முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / மேக்கப் சாதனங்கள் கூட கர்ப்பம் தரிப்பதை பாதிக்குமா..? மருத்துவர் தரும் ஷாக் ரிப்போர்ட்...

மேக்கப் சாதனங்கள் கூட கர்ப்பம் தரிப்பதை பாதிக்குமா..? மருத்துவர் தரும் ஷாக் ரிப்போர்ட்...

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர் 51 : மேக்கப் பொருட்களை அதிகமாக உபயோகப்படுத்துபவர் அல்லது பணி நிமித்தமாக அதிகமாக கையாளும் வர்களுக்கு, அவற்றிலிருந்து வெளிப்படக்கூடிய பல்வேறு வேதிப்பொருட்கள், முக்கியமாக தாலேட்ஸ் (pthalates) மூலம் உடலில் ஏராளமான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

நந்தினி, ரமேஷ் இருவரும் அன்று மருத்துவமனைக்கு வந்திருந்தனர். திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. நந்தினி ஒப்பனை கலைஞர். ஒரு பல கிளைகளைக் கொண்ட பிரபலமான அழகு நிலையத்தில் பணியாற்றுகிறார். திருமணம் ஆனதிலிருந்து இருவருமே குழந்தை வேண்டுமென்று முடிவு செய்துவிட்டனர். ஆனால் இரண்டு வருடங்களாக நந்தினி கர்ப்பம் அடையவில்லை‌ .

இருவரும் ஏராளமான கேள்விகளோடு வந்திருந்தனர் வந்திருந்தனர்.

1.இரண்டு வருடமாக எங்களுக்கு கருத்தரிக்காமல் இருப்பதற்கு என்ன காரணமாக இருக்கும் டாக்டர்??

2. நான் மேக் அப் அணிவதால் மற்றும் மேக்கப் பொருட்களை அதிகமாக உபயோகப்படுத்துவதால் எனக்கு ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டு இருக்குமா?

3. என்னுடன் வேலை செய்தவர் குழந்தை வேண்டுமென்று சிகிச்சை எடுக்கும் போதே, வேலையை விட்டு விட்டாள். அதுபோல நானும் வேலையை விட்டால் தான் எனக்கு கரு தங்குமா!?

என் ஆலோசனை :

நந்தினி உங்கள் கேள்வியில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன.

முதல்: உங்களுக்கு ஏன் கருத்தரிக்கவில்லை?

இரண்டாவது: உங்களுடைய வேலையால் கருத்தரிப்பதற்கான சிக்கல் உண்டாகி இருக்குமா ? என்பதாகும்.

சர்க்கரை நோய் உள்ள பெண்கள் கருத்தரிக்க தாமதமாகுமா..? குழந்தையின்மையை உண்டாக்குமா..? மருத்துவர் விளக்கம்

முதல் பகுதியைப்பார்ப்போம்...

நந்தினிக்கும் ரமேஷிற்கு அடிப்படை ரத்தப் பரிசோதனைகள் ,ஸ்கேன் மற்றும் கருக்குழாயில் அடைப்பு இருக்கிறதா என்ற பரிசோதனைகள் மற்றும் விந்தணு பரிசோதனை, முதலியவற்றை செய்து முடிப்போம். அதில் வரும் முடிவுகளிலிருந்து ஏதேனும் கண்டுபிடிக்கக்கூடிய பிரச்சனை இருக்கிறதா ? என்பது தெரிந்து விடும்.

இரண்டாவதாக...

மேக்கப் பொருட்களை அதிகமாக உபயோகப்படுத்துபவர் அல்லது பணி நிமித்தமாக அதிகமாக கையாளும் வர்களுக்கு, அவற்றிலிருந்து வெளிப்படக்கூடிய பல்வேறு வேதிப்பொருட்கள், முக்கியமாக தாலேட்ஸ் (pthalates) மூலம் உடலில் ஏராளமான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.  அதில் ஒரு சிக்கலாக ஹார்மோன்கள் பாதிக்கப்படலாம். அதனால் மாதவிடாய் கோளாறுகளும் அதை தொடர்ந்து கருத்தரிப்பதற்கான வாய்ப்பு குறையும்.

