• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • சளி மற்றும் காய்ச்சல் தொற்று அறிகுறிகள் எவ்வளவு நாட்கள் நீடிக்கும்? விரைவில் குணமாக நீங்கள் செய்ய வேண்டியது!

சளி மற்றும் காய்ச்சல் தொற்று அறிகுறிகள் எவ்வளவு நாட்கள் நீடிக்கும்? விரைவில் குணமாக நீங்கள் செய்ய வேண்டியது!

வைரஸ் தொற்று

வைரஸ் தொற்று

2020-21 ஆம் ஆண்டில் ஃப்ளூ தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை ‘வழக்கத்தை விட மிகவும் குறைந்துள்ளது’ என்று கூறுகிறது. மக்கள் அனைவருமே கொரோனா தொற்று பாதிப்பை தவிர்க்கும் மற்றும் குறைக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

  • Share this:
சளி மற்றும் காய்ச்சல் பெரும்பாலும், இன்ஃப்ளூயன்சா என்ற வைரஸ் தொற்றால் ஏற்படுகிறது. பொதுவாக, ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை இதன் அறிகுறிகள் நீடிக்கும். சளி தானே, காய்ச்சல் அறிகுறி தானே என்று பலரும் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாத நிலை தான் பரவலாக இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுக்க ஏற்படுத்திய பாதிப்பும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளும், சளி அல்லது காய்ச்சல் தொற்று ஏற்பட்டால் உடனே கவனிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. சளியும், இருமலும், காய்ச்சலும் கடந்த சில மாதங்களில் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வரை, கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு முழுமையாக நீங்காத நிலையில், பல்வேறு வேரியன்ட்டுகளாக உருமாறி வரும் வைரஸ், கூடுதல் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு உணர்வை விதைத்துள்ளது.

இதற்கிடையே, நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) வெளியிட்டுள்ள அறிக்கை, 2020-21 ஆம் ஆண்டில் ஃப்ளூ தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை ‘வழக்கத்தை விட மிகவும் குறைந்துள்ளது’ என்று கூறுகிறது. மக்கள் அனைவருமே கொரோனா தொற்று பாதிப்பை தவிர்க்கும் மற்றும் குறைக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

ஆனால், இந்த ஆண்டு இன்ஃப்ளூயன்சா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. எனவே, ஃப்ளூ தொற்று பாதிப்பில் இருந்து உங்களைப் பாதுகாக்க நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.



நோய்த்தொற்று அறிகுறிகள் எவ்வளவு நாட்கள் நீடிக்கும்?

இன்ஃப்ளூயன்சா வைரஸ் நம்முடைய மூக்கு, தொண்டை மற்றும் நுரையீரல் ஆகியவற்றை பாதிக்கிறது. காய்ச்சல், குளிர், தலைவலி, தொண்டை வலி மற்றும் வீக்கம், தொண்டை கரகரப்பு, சளி, மற்றும் உடல் வலி ஆகியவை இந்த வைரஸ் தொற்றின் அறிகுறியாகும்.

நீங்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நாளிலிருந்து, நான்கு நாட்களுக்குள் உங்களுக்கு அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கலாம். இந்த அறிகுறிகள் 5 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கலாம். நீங்கள் ஃப்ளூ தடுப்பூசி செலுத்தியிருந்தால், உங்கள் அறிகுறிகள் ஓரிரு நாட்கள் மட்டுமே நீடிக்கும்.

ஒவ்வொரு நாளும் என்ன வகையான அறிகுறிகள் தோன்றும் :

சளிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட அனைவருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் தோன்றாது. அதே போல, அறிகுறிகளின் தாக்கமும் மாறுபடும். ஒவ்வொரு நாளும் உங்களுக்கு என்ன வகையான அறிகுறிகள் தோன்றும் என்பதைப் பற்றிய விவரங்கள் இங்கே.

2 தடுப்பூசிகளை அடுத்தடுத்த டோஸாக போட்டு கொள்வது பாதுகாப்பானதா..? ICMR விளக்கம்!

முதல் நாள்: நீங்கள் தொற்று பாதிப்புக்கு வெளிப்பட்டால், அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பே வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் சாத்தியம் உள்ளது. முதல் நாள் அறிகுறிகள் எதுவும் தோன்றாது. பெரும்பாலும் நீங்கள் சாதாரணமாக உணர்வீர்கள். ஆனால், அதிகமாக வேலை செய்யும் செய்தால், அசௌகரியமாகவும், உடல் வலி மற்றும் குளிரையும் உணரக்கூடும்.

இரண்டாவது முதல் நான்காவது நாள் வரை: தொற்று பாதிப்புக்கு உள்ளான இரண்டாம் நாள், வழக்கமாக சளி ஏற்பட்டால் காணப்படும், தொண்டை வலி, கரகரப்பு, வீக்கம், மூக்கடைப்பு, மற்றும் உடல் வலி ஆகிய அறிகுறிகள் தோன்றும். இரண்டு முதல் நான்கு நாட்கள் வரை, தொற்று அறிகுறிகள் அதிகரிக்கும்.



ஐந்தாவது நாள் முதல் ஆறாவது நாள் வரை: நான்கு நாட்களுக்குப் பிறகு, இயல்பாகவே நீங்கள் நன்றாக உணரத் தொடங்குவீர்கள். சரியாம மருத்துவ பராமரிப்பு, உணவு மற்றும் ஓய்வடன், அறிகுறிகள் குறையத் தொடங்கும்.

தொற்று பாதிப்பு ஏற்பட்ட ஐந்தாவது நாளிலும், உங்கள் அறிகுறிகள் குறையவில்லை என்றால், மருத்துவரை அணுக வேண்டும்.

ஏழாவது நாள்: பெரும்பாலானவர்களுக்கு, ஏழாவது நாளில் அனைத்து அறிகுறிகளும் கிட்டத்தட்ட காணாமல் போய்விடும். நீங்கள் உங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம்.

உங்கள் அறிகுறிகள் குறைந்து, ஆனால் முழுமையாக நீங்காத பட்சத்திலும், நீங்கள் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

உங்களுக்கு உடலில் இந்த பிரச்சனையெல்லாம் இருந்தால் பாதாம் சாப்பிடவே கூடாதாம்..!

சிகிச்சைகள் :

பொதுவாகவே, சளி மற்றும் இருமல் பாதிப்பு ஏற்பட்டால், அறிகுறிகள் தீவிரமாக இல்லாத வரை, வீட்டிலேயே பராமரித்துக் கொள்ளலாம். நிறைய தண்ணீர் குடிப்பது, தேவையான ஓய்வு எடுப்பது, உடலை வெப்பமாக வைத்திருப்பது, திரவ உணவு உண்பது ஆகியவை அறிகுறிகளின் தாக்கத்தைக் குறைக்கும். அறிகுறிகள் தீவிரமாக இருந்தால், ஆன்டி-வைரல் மருந்துகளை மருத்துவர் பரிந்துரையின்படி எடுத்துக்கொள்ளலாம்.

மேலும், கோவிட் பாதிப்பு மற்றும் பிற வைரஸ் பாதிப்பைத் தடுக்க, நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம். தடுப்பூசிகள் செலுத்திக் கொள்வது வைரஸ் தொற்றை தடுக்காது ஆனால் தொற்று பாதிப்பு ஏற்பட்டால், அதனை எளிதாக நிர்வகிக்க முடியும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: