டைப் 2 நீரிழிவால் உண்டாகும் பக்கவிளைவுகளை தவிர்க்க இதை தினசரி பின்பற்றுங்கள்..!

டைப் 2 நீரிழிவு நோய்

குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக்கொண்டால், பக்க விளைவுகளால் பாதிக்கப்படுவது குறைவாக இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

  • Share this:
உணவு முறை மற்றும் வாழ்க்கைச் சூழலால் டைப் 2 நீரிழிவு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுவோரின் எணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டைப் 2 நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. அண்மைக்காலமாக மாத்திரைகள் மூலம் கொலஸ்ரால் மற்றும் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்பட்டாலும், இன்சுலின் ஹார்மோன் பிரச்சனைக்கு தீர்வு கொடுப்பதில்லை.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் அறுவை சிகிச்சை அல்லது உணவுக்கட்டுப்பாடு மூலம் உடல் எடையைக் குறைத்தால் டைப் 2 நீரிழி நோய்க்கான ஆபத்து குறையும் என தெரியவந்துள்ளது. உடல் எடையை குறைக்கும்போது இன்சுலின் சுரப்பு சீராகி, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தபடுவதாக தெரிவித்துள்ளது. இதன்மூலம் டைப் 2 நீரிழிவின் ஆபத்தில் இருந்து தப்பிக்க முடியும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே உணவுக் கட்டுப்பாடு மூலம் டைப் 2 நீரிழிவு நோய் பாதிப்பை குறைக்கலாம் என ஆய்வாளர்கள் கூறியிருந்தாலும், அண்மையில் வெளியாகியுள்ள ஆய்வு ஒன்று அதனை மேலும் உறுதிபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. அதாவது குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக்கொண்டால், பக்க விளைவுகளால் பாதிக்கப்படுவது குறைவாக இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உணவு மாற்று பரிசோதனையில் மூன்றில் ஒருவருக்கு இந்த சோதனை வெற்றிபெற்றதாகவும், குறைந்த கார்போஹைட்ரேட் உணவு பரிசோதனையில் 5ல் ஒருவர் முழுமையாக நிவாரணம் பெற்றதாகவும் ஆய்வு கூறியுள்ளது.



உடல் எடையை குறைக்கும் முயற்சியில் தொடர்ந்து 2 ஆண்டுகள் வரை பயிற்சிகளை மேற்கொண்டால், டைப் 2 நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களுக்கு ஏற்படும் பக்களவிளைகளில் இருந்து குறிப்பிடத்தகுந்த நிவாரணத்தை பெற முடியும் கூறப்பட்டுள்ளது. குறைந்த கலோரி உணவுகள் மற்றும் கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக்கொண்டவர்கள் ஒருவருடத்தில் 5 விழுக்காடு பேர் நிவாரணம் பெற்றதாக தெரிவித்துள்ள புதிய ஆய்வு, நடுத்தர அளவிலான டையட்டை பின்பற்றியவர்கள் ஒரு வருடத்திற்கு பின்பே நிவாரணத்தை பெற்றதாக தெரிவித்துள்ளது.

உடல் எடையை குறைக்க இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..20 கிலோ வரை குறைக்கலாமாம்..!

முந்தைய ஆய்வுகளுடன், புதிய ஆய்வை ஒப்பிடுவது, இந்த ஆய்வில் ஈடுபட்ட ஆய்வாளர்களுக்கு பெரும் சவாலாக இருந்துள்ளது. ஏனென்றால், முந்தைய ஆய்வுகளில் பல்வேறு வரையறைகளின் அடிப்படையில் தரவுகள் வரிசைப்படுத்தப்பட்டிருந்தன. அந்த வரையறைகளைக் கொண்டு, புதிய ஆய்வை ஒப்பிடுவது சரியாக இருக்குமா? என்பது ஆய்வாளர்களுக்கு கேள்வியாக இருந்துள்ளது. உதாரணமாக, குறைந்த கார்போஹைட்ரேட் உணவு மற்றும் எடை குறைப்பு இல்லாமல் கூட ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும் என கூறப்பட்டுள்ளது.



அதில் இருந்து வேறுப்பட்ட முடிவுகளை ஆய்வாளர்கள், வெளியிட்டது என்னவென்றால் அதிக கார்போஹைட்ரேட் உணவுகளை உட்கொள்ளும்போது ரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதை நிரூபித்துள்ளனர். குறைவான கார்போஹைட்ரேட் உணவு எடுத்துக்கொள்ளும்போது அத்தகைய பாதிப்பு இல்லை எனக் கூறியுள்ளனர். குறைவான கலோரி மற்றும் கார்போஹைட்ரேட் உணவுகளை நீண்டகாலமாக எடுத்துக்கொள்பவர்கள், நீரிழிவு நோய் அபாயத்தில் இருந்து நிச்சயம் தப்பிக்க முடியும் எனவும், டைப் 2 பாதிப்பில் இருப்பவர்கள் பக்கவிளைவுகளில் இருந்து நிவாரணம் பெற முடியும் எனவும் கூறியுள்ளனர்.

 
Published by:Sivaranjani E
First published: