உடல் எடைக் குறைக்க நினைப்போர் ஒரு நாளைக்கு எத்தனை முறை சாப்பிடலாம் ..?

நீங்கள் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வேலை செய்கிறீர்கள் எனில் உங்களால் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை சாப்பிட முடியுமா?

உடல் எடைக் குறைக்க நினைப்போர் ஒரு நாளைக்கு எத்தனை முறை சாப்பிடலாம் ..?
உணவு
  • News18
  • Last Updated: September 3, 2019, 9:27 PM IST
  • Share this:
குறைவான அளவு உணவை 6 முறையாகப் பிரித்து சாப்பிடுவதால் வளர்ச்சிதை மாற்றம் அதிக கலோரிகளை எரிக்கும் என நம்பப்படுகிறது. இந்த ஆய்வானது அப்படி சாப்பிடுவதாலும் உடல் பருமனுக்கு வழிவகுக்கலாம் என்கிறது. ஒருவருக்கு சாத்தியமாகக் கூடிய சில விஷயங்கள் மற்றவர்களுக்கும் சாத்தியமாகலாம் என்பது முற்றிலும் முட்டாள்தனம் என்கிறது ஆய்வு.

இந்த டயட் திட்டம் பொய் என்ற பட்சத்தில் ஒரு நாளைக்கு எத்தனை முறைதான் சப்பிடுவது என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்.

உண்மையில் ஆய்வு என்ன சொல்கிறதெனில் உடல் எடைக் குறைப்பது என்பது அவர்களுடைய வாழ்க்கை முறை மற்றும் தேவைகளைப் பொருத்தது என்கிறது. அதாவது நீங்கள் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வேலை செய்கிறீர்கள் எனில் உங்களால் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை சாப்பிட முடியுமா? ஆக, எத்தனை முறை சாப்பிட வேண்டும் என்ற திட்டம் வெறும் திட்டம் மட்டுமல்ல. அதை பின்பற்றக் கூடிய சாத்தியக் கூறுகளும் இருக்க வேண்டும்.
அதேபோல் உங்கள் ஆற்றல் வெளியேறுவதைப் பொருத்தே உண்ணும் உணவும் செரிமாணமடையும், உடல் எடைக் குறையும். ஆக, உங்களுக்கு பசிக்கும்போது மட்டுமே உணவு உண்ண வேண்டும். டயட் திட்டம் சொல்கிறதே என பின்பற்றக் கூடாது. உங்கள் உடல் எதை எதிர்பார்க்கிறது என்பதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப செயல்பட்டாலே உடல் எடைக் குறையும். பசி உணர்வு இல்லாதபோது சாப்பிட்டால் அந்த உணவு செரிமாணமடைந்து கொழுப்பாக உடலில் தங்கிவிடும். அதுதான் உடல் பருமனுக்கு காரணம் என்கிறது ஆய்வு. எனவே பசிக்கும்போது மட்டுமே சாப்பிட வேண்டும். அது எத்தனை முறை இருந்தாலும் கவலை இல்லை என்கிறது.

அதேபோல் என்ன அளவு சாப்பிடுகிறீர்கள் என்பதை விட என்ன உணவு சாப்பிடுகிறீர்கள் என்பதே முக்கியம். ஆரோக்கியமான , உடல் ஏற்றுக்கொள்ளக் கூடிய உணவை சரியான நேரத்தில் உண்டு வந்தாலே உடல் எடை கட்டுக்கோப்பாக இருக்கும். ஆக நீங்கள் ஒரு நாளைக்கு 6 முறையும் சாப்பிடலாம், நான்கு முறையும் சாப்பிடலாம். ஆனால் அதை பசி எடுத்த பின்னரே உண்ண வேண்டும் என்கிறது ஆய்வு.


லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: September 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்