கர்ப்பம் தறித்து, குழந்தை பெறுவது என்பது ரோலர் கோஸ்டர் விளையாட்டைப் போன்று பல்வேறு சாகசங்கள் நிரம்பிய பயணமாக இருக்கும். ஒருபக்கம் கர்ப்பம் அடைந்தது குறித்தும், புதிய உயிரை பெற்றெடுக்க போகிறோம் என்பது குறித்தும் மகிழ்ச்சி இருந்தாலும், மற்றொரு பக்கம் உடல் சோர்வு, மனச்சோர்வு, கவலை என பல விஷயங்கள் வாட்டி வதைக்கும்.
கருவின் உள்ளே குழந்தை வளர்ச்சி அடையும் போது, அதற்கேற்ப வயிறு பெரிதாகுவது உள்பட உடல் சார்ந்த பல சிரமங்களை பெண்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மற்றொரு பக்கம், உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் வேறு தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கும். குறிப்பாக, கர்ப்ப காலத்தின் 9ஆவது மாதத்தில் இந்த உடல் மாற்றங்கள் பெரிய அளவில் இருக்கும்.
குழந்தையை பெற்றெடுத்த பிறகு, பெரும் ஆவல் மற்றும் மகிழ்ச்சி தோன்றும். அதே சமயம், உடல் வலி, களைப்பு போன்றவை ஏற்படுகிறது. எந்தவித காரணமும் இல்லாமல் உடலில் அடிக்கடி உணர்வுகள் மேலோங்கும். மருத்துவ ரீதியாக இதனை மகப்பேறுக்கு பிறகான மனச்சோர்வு எனக் குறிப்பிடுகின்றனர். புதிய தாய்மார்களில் பெரும்பாலானோர் இந்தச் சூழலை கடந்து வருகின்றனர் என்ற நிலையில், அதில் பலர் இது என்னவென்று உணர்வது கூட இல்லை.
ஃபோஸ்ட்பார்டம் மற்றும் பேபி ப்ளூஸ் :
மகப்பேறுக்கு பிறகு பெண்கள் எதிர்கொள்ளும் உடல் சார்ந்த மாற்றங்கள், களைப்பு மற்றும் உடல் சோர்வு உள்ளிட்டவை ஃபோஸ்ட்பார்டம் மற்றும் பேபி ப்ளூஸ் என இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகின்றன. அடிப்படையில் இவை இரண்டுமே ஒன்றுபோல தோன்றினாலும், உண்மையில் இவை வெவ்வேறானவை ஆகும். பேபி ப்ளூஸ் என்பது குழந்தை பிறப்புக்கு பிறகு 1 முதல் 2 வாரங்களுக்கு நீடிக்கக் கூடிய கவலை அல்லது மூட் அவுட் நிலை ஆகும். காரணமே இல்லாமல் சில சமயம் மகிழ்ச்சியும், சில சமயம் தனிமை உணர்வு, கவலை போன்றவையும் தொற்றிக் கொள்ளும்.
Vaginal Yeast Infection : குழந்தைகளுக்கு பிறப்புறுப்பில் ஏற்படும் பூஞ்சைத் தொற்று : அறிகுறிகளும்... சரி செய்யும் வழிகளும்...
ஃபோஸ்ட்பார்டம் இன்னும் நிலையிலும் இதே பாதிப்புகள் இருக்கும். பசியின்மை, தேவையின்றி மிகையாக அழுகை வருவது, காவலை, குழந்தையுடன் பிணைப்பு ஏற்படாமல் இருப்பது, கோபம் வருவது போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.
எவ்வளவு காலத்திற்கு ஃபோஸ்ட்பார்டம் நீடிக்கும் :
பொதுவாக குழந்தை பிறந்த உடனேயே இந்தப் பிரச்சினை தொடங்கி விடும். கர்ப்ப காலத்தில் தொடங்கும் இந்த சிக்கல் ஓராண்டுக்கு மேல் நீடிக்கும். அதாவது குழந்தை பிறகும் கூட 4 முதல் 6 மாதங்களுக்கு இந்தத் தொந்தரவுகளை பெண்கள் எதிர்கொள்வர். சில பெண்களுக்கு குழந்தை பிறந்த பின்னர் 3 ஆண்டுகள் வரையிலும் கூட இந்த தொந்தரவு நீடிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இயல்பாக மன ரீதியான பிரச்சினை உள்ள பெண்கள், சிக்கலான தருணத்திற்கு இடையே குழந்தை பெற்றெடுத்த பெண்கள், குடும்ப ஆதரவு கிடைக்காத பெண்கள் போன்றோருக்கு இந்தப் பிரச்சினை ஏற்படக் கூடும். ஆகவே, இதை கவனமாக கையாள வேண்டும்.
என்ன செய்ய வேண்டும்?
ஃபோஸ்ட்பார்டம் பிரச்சினை இருந்தால் குழந்தையுடன் தாய்மார்களுக்கு பிணைப்பு ஏற்படாது. இது மட்டுமல்லாமல் கணவர், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் கொஞ்சம் வெறுப்பு ஏற்படக் கூடும். குறிப்பாக, குழந்தை பிறப்புக்கு 2 அல்லது 3 வாரங்கள் கடந்த பிறகும் இந்தப் பிரச்சினை நீடித்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். கணவர் அல்லது நண்பர்களிடம் கலகலப்பாக பேசத் தொடங்குவதன் மூலமாகவும் இந்தப் பிரச்சினையை கடந்து வர முடியும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.