண்டிலிருந்தும் விலகுமாறு ஆய்வாளர்கள் அவர்களை கேட்டுக் கொண்டனர். 

எதிர்கால ஆய்வுகளில், மோசமான நோய்கள் அல்லது நச்சு வெளிப்பாடுகள் போன்ற பிற வகையான நரம்பியல் நிலைமைகளால் அவர்களின் கண் அளவீடுகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதை கவனிக்க ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர். லேசான குறைபாடுகளைக் கண்டறிவதற்கான ஆய்வில் இறங்க நாசா ஆர்வமாக உள்ளது. இதுபோன்று பல ஆய்வுகள் வந்தாலும் அரசுகள் கடுமையான சட்டத்திட்டங்களை கொண்டு வந்தாலும் தப்பித்துக் கொண்டிருக்கும் குடிமகன்கள்/குடிமகள்கள் தப்பித்துக் கொண்டு தான் இருப்பார்கள். மனிதர்களிடத்தில் மாற்றம் வரும் வரை இந்த நிலை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Alcohol, Beer

அடுத்த செய்தி