Home /News /lifestyle /

பெண்குயின் கார்னர் 7 : கொரோனா குணமடைந்த பின் எத்தனை நாட்கள் கழித்து திருமணம் செய்வது சரி..?

பெண்குயின் கார்னர் 7 : கொரோனா குணமடைந்த பின் எத்தனை நாட்கள் கழித்து திருமணம் செய்வது சரி..?

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர்

கொரோனாவைப் பொறுத்தவரை தனிமைப்படுத்துதல் அதாவது (14 நாட்கள்) முடிந்தபிறகு திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் இருமல் உடல்வலி, சோர்வு போன்ற அறிகுறிகள் இருப்பின் , அவற்றிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு வந்த பிறகு திருமணம் செய்து கொள்வது தான் சரியான முடிவு.

மேலும் படிக்கவும் ...
ஏப்ரல், மே 2021 இரண்டாம் அலையின் தீவிர பாதிப்பில் முழு வீச்சில் முழு முடக்கம். கோயில்கள் மூடப்பட்டிருந்தன. பெரும்பாலான கூட்டங்கள் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஏராளமான திருமணங்கள் தள்ளிவைக்கப்பட்டன.

அவ்வாறு தள்ளிவைக்கப்பட்ட கல்யாணங்களில் ஒன்று தான் கவிதாவினுடையதும். மே மாதம் நடக்க வேண்டியது, டிசம்பர் மாதத்திற்கு மாற்றப்பட்டது.

மே மாதத்தில் கவிதாவின் பெற்றோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். சரியான சமயத்தில் எடுத்த சிகிச்சைகளால் தப்பிப் பிழைத்தனர். இப்பொழுது ஆரோக்கியமாக உள்ளனர்.

கவிதாவும் ஒரு தவணை தடுப்பூசியை எடுத்துக் கொண்டுவிட்டார். அவருடைய வேலைப்பளுவால் இரண்டாவது தவணை தடுப்பூசி போடுவது தள்ளிக்கொண்டே போயிற்று. அதுவே அவருக்கு ஒரு பெரிய பிரச்சினையை கொண்டு வரப்போகிறது என்பதை அறியவில்லை.

கவிதா நிறைய பயணம் மேற்கொள்ள வேண்டிய வேலையில் இருப்பவர். அக்டோபர் மாதத்தில் ஒரு பயணத்தை முடித்து வந்த 4- 5 நாட்களிலேயே காய்ச்சல் தலைவலி உடல்வலி என்று ஆரம்பித்து Rt- PCR சோதனை செய்ததில் கொரோனா இருப்பது உறுதியானது.

ஒரு தடுப்பூசி எடுத்துக் கொண்டதால் கவிதாவிற்கு கொரோனா அந்த அளவுக்கு தீவிரமாகவில்லை. சிடி ஸ்கேன் செய்து பார்த்தபோது நுரையீரலை 10- 20% தாக்கியிருந்தது. ஒரு வாரம் மருத்துவமனையில், பிறகு 14 நாட்கள் வரை தனிமைபடுத்துதல் என்று இருந்தார்.மீதம் 20 நாட்களே திருமணத்திற்கு உள்ள நிலையில் கவிதா இப்போதிருக்கும் நிலையில் திருமணம் செய்வது உசிதமா? அல்லது திருமண தேதியை தள்ளி வைக்க வேண்டுமா??? என்று கவிதாவிற்கும் அவர் பெற்றோருக்கும் சந்தேகம் எழுந்தது.

 

கவிதாவும் அவர் பெற்றோரும் இணைய வழி மருத்துவ ஆலோசனையை எடுத்துக்கொண்டார்கள்.

கவிதாவிடம் பேசியபோது "தனக்கு காய்ச்சல் எதுவுமில்லை. ஆனால் உடல் வலி, உடல் சோர்வு மற்றும் இருமல் இருப்பதாக கூறினார். ஆனால் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் உபயோகித்து சோதிக்கும் பொழுது ஆக்ஸிஜன் சரியாக, 99% இருப்பதாக கூறினார். அது போல காணாமல் போன சுவையும், நுகரும் உணர்ச்சியும் இன்னும் மீளவில்லை. கொரோனா டெஸ்ட் செய்ததிலிருந்து 20 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது.

பெண்குயின் கார்னர் 6 : கன்னித்திரை என்றால் என்ன..? பெண்ணின் கற்பை தீர்மானிக்க இது அவசியமா..?

கொரோனாவைப் பொறுத்தவரை தனிமைப்படுத்துதல் அதாவது (14 நாட்கள்) முடிந்தபிறகு திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் இருமல் உடல்வலி, சோர்வு போன்ற அறிகுறிகள் இருப்பின் , அவற்றிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு வந்த பிறகு திருமணம் செய்து கொள்வது தான் சரியான முடிவு. ஒரு சிலருக்கு உடல் சோர்வு ஒரு மாதம், இரண்டு மாதத்தில் இருந்து ஆறு மாதங்கள் வரை கூட நீடிக்கிறது. சுவை மற்றும் நுகர்வு பொதுவாக ஓரிரு மாதங்களில் மீண்டு விடும் அவ்வாறு வரவில்லை எனில் அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம். சரியான உணவு, ஓய்வு மற்றும் சிகிச்சை இவர்களை விரைவாக நோயிலிருந்து விடுபட்டு முழுமையான ஆரோக்கியம் பெற உதவுகிறது.கவிதாவும் அவர் பெற்றோரும் கவிதாவிற்கு நோயின் அறிகுறிகள் எல்லாம் மறைந்து ஒரு மாதம் கழித்து திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தனர்.

இது அவர்களுக்கும் , மணமகனின் குடும்பத்தாருக்கும் ஏமாற்றத்தையும் செலவையும் அளிப்பதாக இருந்தாலும் கவிதாவின் உடல் நலனை கருத்தில் கொண்டு இரு குடும்பத்தாரும் அதை ஏற்றுக்கொண்டனர்.

ஆம் அது தான் சரி!!! கவிதாவின் மணவாழ்க்கை நல்ல படியாக துவங்க , ஆரோக்கியமான ஆரம்பம் அவசியம்..

கொரோனா 2வது தடுப்பூசி மிக மிக முக்கியம். விடுபட்டிருந்தால் இன்றே சென்று செலுத்திக்கொள்ளவும். உங்கள் பாதுகாப்பு வளையத்தை முழுமையாக்குங்கள்.

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Corona impact, Corona positive, Marriage, பெண்குயின் கார்னர்

அடுத்த செய்தி