Home /News /lifestyle /

கணவன்,மனைவி ஐடி துறையில் வேலை... லேப்டாப் பயன்படுத்துவது கர்ப்பமாகும் வாய்ப்பை தடுக்குமா?

கணவன்,மனைவி ஐடி துறையில் வேலை... லேப்டாப் பயன்படுத்துவது கர்ப்பமாகும் வாய்ப்பை தடுக்குமா?

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர் 40 : மடிக்கணினியை லேப்டாப்பை மடியிலேயே வெகு நேரம் வைத்து உபயோகிப்பதால் ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைலதாக சில ஆய்வுகள் சொல்கின்றன.

ரஞ்சித்தும், ராதாவும், ஐடி துறையில் பணிபுரிபவர்கள். திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது.

ராதா தான் துவங்கினார். டாக்டர்!!! ஆறு மாதமா குழந்தைக்காக ட்ரை பண்றோம். இப்ப வரைக்கும் சக்சஸ் ஆகல . என்ன பிரச்சனையா இருக்கும்? ஒருவேளை நாங்க நிறைய நேரம் லேப்டாப்ல ஒர்க் பண்றதால ஹீட் அதிகமாகுமா? அதனால் தான் பேபி ஃபார்ம் ஆகலயா? ஒரு ரீசனா இருக்கலாமா?

இப்போது ரஞ்சித் நடுவில் புகுந்தார். "வீட்டுக்கு வந்த பிறகு கூட மொபைல் தான்,டாக்டர்! நைட்டு ஒரு மணி வரைக்கும் சோசியல் மீடியா பார்த்துட்டு அதுக்கப்புறம் தான் தூங்குறா. கேட்டா எனக்கு தூக்கம் வரலன்னு சொல்றா!!!"

டாக்டர் இவர் மட்டும் ரொம்ப ஒழுங்கா!! இவரு வொர்க் ஃப்ரம் ஹோம் . எந்த நேரமும் லேப்டாப்ப மடியில வச்சுக்கிட்டு நைட்டு பெட் மேல வச்சுகிட்டு பார்த்துகிட்டே இருக்காரு. ஆபீஸ்ல போய் வேலை பார்க்கும்போது ஒரு ரெஸ்ட்ரிக்ஷன் இருந்துச்சி. இப்ப ஒர்க் ப்ரம் என்று சொல்லி வீடு ஒர்க்கிங் ஹோமாகவே ஆயிடுச்சு. ரெஸ்ட் என்றதே எங்களுக்கு எல்லாமே போயிடுச்சு.
என்றார்.இப்போது ரஞ்சித்தின் முறை.

"டாக்டர்!! ஆபீஸ்ல இவளுக்கு ஒர்க் ஸ்டேஷன் வாங்க சொல்லி கொடுத்த பணத்துல டைனிங் டேபிள் வாங்கி போட்டு வச்சிருக்கா!. எப்ப பாத்தாலும் லேப்டாப் எடுத்துட்டு பெட்டு மேல இல்லனா கிச்சன் டேபிள் மேல வச்சுகிட்டு வேல செஞ்சிட்டு இருக்கா!. அப்புறம் பார்த்தீங்கன்னா முதுகு வலி கழுத்து வலின்னு எந்த நேரமும் , பாம் எடுத்து போட்டுட்டே இருக்கா!"

இப்படி இருவரும் மாறி மாறி குற்றப்பத்திரிகை வாசித்து தள்ளி விட்டனர்.

பெண்குயின் கார்னர் 38 : கர்ப்பம் தரிக்க ஓய்வு அவசியமா..? அளவுக்கு மீறிய ஓய்வும் ஆபத்து...

பெரும்பாலான ஐ. டி. தம்பதிகளின் வீடுகளில் நடப்பதை தான் ராதாவும் ரஞ்சித்தும் கூறினர்.

பெரும்பாலான இளைஞர்கள் மொபைல் மேதைகளாகவும் மடிக்கணினி மன்னர்களாகவும் இருப்பது இந்த காலத்தினுடைய கட்டாயமாக இருக்கிறது. ஆனால் ஏராளமான பிரச்சனைகள் அதனால் வருகின்றன.மடிக்கணினியை லேப்டாப்பை மடியிலேயே வெகு நேரம் வைத்து உபயோகிப்பதால் ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைலதாக சில ஆய்வுகள் சொல்கின்றன. பொதுவாகவே ஆண்களுக்கு விந்து பைகள் ,டெஸ்டிஸ், உடலுக்கு வெளியே இருப்பதற்கான காரணம், அதற்கு தேவையான வெப்ப நிலை உடலின் வெப்பநிலையில் இருந்து குறைவாகும். மடிக்கணினியை வெகு நேரம் மடிவிலேயே வைத்து வேலை செய்து வெப்பநிலை உயர்வதால் இவ்வாறு விந்தணு உற்பத்தி பாதிக்கலாம் என்று இந்த ஆய்வுகள் கூறு கின்றன.

பெண்குயின் கார்னர் 39 : 40 வயதை கடந்துவிட்டால் குழந்தை பெற்றுக்கொள்ள IVF சிகிச்சைதான் தீர்வா..?

தசைகளும் அதிகப்படியான வழக்கத்திற்கு மாறான இழுபடுதலுக்கு உள்ளாவதால் பெரும்பாலானவர்களுக்கு கழுத்து வலி தோள்பட்டை வலி கைகள் வலி மணிக்கட்டு முதுகு வலி இடுப்பு வலி போன்ற பிரச்சனைகள் வர ஆரம்பிக்கின்றன. இதற்காக எடுத்துக் கொள்ளும் மருந்துகளால் மேலும் வயிறு சம்பந்தப்பட்ட அல்சர் பிரச்சனைகள் அஜீரண கோளாறுகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.மொபைல் உபயோகத்தையும் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். அதிக நேரம் அதுவும் பெரும்பாலும் படுத்துக்கொண்டு மொபைல் உபயோகிப்பது அதிலும் தூங்குவதற்கு முன்பாக பல மணி நேரம் மொபைல் உபயோகம் கண்டிப்பாக அவர்களை பலவிதத்திலும் பாதிக்கிறது மேலும் தூக்கம் பாதிப்படையும் .அத்துடன் நம் உடலுடைய எல்லா ஹார்மோன்களும் சரிவர இயங்குவதற்கு மெலடோனின் என்ற ஹார்மோன் தேவைப்படுகிறது. இது பினியல் சுரப்பியிலிருந்து வெளியாகும். இது நமது உடல் இருட்டான இடத்தில் இருக்கும் போது தான் சுரக்கும். இரவில் கண்களில் படும் வெளிச்சம்.

பெண்குயின் கார்னர் 37 : கருத்தரிக்க கருமுட்டை வெளிவரும் நாளை எப்படி கண்டறிவது? அறிகுறிகள் எப்படி இருக்கும்?

மெலடோனின் சுரப்பை பாதிப்பதால் பல்வேறு ஹார்மோன்களின் சீரற்ற சுரப்பிற்கு வழிவகுக்கும். மனிதர்களில் இல்லாவிட்டாலும், பாலூட்டும் விலங்குகளில் இனப்பெருக்கத்திற்கு இந்த மெலடோனின் ஹார்மோன் முக்கியம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது .

மாதவிடாய் கோளாறுகளையும், கர்ப்பம் தரிக்கவும் பிரச்சனையை ஏற்படுத்தலாம். ஆண்களுக்கும் இந்த மெலடோனின் ஹார்மோன் முக்கியமாகும். அதனால் அவர்களுக்கும் , விந்தணுக்களின் தரமும், எண்ணிக்கையும் பாதிக்கப்படலாம்.

ராதா ரஞ்சித்திற்கு என்ன சிகிச்சை? அடுத்த வாரம் தொடரும்.

மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Laptop, Pregnancy Miscarriage, பெண்குயின் கார்னர்

அடுத்த செய்தி