இது போன்ற சிக்கல்கள் ஆண்களுக்கும் இந்த வேதிப்பொருட்களால் உண்டாகும். அழகுக்கலை நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு இது போன்ற வேதிப்பொருட்களை கையாள்வதற்கு அதிகமான வாய்ப்பு இருப்பதால் முக்கியமாக தலை முடிக்கு ஹேர் ஸ்ப்ரே, ஷாம்பூ, நெயில் பாலிஷ், நெயில் பாலிஷ் ரிமூவர் (நகப்பூச்சு நீக்கி) போன்றவற்றில் இந்த வேதிப்பொருளானது மிக அதிக அளவில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உதட்டுச் சாயம் மற்றும் சில அழகு பொருட்களில் காரீயம் (லெட்) அதிகமான அளவில் இருப்பதால் நம்முடைய நரம்புகளை பாதிக்கலாம்.

அதிகமாக உடற்பயிற்சி செய்தால் கர்ப்பம் தள்ளிப்போகுமா..? மருத்துவர் விளக்கம்

கருவில் இருக்கும் குழந்தையைக் கூட இந்த வேதிப்பொருட்கள் பாதித்து கருக்கலைதல், குழந்தைக்கு பிறவி குறைபாடுகளை உண்டாக்குதல் மற்றும் குறைமாத பிரசவம் போன்ற சிக்கல்களை உண்டாக்கலாம்.

ஆனால் இது குறித்த 100% தெளிவான ஆராய்ச்சிகள் எதுவும் இதுவரை செய்யப்பட்டு பதிவு செய்யப்படவில்லை.

ஆனால் இது போன்ற வேதிப்பொருட்கள் மேக்கப் சாதனங்களில் மட்டுமல்ல. ஏராளமான பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்படும் உணவுகள் மற்றும் வீடுகளில் சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் பல்வேறு வேதி பொருட்களிலும் உள்ளதை இந்த ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. குறிப்பாக செயற்கையான மணமூட்டிகளில் மனிதர்களுக்கு கெடுதல் செய்யக்கூடிய வேதிப்பொருட்கள் கலந்துள்ளன.

"முதலில் எல்லா டெஸ்ட்களையும் எடுத்து பார்த்து விடுவோம், நந்தினி!!!" என்று கூறினேன். ஒரு மாத அவகாசத்தில் தேவைப்படும் எல்லா அடிப்படை பரிசோதனைகளையும் பார்த்ததில் இருவருக்கும் பிரச்சனைகள் எதுவும் இல்லை என்று தெரிந்தது.

நந்தினி தன் வேலையை விட்டுவிட்டு இணையத்தின் மூலமாக மேக்கப் வகுப்புகளை எடுக்கத் தொடங்கிவிட்டார்.

இப்போது நந்தினி, "டாக்டர்!! இதுவரை என் உடம்பிற்குள் சென்ற கெமிக்கல்ஸின் பாதிப்பு எப்போது சரியாகும்??" என்றார்.

சராசரியாக மூன்று மாதங்கள் ஆகலாம் என்று கூறினேன்.

இருவருக்குமே ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் போலிக் ஆசிட் போன்ற மருந்துகளை மூன்று மாதங்கள் வரை எடுக்கும்படி பரிந்துரைத்தேன்.

கணவரின் சிகரெட் பழக்கம் கருவையும் பாதிக்குமா..? Passive Smoking பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை...

புதியதாக வாங்கிய காய்கறி பழங்களை இருவருமே எடுத்துக் கொள்ளத் தொடங்கினர் .வீட்டிலேயே சமைத்து உண்ணத் தொடங்கினர். ஒரு 5 கிலோ வரை நந்தினி எடையும் குறைத்து விட்டார்.

மூன்று மாதங்கள் கழித்து கருவுறுவதற்கான சிகிச்சைகளை துவங்கினோம். இரண்டு மாத முடிவில், ரத்தப்பரிசோதனை அவர் கருவுற்று இருப்பதை காண்பித்தது.

நந்தினியும் ரமேஷூம் குழந்தை வேண்டும் என்பதை முக்கியமானதாக கருதி, பரிந்துரைத்த வாழ்க்கை முறை மாற்றங்கள் , மருந்துகளை மிகச்சரியாக பின்பற்றியதில் எதிர்பார்த்த பலன் கிடைத்தது.

மிகுந்த மகிழ்ச்சியுடன் இனிப்புகளோடு என்னை வந்து சந்தித்தனர் . மகிழ்ச்சியானவர்களை பார்க்கும்போது நமக்கும் மகிழ்ச்சி தானே!!!

top videos

    மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com

    First published:

    Tags: Makeup, Pregnancy Chances, Pregnancy Risks, பெண்குயின் கார்னர்