வயது முதிர்வு மற்றும் புற்றுநோயில் ஜன்க் டிஎன்ஏ வரிசையின் பங்கு

மாதிரிப்படம்

மரபணு என்பதை பலரும் அறிந்திருந்தாலும், மரபணுக்கள் எப்படி செல்களை வயது முதிரச் செய்கிறது என்பது மர்மமாகவே இருக்கிறது.

  • Share this:
மனித உடல் என்பது மிகவும் சிக்கலான முறையில் வடிவமைக்கப்பட்ட இயந்திரம். நம் உடல், கோடிக்கணக்கான செல்களால் உருவானது. தலை முதல் கால் வரை செல்கள் இருக்கின்றன.

செல்களுக்கு வயதாகும் போது, நம் உடலும், வெளித்தோற்றமும் முதிர்வு அடைகின்றன. செல் உருவாக்கம், வளர்ச்சி, செல்கள் இறப்பு, இறந்த செல்கள் வெளியேற்றம் ஆகியவை ஒரு சுழற்சியாக நடைபெறுபவை. இந்த செல்கள் வளர்ந்து பல்கி பெருகுவது குறையும் போது, அல்லது நிற்கும் போது, செல்கள் முதிர்வடைகிறது.

இதற்கான காரணத்தில் முதலாதவதாக இருப்பது மரபணு என்பதை பலரும் அறிந்திருந்தாலும், மரபணுக்கள் எப்படி செல்களை வயது முதிரச் செய்கிறது என்பது மர்மமாகவே இருக்கிறது. சமீபத்தில், வாஷிங்டன் மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழுவினரின் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வில், டி.என்.ஏ வில் இருக்கும் VNTR2-1 என்ற பகுதி, டெலோமிரேஸ் மரபணுவை பாதிக்கும் ஒரு காரணியாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகளை, ப்ரொசீடிங்க்ஸ் ஆஃப் நேஷனல் அகாடெமி ஆஃப் சயின்சஸ் வெளியிட்டது. டெலோமிரேஸ் மரபணு, ஒரு சில குறிப்பிட்ட செல் வகைகளில், செல் முதிர்வு அடைவதைத் தடுக்கும் தன்மை கொண்டது என்று கூறப்பட்டிருந்தது. மருந்தகம் மற்றும் மருந்தியல் கல்லூரியின் பேராசிரியரான ஜியூ ஷூ தலைமையில், ஒரு குழுவினர் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

மேலும், டெலோமிரேஸ் மரபணு, நேரடியாக டெலோமிரேஸ் உற்பத்தியை பாதிக்கும் டெலோமிரேஸ் என்சைம் வெளியேற்றத்தைக் தடுக்கிறது என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. புற்றுநோய் செல்களில், மரபணுக்களை நகலெடுக்கும் அதே அளவில், டெலோமிரேஸ் ரீசெட் செய்யப்படுவதை டெலோமிரேஸ் மரபணுக்கள் உறுதி செய்கின்றன. புற்றுநோய் செல்களில், மரபணுக்களை நகலெடுக்கும் அதே அளவில், டெலோமிரேஸ் ரீசெட் செய்யப்படுவதை டெலோமிரேஸ் மரபணுக்கள் உறுதி செய்கின்றன.இதன் அடிப்படையில் தான் புற்றுநோய் செல்கள் பெருகி, டியூமர் கட்டிகளாக மாறுகின்றன.

ஆய்வின் கண்டுப்பிடிப்பை உறுதி செய்யும் வகையில், ஜியூ கூடுதலாக ஒரு பரிசோதனையை மேற்கொண்டார். அதில், செல்களில் புரதத்தைக் குறிக்காத, மீண்டும் மீண்டும் ஒரே மரபணுவால் கட்டமைக்கப்பட்ட 50 சதவிகித ஜினோமை குறிப்பிட்டிருந்தார். இந்த வரிசை மரபணுக்கள், குப்பை மரபணு, அதாவது ஜன்க் டிஎன்ஏ, அல்லது ஜினோமின் டார்க் மேட்டர் என்று கூறப்படுகிறது. இந்த ஜன்க் டிஎன்ஏ வை ஆய்வு செய்வது மிகவும் கடினமானது. எனவே, டெலோமிரேஸ் மரபணுவை மேம்படுத்தி, செயல்பாட்டை அதிகரிக்க வைக்கும் பகுதிகளில் மட்டுமே ஆய்வு வலியுறுத்தி காட்டுகிறது.

தொடர்ச்சியாக நடத்தப்பட்ட பல்வேறு சோதனைகளின் அடிப்படையில் இந்த கண்டுபிடிப்புகள் அமைந்துள்ளன. மேலும், மனித மரபணு வரிசையிலிருக்கும் புற்றுநோய் செல்களில் இந்த டிஎன்ஏ வரிசையை நீக்குவது, டெலோமியர்சை சுருக்குகிறது என்று கண்டரியபப்ட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Ramprasath H
First published: